Jump to ratings and reviews
Rate this book

கரிசல் காட்டுக் கடுதாசி

Rate this book
'கரிசல் கடுதாசிகள்’ ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்கின்றன.. என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் ரசிகமணியின் பேரன் தீப. நடராஜன் அவர்கள். உண்மைதான்; தோண்டத்தோண்ட வந்துகொண்டுதானிருக்கிறது!

272 pages, Paperback

First published January 1, 2007

17 people are currently reading
296 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
34 (42%)
4 stars
32 (40%)
3 stars
8 (10%)
2 stars
3 (3%)
1 star
3 (3%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
May 23, 2021
கி.ரா வை வாசித்து முடித்த பின்னும் அவர் காட்டும் மண்ணில் இருந்து மீண்டு வர முடியவில்லை ... எந்த காலத்திலும் பல முறை படித்தாலும் சுவாரஸ்யம் குறையாத சோர்வு தராத எழுத்து நடை ...அவர் காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை ...

முதல் பாகத்தில், தான் சந்தித்த மனிதர்கள், கேட்ட கதைகள் ,மழை, குண்டர்கள், நம்பிக்கைகள்,சாமிகள், சுதந்திரத்திற்கு முன்பும்,பின்பும் தன் கிராமத்தில் நடந்த வினோதங்கள், மாற்றங்கள் etc...

இரண்டாம் பாகத்தில் சமூக அக்கறையும், தன் மக்களுக்கு அதிகாரிகள் செய்த அவலத்தையும், சாதியைப் பற்றிய சிந்தனைகள், வரலாறுகள்......
ஆகிய அனைத்தையும் கடந்து மீண்டு வர முடியவில்லை... அப்படிப்பட்ட கரிசல் எழுத்து கி.ரா உடையது

தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பு.
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
August 6, 2020
கரிசல் காட்டு கடுதாசி.
கி. ராஜநாராயணன்.
அன்னம் வெளியீடு.

கரிசல் கதைகளுக்கு சிறப்பம்சம் சேர்த்த
கி. ரா வின் மிக முக்கியமான படைப்பாக இதனை கூறலாம். ஏனென்றால், நாவல்கள், சிறுகதைகள் தாண்டி இது ஒரு வகையில் கடிதங்கள் எழுதுவது மாதிரி தான், இதனோடு புனைவுகள், நிகழ்வுகள், சமூக அக்கறை கொண்டு முன்வைக்கப்பட்ட உண்மைகளை என இந்த புத்தகத்தின் பெரும் சுமையை என்னால் உணர முடிந்தது.

இதில் முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரு பிரிவுகளாய் பிரித்து எழுதியுள்ளார்.
முதல் பாகத்தில், ஒரு கிராமத்து இளைஞன் எதையெல்லாம் கடந்து வந்திருப்பான் என்பதை சிறு வயது தொட்டு முதிர்ந்த வயது வரை என கற்பனை கொஞ்சம் சேர்த்து அழகாய் விரிவுபடுத்தியுள்ளார்.
ஊரோரம் இருக்கும் மரங்கள், சுடலைமாடன் கோயில், வயதானவர்கள் வாசனையுடன் கிடக்கும் வீட்டுச்சுவர், பஞ்சாயத்தில் பைசல் ஆகும் வழக்குகள், நாய்கள் என துல்லியமானவை, கவனித்தவை என அனைத்தையும் இவரது வார்த்தைகளின் மூலம் கண்முன்னே காட்சிகளாய் பதியவிட்டார்.
எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் நிறைய உள்ளன, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இவர் நாய்களை பற்றியும், சாமியாடி திரியும் பெண்ணையும் பற்றி கூறும் உண்மை கதைகள் மனதின் ஆழத்தில் குடிபுகுந்து விட்டன்.

நாய் பேச்சை பற்றி கூறுகையில்,
" மனுசன் பொய் சொல்லுவானாம். ஆகவே, அவனிடமிருந்து ராஜா தன் ராஜாங்கத்தில் நடக்கிற தப்பிதங்களைக் கேட்டுக் தெரிந்து கொள்ள முடியாதாம். மாறுவேஷத்தில் நகர் சோதனைக்கு வரும் ராஜா, நாய்கள் பேசுவதிலிருத்து உண்மையைத் தெரிந்து கொள்வாராம். பாட்டி எது சொன்னாலும் கேட்க
ரசமாகத்தானிருக்கிறது!. ' என முடிப்பார் இந்த பகுதியை, இந்த நாய் பகுதியில் நல்ல நாய்க்கும், கெட்ட நாய்க்கும், மனுஷப்பயலுக்குமான உறவை இவரது எழுத்து வழியே படிக்கையில் பல கோணங்களில் முடிகிறது என் பார்வை.

இன்னொரு பகுதியில், கிராமத்து மக்களின் நம்பிக்கைகளை பற்றி எழுதியிருப்பார், சுடலைமாடன் கோயில் அருகே ஒரு சாவலுக்காக இரவு நேரத்தில் சென்றிருக்கையில் பார்த்த நிகழ்வுகள். இது ஒரு வித சிலிர்ப்பை தந்தது.
' பேராதரவாக நிற்கும் பேயையும், பிசாசையும், ஜடாமுனியையும், சாமியையும் கிடையாது என்று நான் அம்பலப்படுத்துவதைப் போல பைத்தியக்காரத்தனம் வேற உண்டா? ' என இவர் கூறுவது முற்றிலும் உண்மையே. சில சமயங்களில், மூடநம்பிக்கைகளின் வாயிலாக அன்பு பரிமாற்றம் நிகழ்கிறது.

இந்த முதல் பகுதிகளில் இப்படி மனதினுள் பதிந்த நிகழ்வுகள் அடுக்கிவைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பகுதியை படிக்கையில் வியப்பு தானிருந்தது.

ஒரு எழுத்தாளனுக்கும், கோபத்திற்குமான காதல் சமூக அக்கறையினால் அல்லது தனிப்பட்ட மனித உரிமைக்காக அல்லது இவனுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அரும்பி உச்சம் என்ற ஒன்றை நெருங்காது முடிவிலியாய் தொடரும் என்பது எழுதப்படாத ஒரு பழமொழியோ, நீதிமொழியொ.
இப்படித்தான் இருக்கிறது, இந்த இரண்டாம் பகுதிகள் அனைத்தும், இவரக்கு ஏற்பட்ட அழைக்கழிப்பு, இன்னல்கள், மறுக்கப்பட்ட நீதி என அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒழுங்கற்றத் தன்மை மீதான கேள்விகளை நியாமான முறையில் கதைகளாகவும், வரலாறாகவும் எழுதியிருக்கிறார்.

வரலாறு என்று வரும் போது, தெள்ளந்தெளிவாய் ஒவ்வொரு விஷயத்தையும் வட்டார வழக்கிலே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இதை தாண்டி, ' அண்ணாச்சி ' என்ற ஒருவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி தனக்கும், கு. அழகிரிசாமிக்கும், இவருக்குமான ஒரு உறவினை குணாதிசயங்களின் வாயிலாக எழுதி நட்பிற்கு மேலும் அழகு சேர்த்துவிட்டார்.
அண்ணாச்சி என்பவர் காங்கிரசை ஓதுக்கி கம்யூனிசத்தில் சேர முற்படுவது, யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் புத்தகங்களை சேர்த்து வைப்பது என அனைத்திற்கும் ஏதோ ஒரு காரண காரியங்கள் இருப்பது அழகு தான் என்று சொல்ல தோன்றுகிறது.

கி. ராவின் மனதினுள் இன்னும் நிறைய நபர்கள், நிகழ்வுகள்குறித்தானவை வார்த்தைகளாக உலாவுகிறது போல, அதனால் தான் இப்புத்தகத்தின் முடிவில், தன்னுடைய ' என்னோடு பழகியவர்களும் நானும் ' என்ற இன்னொரு புத்தகத்தை நமக்காக குறிப்பிட்டு சொல்லி முடித்திருக்கிறார்.
இதனையும் வாசிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

கி. ரா கிராமத்தில் வாழ்ந்த நினைவுகளை வைத்து எழுத்தின் வாயிலாக நன்றாக அசை போட்டுக் கொண்டார் என சொல்லலாம்.
எனக்கும், என்னுடைய கிராமத்து நினைவுகள் அசை போட தோன்றுகிறது.

#சிவசங்கரன்
108 reviews3 followers
June 4, 2023
கடிதத்தின் அன்பு! இன்னும் ஈர்ப்பு குறைவதில்லை கடிதங்கள் மீது ஆன மோகம்! எப்படி அன்பு வேனும் என்றால் நான் வண்ணதாசனை நாடுகிறேனோ, கடுதாசி, கிராமிய கதைகள் என்றால் கி.ரா தான்‌.🖤 கரிசல் காட்டு கடுதாசி... யாராவது கடுதாசி போடுங்க......

புத்தகம்: கரிசல் காட்டு கடுதாசிகள்
எழுத்தாளர்: கி.இராஐநாராயணன்

எப்பொழுதெல்லாம் நான் கரிசல், கிராமம் நோக்கி போக வேண்டும் என்றாள் நான் கி.ரா வை தான் நாடுவேன்.
அவரது உலகம் என்றுமே, எதார்த்த மனிதர்கலாள் நிரம்பியது.

இந்த கடுதாசிகள் அவரது மக்கள், இடைசெவல், கோவில்பட்டி ஊர் சார்ந்த மண் மனம் ததும்புகிறது.
15 reviews3 followers
February 28, 2023
கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கரிசல்காட்டு கடிதாசி(1988) ஒரு கட்டுரை தொகுதி. இத்தொகுதி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகம் ஒன்றில் 16 கட்டுரைகளும் இரண்டாம் பாகத்தில் 7 கட்டுரைகளும் அடங்கியுள்ளது.

முதல் தொகுதியில் வரும் கட்டுரைகள் அனைத்தும் அவர் கிராமத்தில் உள்ள தெரிந்த மனிதர்களை பற்றியும் மிக நெருக்கமானவர்களை பற்றியும்,அவர் உண்மையில் பார்த்த சம்பவங்களை பற்றியும் தொகுத்து எழுதியுள்ளார்.

இரண்டாம் தொகுதியில் அவர் சமுதாயத்தில் பார்த்த சில மகத்தான மனிதர்களைப் பற்றியும் நம் சமுதாயத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் அழுக்குகளை பற்றியும் விமர்சிக்கும் தோணியில் ��ழுதப்பட்ட கட்டுரைகளாகும்.

இந்த இரண்டாம் தொகுதி எனக்கு மிகவும் பிடித்த மற்றும் அனைவரும் கண்டிப்பாக படிக்கக்கூடிய கட்டுரை “வீரனுக���காக மக்கள் எழுப்பிய ஞாபகார்த்தம்” மற்றும் என்னை மிகவும் பாதித்த அண்ணாச்சியின் கதை “அண்ணாச்சி”.

“வீரனுக்காக மக்கள் எழுப்பிய ஞாபகார்த்தம்” ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்(1861 முன்பு) தலையாரி ஒருவன் கோவில்பட்டி அருகில் பணத்தை சமர்ப்பிக்க நடந்து பயணப்படுகிறான்.துணைக்காக தனது இஸ்லாமிய நண்பனையும் அழைத்து செல்கிறான் போகும் வழியில் அவன் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள் இருவரும்.
அவனை மறுபடியும் தூக்கிக்கொண்டு தன் உயிரும் போவதற்கு முன்னால் எப்படியும் அவனை அவன் கிராமத்தில் சேர்க்க வேண்டும் என்று மரண ஆவேசத்துடன் நடந்து மங்கம்மா சாலையில் ஒரு மரத்தடியில் அவனை இறக்கி வைக்கிறான் . அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் விவரத்தை சொல்லி பெரியவர்களை அழைத்து வருமாறு கூறிவிட்டு அவனும் தலையாரியும் அங்கே இறந்து விடுகிறார்கள். மக்கள் அவர்கள் நினைவாக அந்த இடத்தை கடக்கும் போது சிறு கற்களை போட்டு கற்குவியல் நினைவிடமாக மாறுகிறது. ஒரு சில நூற்றாண்டுகள் கடந்து சாலை மேம்பாட்டிற்காக இந்த கற்குவில்கள் அதிகாரிகளின் மூலம் சாதாரணமாக அகற்றப்படுகிறது. தன் எழுச்சியாக மக்கள் எழுப்பிய ஞாபகம் அர்த்தம் எப்படி சர்வ சாதாரணமாக அகற்றப்படுகிறது இதுவே அயல் நாடாக இருந்தால் அது ஒரு நினைவிடமாக மாற்றப்பட்டிருக்கும் என்று இந்த கட்டுரை மூலம் விவரிக்கிறார்.

“அண்ணாச்சி” கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சாதாரணமான ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தவர். அண்ணாச்சி மிக எளிய காந்தியவாதி. கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகிரிசாமி இருவரின்நண்பர் மற்றும் வயதில் மூத்தவர். ராஜநாராயணன் அவரிடம் பழகிய நாட்கள் அவரின் நினைவோடையாகவே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார்.

தங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு எப்படி அவர் உதவினார் மற்றும் அவரிடம் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களையும் நெகிழ்வாக எழுதியுள்ளார்.

மனிதர்கள் மீது மிகவும் நேசம் நேர்மையையும் கொண்ட மனிதராக வாழ்ந்த அண்ணாச்சி தன் கடை எதிரில் ஒருவன் மழைக்காலத்தில் மின் கம்பியில் அடிபட்ட போது அவனைக் காப்பாற்றும் முயற்சியில் தானும் உயிரிழக்க நேரிடுகிறது. எந்த நேரத்திலும் சுயநலவாதியாக இல்லாமல் பிறர் மனது நோகாமல் காந்திய வழியில் வாழ்ந்த அண்ணாச்சியின் வாழ்க்கையை இலக்கியத்தில் ஆவணப்படுத்த முயற்சியை செய்து இருக்கிறார் கி.ரா.

தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உதவி மட்டும் செய்ய எண்ணி வாழ்ந்த மனிதன். ஒரு சாதாரண மனிதன் காந்தியவாதியாக எப்படி வாழ்ந்தார் இந்த கட்டுரையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
This entire review has been hidden because of spoilers.
39 reviews7 followers
June 14, 2020
One of the finest records of the time..The language is so simple yet so profound...it takes wisdom of a sage to take things on the stride and the brilliance of a genius to make it a laughable affair.. The tales are still relevant and retains its life after all these years since it’s been written ,making it a classic. Must read ..
Profile Image for Arjun Siva.
39 reviews1 follower
November 4, 2025
பல வருடங்கள் கழித்து மிகவும் ரசித்து வாசித்த தமிழ் நூல்.

இணையதளமும், யூட்யூபும் பிரபலம் ஆவதற்கு முன் பல தமிழ் பத்திரிக்கைகளும், நூல்களும் வாசித்த பழக்கம் இருந்தது. இப்பொழுது பெரும்பாலான நேரம் கைபேசியிலேயே செலவழிகிறேன். மீண்டும் வாசிப்பு பழக்கத்தை கொண்டுவர முயற்சிக்கிறேன். தமிழ் நூல்கள் படிக்க நன் பெரிதாக விரும்பியதில்லை. ஆனால் இந்த 'கரிசல் காட்டு கடுதாசி' மேலும் நிறைய தமிழ் நூல்களை வாசிக்க தூண்டியது. கீ.ரா வின் மற்ற நூல்களையும் வாய்ப்பு கிடைத்தவுடன் கட்டாயம் படிப்பேன்.

கடுதாசியில் கீ.ரா தன் வாழ்வில் பார்த்த பல இயல்பான சம்பவங்களை மிகவும் ரசிக்கும்படி நகைச்சுவையோடு வர்ணித்திருந்தார். வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்களோடு எளிமையாக எழுதியிருந்தார். அதில் பல சொற்களுக்கு எனக்கு அர்த்தம் புலப்படவில்லை. ஆனாலும் ஸ்வுரஸ்யம் குறையவில்லை. இணையத்தில் எல்.எல்.எம்-களினால் உருவாக்கபட்ட குப்பைகளை படித்து வெறுத்த நிலையில் எளிய நடையில் நெல்லை தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளை படிப்பது திருப்தியாக இருந்தது.

நிறைய கட்டுரைகள் அந்த காலத்தில் அரசாங்கத்தின் திறமையின்மையும், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் பற்றி இருந்தது. இன்றும் பல விஷயங்கள் மாறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நான் அதை மாற்ற எதுவும் செய்யவில்லை என்பதால் குறை கூறவும் பிடிக்கவில்லை. 'அண்ணாச்சி' பற்றிய கட்டுரைகள் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நினைவூட்டி, அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷ தருணங்களை பாராட்ட உணர்த்தியது.
11 reviews
August 5, 2021
Stories, events and experience of Ki.Ra. His writing style is engaging as always.
He can tell a sad event with a pinch of humor. 2nd half of the book is his own experiences with government departments and its officers. Felt so true even after 3 decades after the book has been written.
Profile Image for Vimal Krishna Kumar .
10 reviews
August 23, 2025
தாத்தா : நான் என் அனுபவத்த சொல்லுதேன். நீ கேக்கறதுன்னா கேட்டுக்க.
30 reviews1 follower
October 4, 2019
This was written in the local dialect of Tamil. Really a combination of all the elements such as comedy, tragedy, social awareness, interesting thoughts...etc. Must read.
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.