இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (வெ. ராமலிங்கம் பிள்ளை) (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழில் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடிய கவிஞர். விடுதலைப் போராட்ட வீரர். நாவலாசிரியர். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
மிக அருமையான தன்வரலாறு. மிக முக்கியமாக நடை அருமையாக துலங்கி வந்துள்ளது. உரை நடை வெகுவாக முன்னேறிவிட்ட இப்போது இது சதாரணமாக தோன்றலாம் ஆனால் அக்காலத்திய மற்ற புத்தகங்களை பார்க்கும்போது இந்த நடை மிக நவீனமாகவே உள்ளது அல்லது இது மிகவும் பிற்காலத்திய பிரதியா என்பதும் தெரியவில்லை.
நீண்ட நாட்கள் இருந்துள்ளார் வரலாற்று நாயகர்கள் என்று நினைக்கும் அனைவருடனும் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.
மிக அதிகமாக என்னை கவர்ந்தது அக்காலத்திய தமிழ் ஆர்வம் அனைவருமே தமிழ்மேல் பற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்லாமல் ஆழ்ந்த அறிவும் இருந்திருக்கிறக்கிறது என்று தெரிகிறது.
எல்லாப்பெயர்களுமே சாதிப்பெயர்கள் தாங்கியுள்ளன ஆனாலும் ஆப்தர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது இப்படியெல்லாம் எழுத முடியாது ஏனென்றால் நமக்கு அந்த விவரங்கள் இப்போது தெரிவதில்லை தேவையும் படுவதில்லை. இதெல்லாம் வெறும் 100 வருடங்களில்.
மிக பெரிய பிரச்சனைகள் வந்தபோதிலும் மிகவும் நேர் நிலை மன நிலையுடன் இருந்துள்ளார் அது மிகவும் அரிது.
The life and experiences of Namakkal Ramalingam Pillai, his participation in Independence Struggle, his passion for drawing, becoming a poet -his friendship, - narrated interestingly . Learn more about the life between Muslims and Hindus.