Jump to ratings and reviews
Rate this book

கூகை [Koogai]

Rate this book
கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும், கோரம் என்று முத்திரை குத்துவதும், கூகையைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் பொதுப்புத்தி, கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ. தர்மன்.

Paperback

First published December 1, 2011

18 people are currently reading
401 people want to read

About the author

Cho. Dharman

11 books33 followers
Cho Dharman (born 8 August 1953) is an Indian Tamil writer. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj. Cho Dharman's novel Koogai, a stunning account of Tamil lives in post-independence India, was translated into English as The Owl. Cho, has authored nine books, won several awards and much critical acclaim for his novels, non-fiction and short stories. He won the Sahitya Akademi award in 2019 under Tamil language category for his novel Sool.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
50 (41%)
4 stars
52 (43%)
3 stars
13 (10%)
2 stars
3 (2%)
1 star
2 (1%)
Displaying 1 - 21 of 21 reviews
Profile Image for Sudarshan Varadhan.
29 reviews9 followers
July 14, 2019
"Gossip" as history and art

In Koogai, a documentation of history masquerading as fiction, So. Dharman rightfully legitimises two very underrated tools to take his narrative forward - supernatural legends involving nature that rationalists would discard, and gossip spread through word of mouth, wrongly looked down upon by historians and journalists as borderline obscene. How else do you bring to life the brutal, sadistic, oppressive rule of upper castes and the valiant fightbacks. The faceoff between the oppressed and the oppressors in the "Karisal mann" of Sittirampatti is Dharman's field. But it'd be an unforgivable mistake to box it into a single category of writing. He is a communist, feminist, philosopher and environmentalist as much as he's journalist recording history of the voiceless. Nature is a superhero in Koogai - a lesser writer would have made their characters leave their arc to indulge in acts of heroism or made this book a narration of endless suffering everytime he hits a dead end. But Dharman makes trees fly, stones turn into gold, birds macho soldiers protecting agricultural fields facing sabotage. Nature is an "unnatural" superhero trope glorified as the ultimate philanthropist, that'd also fucking kill you if you're unjust, while the characters are as rooted in their respective realities who still become heroes. But the most fascinating part is his commitment to objectivity and honesty - extraordinary discipline in an amazingly creative work of magic realism. Dharman uses discarded, frowned upon tools to create a world centred around truth, and also makes it bloody interesting.
Dharman the master craftsman is essential reading for the urban philistines who call themselves writers on social media, and who think using the word "solidarity" makes them saviours of the world and modern Shakespeare. Reading it will hopefully make them as grounded as Seeni Kizhavan, the central character in the book who preaches the virtue of modesty. ஒத்த கருமாந்தரம் புடிச்ச கோட்டிக்காறபயகளா, எந்த தைரியதுல ஓம்ம எழுத்தாளர் நு சொல்லிட்டு திரியுறீரு?
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
March 5, 2023
கோவில்பட்டி அருகே இருக்கும் சித்திரம்பட்டி என்ற கிராமத்தில் சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் அநீதிகளும் அதன் பொருட்டு அம்மக்கள் கொதித்தெழும் போது காவல்துறை என்ற அரசு இயந்திரத்தின் ஒரு பகுதி அம்மக்களை வன்முறை கொண்டும் சட்டம் கொண்டும் வதைக்கு உள்ளாக்குவது தான்  "கூகை". இப்படி ஒரு வரியில் சொல்லிவிட்டாலும்  நாவல் பல்வேறு விஷயங்களை பேசுகிறது. கதை நிகழும் காலகட்டம் தெளிவாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. களப்பு கடையில் முழுச்சாப்பாடு முக்காரூவா என்ற தகவல் மூலம் 1970 - 1980 காலகட்டம்  என்று யூகித்து கொண்டேன். முட்டாள் பறவை என நம்பப்படும் கூகையை சாமியாக ஏற்றுக்கொண்டு கோவில் கட்டி கும்பிடும் மக்கள், கூகையை சாமியாக ஏற்றுக் கொண்டவர்களின் நம்பிக்கையை எள்ளிநகையாடும் இளவட்டங்கள், தொடர்ந்து இழைக்கப்படும் சாதிய ஒடுக்குதல் மற்றும் இனாமாக கிடைக்கும்  கோதுமைக்கும் கிறிஸ்துவத்தைக் ஏற்றுக் கொள்ளும் மக்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கூலி ஏதும் இல்லாமல் அவ்வப்போது தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு வர சொல்லி நிர்பந்திக்கும், தாழ்த்தப்பட்டவர்களின் மனைவி, மகள், அக்கா என பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் மேற்சாதிக்காரர்கள் என நாவல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

வாசிக்கையில் நம்மை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் நாவல் முழுக்க வந்து கொண்டே இருக்கின்றன. சோ. தர்மன் அவர்களின் எழுத்துஉயிரோட்டமுள்ள கிராமத்தினையும் கிராம மக்களையும் கண் முன்னே நிறுத்துகிறது. சில இடங்களில் விவரணை பல பக்கங்கள் செல்கையில் மட்டும் சோர்வை ஏற்படுத்தியது. 

வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.
Profile Image for Gowtham.
249 reviews46 followers
November 20, 2019
அறுந்து சிதறிக் கிடக்கும் இரும்பு துண்டுகள்
ஒரே சங்கிலியாய் இனைந்துவிடாதோ! 🖤

"ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு கொடுமையானது, இன்றும் சில இடங்களில் அத்தகைய வன்முறைகள் தொடர்வது வேதனைக்குரியது ஒன்றாக அமைகிறது. பல கேள்விகளை விட்டு பிரிகிறது கூகை"

கூகை- நேசிக்க பட வேண்டிய ஒரு அற்புத பறவை


Book: கூகை

Author: சோ.தர்மன்
Profile Image for Karthik.
17 reviews8 followers
October 28, 2020
ஒரு சமூகத்தின் கதையை எந்த போலித்தனமுமில்லாமல் , மண்ணின் வாசனையோடும் செங்குருதியின் வீச்சோடும் பதிவு செய்திருக்கிறார் சோ.தருமன் ஐயா.. சாதியத்தின் கூர் நன்றாக புரிகிறது, நாமும் இந்த சாதிய அவலங்களின் ஒரு பங்குதாரராக இருக்கிறோமே என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது.. நாம் சாதியை மறந்து இனமாக ஒன்று கூடினால் ஒரு விமோச்சனமுண்டு இல்லையேல் அழிவு உறுதி..
கூகை என்னும் கடவுளை வைத்து கதை சொல்லிய விதம் , இருளில் வாழும் மக்களின் கதைக்கு நேர்த்தியாக பொருந்தியுள்ளது.. தன் பெலத்துக்கொத்த குரூரமில்லாமல் இருக்கும் கூகை , "the shape of water" திரைப்படத்தில் வரும் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு தெய்வீக விலங்கை ஞாபகப்படுத்துகிறது..
புத்தகம் முடிந்தபிறகும் பேச்சியின் அழு குறள் ஆழ்மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
November 12, 2022
நான் வாசித்த தலித் இலக்கியங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. இதில் ஒடுக்கபட்டவர்கள் திரும்ப திரும்ப எழுகிறார்கள். மொத்தம் 318 பக்கங்கள் அனைத்து பக்கங்களும் நம்மை கட்டிபோட்டு விடுகின்றன. Magic Realism நாவல் நெடுக மிக நேர்த்தியாக பறவைகளை தெய்வங்களாக்கி நமக்கு கடத்துகிறார் ஆசிரியர். சீனியின் முடிவு சொல்ல முடியாத மிக வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. அப்புசுப்பணுக்கும் பேச்சிகும் இருக்கும் பெயரிடப்படாத அந்த உறவு இந்த நாவலுக்கு மேலும் அழகு சேர்கிறது💙💙💙💙
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
June 9, 2022
இந்தப் புதினத்தில் கையாளப்பட்டிருக்கும் உவமை என்னை இதை படிக்கத் தூண்டியது பறவைகளில் வலுவுள்ள கூகை எனும் கோட்டான் இரவு நேரங்களில் எல்லா பறவைகளும் ஓய்ந்து ஒடுங்கி இருளை பார்த்து பயந்து உறங்கிக் கொண்டு இருக்கையில் பதுங்கிக் கொண்டு இருக்கையில் தனது இறக்கைகளை நன்கு விரித்து பயமின்றி பறந்துகொண்டிருக்கும் ஆனால் மதிய நேரத்தில் வலுவற்ற சிறு பறவைகள் கூட குகையை தாக்கும் ஏனென்றால் அப்போது அந்தக் கூகைக்கு பார்வை தெரியாது.

இதில் கூகை தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற பறவைகள் இந்த சமூகத்தையும் உவமையாய் குறிக்கிறது.

கதையின் போக்கிலும் பல இடங்களில் இந்த உவமை அருமையாக கையாளப்படுகிறது கதையின் நாயகனான கிழவன் கூகைச் சாமியைக் கும்பிடுவதும் அந்த சாமியை வழிபடுவதற்கான கதையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்தது.
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
July 26, 2024
கூகை பற்றி சொன்ன உடன்.இது தலித் இலக்கியம் என்று தெரிந்து விடுகிறது பிறகு போரிங்..... வாய்மொழி கதைகள்.. கட்டு கதைகள்... அப்புசுப்பன் - பேச்சி இடையே உள்ள உறவு நம்பக தன்மை இல்லாமல் இருக்கிறது... அய்யர் தலித் மக்களுக்கு நிலத்தை பங்கிட்டு கொடுப்பது ஆச்சரியம் தான்....

தலித் இலக்கியம் படித்து படித்து போரிங்....
Author 2 books16 followers
March 26, 2020
Introverts இன் கடவுள் இந்த கூகை . சாமியிலும் உயர்வு , தாழ்வு உண்டு என்பதை கூகை சாமி வழியே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தர்மன் . கூகை சாமியை வணங்கி வாழ்பவர்களின் நிலைமையை சொல்ல ஆரம்பித்து கடைசியில் கூகைசாமிக்கு ஆகும் நிலையுடன் முடித்திருக்கும் ஆசிரியர் தருமனின் கதைப் போக்கு கண்டிப்பாக தமிழில் ஒரு புது முயற்சி தான். தொடர்வதற்கு கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் நாவல் சிறிது நேரத்தில் அதன் போக்கில் படிப்போரை ஈர்த்து விடுகிறது . உலக காவியம் படிக்கும் மாமேதைகள் மற்ற மொழிகளில் இருக்கும் பொக்கிஷங்களை தேடி தன் நாட்டு பொக்கிஷத்தை மறப்பதைப் போல் தான் நம் கண் முன்னேயிறுந்தும் அதிகம் பாராட்டபடாத படைப்பாக இருக்கிறது இந்த கூகை .
Profile Image for Murugesan A.
25 reviews5 followers
January 8, 2022
கூகை எனப்படும் கோட்டான் தலித்துகளின் குறியீடாக சித்தரித்து சமகால தலித் வாழ்வை படைப்பாக உருவாக்கி இருக்கிறார் சோ.தர்மன்.நம் சமூகத்தில் கூகை எனப்படும் கோட்டான் ஒரு அபசகுணமான பறவையாக முன்மொழியப்பட்டுள்ளது கோரமான அதனை பார்த்தாலோ அல்லது குரலை கேட்க நேர்ந்தாலோ ஒரு அபசகுணம் என்று பெரிதும் அறியப்பட்டுள்ளது. இரவில் குகையை போல் பலம் கொண்ட பறவை எதுவும் இல்லை அது போல் பகலில் அதுபோல பலவீனம் ஆனதும் எதுவுமில்லை. இதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்களும் அறியாமை எனும் இருட்டில் உள்ளனர் .இது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் அவர்கள் வாழ்வின் மீதும் எவ்வாறு ஒரு ஒடுக்குமுறையை மேல்தட்டு இன மக்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை தலித்துகளின் சாயலில் என்று உணர்ச்சிபூர்வமாக உணர்த்தியிருக்கிறார் .
1. தாழ்த்தப்பட்ட ஒருவன் தான் விரும்பிய உணவை மேல்தட்டு மக்களுடன் உட்கார்ந்து உண்டதற்கு தண்டிக்கும் விதமாக அவன் வாயில் சிறுநீர் கழித்தால்
2. அவனின் சம்மதம் இல்லாமலும் அவனின் மனைவி விருப்பம் இல்லாமலும் ஒருவன் அவளை பாலியல் வன்புணர்வு செய்தால்
3. எல்லாம் விடவும் தன் மகளையே ஒருவன் ஆதிக்க சக்தியாக இருப்பதனால் வன்புணர்வு செய்ய முயன்றால்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறவனுடைய சமநிலை தவறும் போது அவனுடைய கோபம் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
கூலிக்கு உழைக்கும் இவர்கள் கையில் நிலம் தானமாக கிடைத்தும் மேல்தட்டு சமூகம் தன் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் வாழ்வை சீர் குழைக்கின்றன .
தீண்டாமை, சாதி ஒழிப்பு குறித்து பல படைப்புகள் தோன்றி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை முறையை அதையொத்த பறவை இனமான கூகையை பொருத்திக் கூறியிருப்பது தனித்துவம். ஒடுக்கப்பட்டு சமூகத்திற்கு மறைக்கப்பட்ட அறிவையும் ,மறுக்கப்பட்ட நீதிகளையும், இழைக்கப்பட்ட துரோகங்களையும் ஒருசேர எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
இதை படித்து முடித்த பின் தோன்றிய எண்ணம்
கூகை-அபசகுணம் அல்ல ,ஒடுக்கப்பட்ட மனிதனும் தான்.
Profile Image for Elankumaran.
140 reviews25 followers
December 17, 2021
கூகை ❤️

சோ.தர்மனின் புத்தகங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். கூகை நான் வாசிக்க நினைத்த முதல் புத்தகம். ஆனால் இந்த அட்டைப்படத்துடன் அமைந்த புத்தகம்தான் வாங்க வேண்டும் என்று பல நாட்களாக காலம்தள்ளி கடைசியில் என் கையில் கிடைத்து காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு - 2005.

கூகையை தலித்துக்களுக்கான குறியீடாக பாவனை செய்து அதன் பின்னணியில் தலித் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். காலம்காலமாக எவ்வாறெல்லாம் அடக்கப்படுகிறார்கள் அதெயெல்லாம் எவ்வாறு உடைக்கப் போராடுகிறார்கள் என இறுக்கமான எழுத்துக்களில் படைக்கப்பட்டுள்ளது.

சோ.தர்மனின் எழுத்து சில இடங்களில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திரைக்கதை போலவே கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அசுரன் படமும் கர்ணன் படமும் அடிக்கடி நினைவில் வந்தன. கர்ணன் பட்த்தில் கையாளப்பட்ட இயற்கையோடு இணைந்த கதை சொல்லல் இதிலும் வியப்பை ஏற்படுத்தியது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

“நீச்சலடிக்கத் தெரியாதவன் கெணத்துல விழுந்திட்டா அப்பிடியே செத்துப்போக மாட்டாண்டா, கடைசிமூச்சு இருக்கிற வரைக்கு கையக்கால ஒதறிப் போராடி சோர்ந்துப்போயி பெறகுதாண்டா சாவான்”
Profile Image for Dhanush K.
22 reviews1 follower
November 21, 2023
This book delves into an existential struggle between the upper caste Zamin and the lower caste individuals.

At its core, the novel explores the dominance and power wielded by the Zamin and the police over the marginalized lower caste community.

It's not something that can be summarized in a single line, but the Zamindar serves as a hidden central point of the narrative.

The story vividly portrays the lives of various marginalized characters, with சீனி (Seeni thatha),அப்புசுப்பன் (Appucchuppan) and பேச்சி (Pechchi) emerging as the primary protagonists.

This Tamil Dalit novel is a must-read for anyone interested in understanding the social context
1 review
November 18, 2021
சமூக தோல் உறிப்பு சிறிது நேரம் சோர்வு மற்றபடி அருமை
Profile Image for Vishnu M.
13 reviews
December 22, 2021
இயற்கையின் படைப்பால் மிக வலிமையுள்ள கூகையும் கூட பகலில் சிதைகிறது, சில பறவைகளின் சீண்டலால்.
செயற்கையின் படைப்பால் சில மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் வஞ்சிக்கப்படுகிறர்கள்.
Profile Image for Thirumalai Rajan.
4 reviews
February 10, 2022
Such a nice story and well defined characters, However, last half of the story little dragging and boring.
Profile Image for Aswanth.
9 reviews4 followers
August 6, 2022
சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளால் மனிதர்கள் படும் துன்பங்களை உடன்இருந்து துயரத்தை பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வாகவே கருதுகிறேன்.
Profile Image for Mohan Nath.
18 reviews
November 15, 2023
திராவிட கம்யூனிச வெறுப்பும் சுய சாதி பற்றும் பிராமணிய அடிவருடிதனமும் பிற்போக்குவாதமும் கலந்து புனைந்த வெற்று உளறல்.
Profile Image for NaGa.
7 reviews3 followers
March 4, 2020
நிலவுடைமைச் சாதியர்களால் சுரண்டப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டதும் அதே நிலவுடைமைக்காரர்கள் தொழில் முதலாளிகளாக உருவெடுத்து தங்கள் கோரப்பல்லைக் காட்டுவதும், பெயரளவில் அரசியல் உரிமையும் அனைவ���ுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதும் அவசரஅவசரமாய் அம்முதலாளிகள் அரசியல்வாதிகளாக உருப்பெற்று தங்கள் கூர்நகங்களைக் காட்டுவதையும் பதிவு செய்திருக்கும் நாவல்.

சில இடங்களில் சில கத்தாப்பாத்திரங்கள் வம்படியாக தங்களை தாழ்த்திக்கொள்வதுபோலவும், அடியவர்களாக நினைத்துக்கொள்வதுபோலவும் ஆரம்பத்தில் தெரிந்தாலும், உண்மையில் அது எளியவர்களாகியவர்கள் தம் வாழ்வை விதிவழி நகர்த்திச்செல்லும் விதம் என்பதைத்தான் குறிப்புனர்த்துவதாகப் புரிந்துகொள்ளலாம். சீனிக்கிழவனுக்கும் பள்ளக்குடிக்கும் நிலம் கையளிக்கப்படும் பாங்கு க���ஞ்சம் சினிமாத்தனமாக இருப்பது போலத் தெரிந்தது உண்மை, தேர்ந்த சினிமாவில் மெய் என்பதையும் பொய் என்பதையும் வகைப்படுத்த முடிவதில்லை.

கூகையை ஒடுக்கப்படும் மக்களுக்கு உவமையாய் நியமித்து பகல்ச்சூரியனை இரவுகளில் தன் கண்களுக்குள் இழுத்துக்கொண்டு வலுப்பெறும் பறவையாக மறுவதாகக் காட்டினாலும், நாவலில் பகலும் இரவும் மாறிமாறித்தான் சுழல்கின்றன. கூகைச்சாமியை தோளில் சுமந்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறும் சீனிக்கிழவன் என்ன ஆனான் என்பதை ஒரு புராணக்கதைபோல் சொல்லியிருக்கும் அத்தியாயம் முற்றிலும் விலகி குறியீடுகளால் நிரம்பி தனித்துவம் பெறுகிறது. மேலும் கால ஓட்டத்தில் இனக்கலப்பு, மூன்றுகுடி சனங்களும் ஒன்றாக குடியமர்வது, பல ஊர்களின் பல சாதிக்கார்களும் ஓரிடம் கூடி வருவது என எல்லாமும் சாத்தியப்படடாலும், ஆட்சியதிகாரத்தை முன்னாள் எல்லோரும் கீழாக்கப்பட்டு சண்டைமூட்டப்பட்டு சுரண்டப்படுவதை சாமானியர்கள் பார்வையில் பதிவு பண்ணியிருக்கிறது, கூகை அவசியம் வாசிக்கப்படவேண்டியதாய் இருக்கிறது.
14 reviews
Read
April 20, 2021
கூகை நாவலில் வரும் சில கதா பாத்திரங்கள் முரணாக உள்ளன. நன்றாக செல்லும் கதை ஓட்டத்தில் வர்ணனை புகுந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. கந்தையா கருப்பியை சீரழிக்கும் போது பேசாமல் இருக்கும் கணவன், தன் மகளை சீரழிக்க முயலும்போது கொலை செய்கிறான்.அவன் தன் மனைவியை தொடும்போதே உயிரை எடுத்திருக்க வேண்டும்.
முத்துப்பேச்சி மகள் மாரியை நடத்தும் விதம் மிகவும் கீழ்தனமாணது. எதுவும் செய்யாத தன் மகளை ஏன் தேவிடியா என்று திட்ட வேண்டும்.அந்த மக்கள் அவ்வாறு பே
சுபவர்களாக இருந்தாலும் ஒன்றும் அறியா குழந்தையை எப்படி இப்படி திட்டலாம் .அவள் என்ன தவறு செய்தால்?
சீனி கிழவன் முடிவு fantacy ரீதியில் முடித்தது மட்டமாக இருந்தது .
இதை போன்ற நாவல் நான் படிததே இல்லை.
மிகவும் மோசமான அனுபவம்.rating குடுக்கவே naan விரும்பவில்லை .
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Meera.
7 reviews4 followers
April 16, 2021
கூகை என்ற பறவைகளின் வழியே ஒரு சமுகத்தின் வலியையும் வாழ்வியிலையும் கண்முன்னே கண்பித்த நாவல்...ஆசிரியரின் அழகே அந்த காலத்தில் தொடங்கி சமீப காலத்திலும் எந்த வகையில் ஒடுக்கபடுகிறார்கள் என்று முடிவுரை கூறியது தான்.கூகை ஒரு சமுகத்தின் அலறல்
Profile Image for Tharsi Karan.
50 reviews6 followers
March 15, 2020
ஒரு கட்டம் வரைக்கும் விளங்கிக்கொள்ள கடினமா இருந்தாலும் பிறகு முழுமையாக உள்ளே வைத்து சாதியத்தின் அத்தனை கோரமுகங்களையும் கண்முன் காட்டிச்செல்கிறது.
கூகையோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒப்பிட்டு நாவல்முழுக்க கூவை படும் துன்பங்களை சொல்லுகிறார். சீனி என்ற கதாபபாத்திரத்தின் பொறுமை ஆளுமை தாழ்த்தப்படுகின்ற அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. பேச்சி என்ற பெண் பாத்திரம் மனதோடு பயங்கரமா ஒட்டிப்போய்விட்து.
Displaying 1 - 21 of 21 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.