"அசோக் வெட்ஸ் ஆரிய சுபத்ரா " அந்த அழகிய பிரமாண்டமான திருமண மண்டபத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த மேடையில் மணமகனும் மணமகளும் திருமணத்திற்கே உரிய அலங்கார ஒப்பனைகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்த வேளையில் மண்டபத்திலிருந்த உறவினர் அனைவரின் கண்களும் மணமக்களை மட்டுமே மொய்த்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் பிள்ளைகளை ஈன்றெடுத்த கதாநாயகர்களின் பெற்றோர் முகத்திலும் சந்தோஷ கலை தாண்டவமாட,அதற்கு குறையாத சரிவிகிதத்தில் மணமக்களின் வதனத்தில் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதம் மிளிர்ந்தது என்றால்,ஆடவனின் முகத்திலோ சற்று அதிகமாகவே எதையோ சாதித்த வெற்றிப்புன்னகை இதழோரம் சிறு கீறலாய் தோன்றி கொண்டிருந்தது. அந்த மர்ம புன்னகையின் பின்னால் ஒளிர்ந்திருக