உளவியல் ஆய்வுகளை நிகழ்த்துவதில் முன்னோடியாகத் திகழ்கின்ற ராய் பாமைஸ்டரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிவியல் கட்டுரையாளரான ஜான் டீர்னியும் இணைந்து, மக்கள் கைவசப்படுத்திக் கொள்ளத் துடிக்கின்ற ‘மன உறுதி’ என்ற பண்புநலனைப் பற்றிய நம்முடைய புரிதலைப் புரட்டிப் போடுகின்ற பல புதிய கருத்துகளை இந்நூலில் முன்வைக்கின்றனர். நவீன ஆய்வுகள் மற்றும் வல்லுநர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ள இந்நூல், நம்முடைய வலிமைகளின்மீது எவ்வாறு கவனத்தைக் குவிப்பது, சபலங்களை எவ்வாறு எதிர்ப்பது, நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சரியான திசையில் திருப்புவது போன்றவை குறித்தப் படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இலக்குகளை நிர்ணயிக்கும்போது எவ