சதாம், உணவுப்பொருட்களைத் திருடும் முரட்டுச் சிறுவனாக ஆரம்பித்து உலகமே திரும்பிப்பார்க்கும் வண்ணம், அதிரடி நடவடிக்கைகளுக்கும் படுகொலைகளுக்கும் அஞ்சாத சர்வாதிகாரியாகவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் மாற்றம் பெற்று அதே அமெரிக்காவால் அனைத்தையும் இழந்து மரணித்த கதையையும் அவரது ஆட்சியில் ஈராக்கில் நடந்த மாற்றங்களையும் நடுநிலைமையுடன் எளிமையான உரைநடையில் விவரிக்கிறது இந்நூல். சதாமின் வாழ்க்கையையும் அவர் காலத்தில் ஈராக்கின் நிலையையும் அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் சிறந்த துணையாக இருக்கும் என்பது என் எண்ணம்.