இமயமலை இந்தியாவின் மணிமுடி. கன்யாகுமரி முதல் விரிந்திருக்கும் இப்பெருநிலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் லட்சக்கணக்கானவர்கள் இமயமலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளாக செல்பவர்கள் உண்டு, துறவிகளாகி ஞானம் தேடி செல்பவர்களும் உண்டு. இமயமலை இன்று வரைக்கும் மனிதனால் பார்க்கப்படாத ஒரு நிலம் என்றால் அது மிகையல்ல. அதிலுள்ள மலைச்சிகரங்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான இடங்களிலேயே மனிதர்கள் இதுவரைக்கும் சென்றிருக்கிறார்கள். தொண்ணூறு சதவீத சிகரங்களுக்கும் பெயர்கள் கிடையாது. மிக அண்மைக்காலத்தில் தான் எண்கள் போடப்பட்டிருக்கின்றன. நம் நாட்டிலேயே இருக்கும் ஒரு மாபெரும் நிலப்பரப்பு நமக்கு முற்றிலும் தெரியாத ஒன்றாக உள்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
குழந்தை இலக்கியத் தலைப்புக்காக அருகில் உள்ள பொது நூலகத்தில் சிறுவர்கள் பிரிவில் தேடிய போது அதில் ஜெயமோகன் என்று ஆசிரியர் பெயர் பார்த்த போது, சில சமயங்களில் ஒரு தலைப்பில் உள்ள புத்தகங்கள் பிற அலமாரியில் இருப்பது உண்டு அப்படி எண்ணித்தான் இந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.
சிறார் நாவல் என்றதும் எனக்கு ஆச்சரியம். யானை டாக்டருக்குப் பின்னர் வெண்முரசு மூலமாகவே ஜெமோவுடனான் என் வாசிப்பு பயணம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, வெண்முரசில் மூன்று வயது பாலகர்களே முலைகளைப் பற்றி முன்னூறு முறை பேசுமாறு எழுதியிருக்கிறார்.
ஆனால் அது பெரியவர்களுக்கான புத்தகம் என்பதாலும், ஒரு அனுபவத்தை வைத்து இன்னொரு புத்தகத்தை எடை போடக்கூடாது என்பதாலும் எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே இந்த புத்தகத்தை எடுத்து வந்தேன்.
இரண்டே நாட்களில் இருநூறுக்கு மேல் பக்கங்கள் வாசித்து முடிக்குமளவுக்கு விறுவிறுப்பான எழுத்து நடை. சிறார் புத்தக வரிசையில் இதற்கு முந்தைய புத்தகம் ‘பனிமனிதன்’ இருக்கிறது என்று புத்தகம் வாசித்த போது தெரிந்து கொண்டேன்.
ஆனால் அதை வாசிக்காமல் இந்த புத்தகம் தனியாகவும் வாசிக்க முடியும். சிறுவர்களுக்கான துப்பறியும் நாவல். இமாச்சலப் பிரதேசம் ஸ்பிடி சமவெளியில் கதை தொடங்குகிறது.
ஒரு பௌத்த மடத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபடும் சமயத்தில், ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று கால்களை கட்டிப்பிடித்து அமர்ந்த வண்ணம் கண்டுபிடிக்கப்படுகிறது.
அதை அடுத்த நாள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஊர்மக்கள் நினைத்திருக்கும் வேளையில், அன்றிரவே அதை திருட ஒரு கும்பல் வருகிறது.
அவர்களிடமிருந்து அதை காப்பாற்ற அதைப்பற்றி அறிந்த ஊரிலே முதியவரான சோடாக் என்பவரின் நாய்க்குட்டி நாக்போ உதவி செய்கிறது. ஆனால் அவர் அந்த திருடர்களிடம் பெற்ற அடியால் சில நாட்களிலேயே இறந்து விடுகிறார்.
இந்த வழக்கை விசாரித்து அதை திருட வந்தவர்கள் யார், அந்த மம்மியின் முக்கியத்துவம் என்ன என்று கண்டுபிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ பயிற்சியாளர் பாண்டியன் அழைத்து வரப்படுகிறார். அவர் சாகசங்கள் நிறைந்தது தான் முதல் புத்தகம் போல.
அவருடன், அந்த திருடர்களில் ஒருவனை வரைந்து காட்டிய, திருடர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் மகன் ஏழு வயது சிறுவன் நோர்பாவும், நாய்க்குட்டி நாக்போவும் தேடுதல் வேட்டையில் இணைந்து கொள்கிறார்கள். அந்த திருட்டின் பின்புலத்தில் சீனா இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
தீவிரமாக செல்லும் கதையில் நகைச்சுவைக்காக நாக்போ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாக்போ பேசுவது நோர்பாவுக்கு மட்டுமே புரிகிறது. இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் குழலை எளிமையாக்குகிறது.
வெண்முரசில் ஒருவரை ஒருவர் அன்பாக கூப்பிட்டுக் கொள்ளும் இடத்தில் ‘மூடா’ என்ற சொற்பிரயோகத்தை பார்க்க முடியும்.அதே போல் மனிதர்கள் அனைவரையும் ‘முட்டாள்கள்’ என்று நாக்போ அழைக்கிறது.
நாய்கள் மனிதர்கள் செயல்களை பார்த்து கிண்டலடித்தால் எப்படி இருக்கும் என்று வாசிக்க சுவாரசியமாக இருந்தது.பல நேரங்களில் எனக்கு நாக்போவுக்கும் நோர்பாவுக்கும் இடையில் குழப்பம் வந்தது.
அவர்கள் விசாரணைக்கு உதவி பெற டாக்டர் நாகேந்திர பிஸ்வாஸைத் தேடி, மணாலியில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்து லடாக் நேர் பயணிக்கிறார்கள். வழியில் ஒரு கும்பல் அவர்களுக்கு ஆபத்து விளைவிக்க முயல்கிறது.
அதில் தப்பிப் பிழைத்து, அந்த கூட்டத்தில் ஒருவன் மூலம் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து, அவரை காப்பாற்ற ஆவன செய்கிறான் பாண்டியன்.
அவர் உயிர் தப்பினாலும் அவரின் ஆராய்ச்சியில் பெரும் பகுதி தீக்கிரையாகிறது. நரேந்திர பிஸ்வாஸ் மூலமாக அந்த மம்மி குறித்தும் அதன் கையில் இருந்த பழைய காலத்து சீன எழுத்துக்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார்கள்.
மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள அவர்கள் பயணம் வடகிழக்கு மாநிலங்களினூடாக தொடர்கிறது. வழியில் எதிர்பாராத விதமாக பனிமலையில் மோதி அவர்கள் செல்லும் வான்ஊர்தி விபத்துக்குள்ளாகிறது. ஆனால் தப்பித்து விடுகிறார்கள்.
அவர்கள் தேடிச் செல்லும் விஷயம் குறித்து வழியில் ஆங்காங்கே நிறைய தகவல்கள் கிடைக்கிறது.ஒரு புதிருக்கு விடை காண பல இடங்களுக்கு சுற்றித் திரிகிறார்கள். அதே போல் அவர்களைத் தொடர்ந்து ஒரு கும்பலும் வருவதை உணர்ந்து கொள்கிறார்கள்.
அவர்களுடைய தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைத்து, பூட்டானுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்கிறார்கள். அங்கே அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் தலைவனிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவனிடம் இருந்து ஒரு ரகசியத்தை அறிந்து கொள்கிறார்கள். அவனுக்கு உதவ ஒரு புதிருக்கு பதில் சொல்கிறார்கள்.
அவனிடம் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள், இடையில் அவர்களுக்கு என்னென்ன இடையூறுகள் வருகிறது அதை எப்படி தங்கள் சாமர்த்தியத்தின் மூலமாக வென்று வருகிறார்கள் என்பது தான் கதை.
ஆனால் இதற்கிடையில் பௌத்தத்துக்கு முந்தைய பான் சமயம், அதைச் சார்ந்த நம்பிக்கைகள், கதைகள், அதன் வரலாறு, அதன் தெய்வங்கள்,அதை வழிபடும் ஒரு கூட்டம், அவர்கள் புரட்சி, அவர்கள் எழுச்சி என்பவற்றைக் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
அவற்றைக் குறித்த தகவல்கள் வாசிக்க வாசிக்க ஆழமாக செல்கிறது. ஒருகட்டத்தில் எந்த கடவுளை , எந்த எதிரியை, யார் ஆதரவாளர்கள் இவர்கள் போன்ற குழப்பங்கள் எழுகின்றன.
பெரியவர்களுக்கு இதில் குழப்பம் வரும்போது, குழந்தைகள் எப்படி இந்த சிக்கலான கதைக்களத்தை புரிந்து கொள்வார்கள் என்ற வினா எழுகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு அட்டைப் பெட்டியில் கதை கட்டமைக்கப்பட்ட இடங்கள் சார்ந்த, மனிதர்கள் , கருவிகள் சார்ந்த பல தகவல்கள் நிறைந்திருந்தது.
மேலும் நான் மிகவும் ரசிக்கும் ஜெமோவின் வர்ணனைகள் குழந்தைகளுக்கேற்ப அழகாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள அதீத தகவல்கள் கொஞ்சம் அயர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டு பண்ணுகிறது.
புத்தகம் நெடுகிலும் இருக்கும் ஓவியங்களும், புகைப்படங்களும் வாசிப்பை மேலும் அழகாக்குறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பயணம் போய்விட்டு வந்த உணர்வு புத்தகம் முடியும் போது வருகிறது.
அந்த மலைச் சிகரங்களை, பனி படர்ந்த காலைகள், அதற்கு பழகிப்போன மனிதர்கள் என்று அங்கே சென்று அந்த வெள்ளி நிலத்தை கண்டு வர வேண்டும் என்று ஆசை வருகிறது.