இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் போல வெகு நன்றாக அமைந்த ஒரு நாவலாகும். கிராமத்துக் களத்தில் காணப்படும் ஒரு அமானுஷ்யமான பக்திக் களம் தான் நந்தி ரகசியம். இதன் முகப்புச் செய்திகள் முக்காலும் சத்யமான உண்மைகள்,பொக்கிஷத்தின் சாவி நாவல் சரித்திர பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு மர்ம நாவல். இரண்டுமே விறுவிறுப்பானவை. வாசகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது.
உனக்கு ஒன்று கிடைக்கும்,ஆசைபட்டதை நிறைவேற்றுவார் என்று சொன்னால் மட்டுமே கடவுளிடம் கூடப் பக்தியை காட்டுகின்றனர், இது தான் மனித குலத்தின் குணம்.
வேறு ஒருவளை கணவன் சேர்த்துக் கொண்டார் என்று விலகிய திரௌபதி , அதே ஊரில் இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் சாவிற்குத் தான் வீட்டுக்கு வருகிறாள் தன் புத்தி சரியில்லாத பிள்ளையுடன். சொத்தை எல்லாம் தன் பேருக்கு எழுதி கொண்டு முள்மரங்கள் மண்டியுள்ள நிலத்தை திரௌபதிக்கு எழுதியது மாதிரி போலியாக உயிலை உருவாக்கி கொள்கிறாள் வந்து சேர்ந்த சிந்தாமணி.
பாம்புகளும், முள் மரங்களும் மண்டிய இடத்தைப் பார்க்க வருபவளுக்குத் தன் மாமனார் வழிப்பட்ட சிவன் கோயில் அங்கே பாழடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்குகிறாள். விளையாட்டாக அங்கே இருக்கும் நந்தியை சுற்றிய மகனுக்குப் புத்தி தெளிவாகிறது.
தன் சகோதரிகளின் துயரம் போக்க வழி தேடும் மோகனுக்கு தீட்சகர் சிவனைப் பக்தியுடன் வணங்க அவரே உனக்கு வழி காட்டுவார் என்று சொல்ல அது போல சந்தர்ப்பம் அமைந்து அப்பாழடைந்த சிவன் கோவிலுக்கு வருகிறான்.
சிந்தாமணியிடம் இருந்து சொத்துக்களை லாயர் ஏமாற்றிய பிறகு தன் தவறை உணர்ந்து திரௌபதியிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஏமாற்றியவர்களை நந்தியும் பழிவாங்கி விடுகிறது. சக்தி வாய்ந்த நந்தி என்று மக்கள் கூட்டம் அலைமோத அது மர்மமான முறையில் அங்கே இருந்து காணாமல் போகிறது.
இடிந்து கிடந்த கோவிலை சீரமைக்கவே சித்தர் ஒருவர் நந்தி உருவில் அனைத்தும் செய்தார் என்றதுடன் முடிவடைகிறது.
சிவனை வணங்குவதற்கு முன்னதாக நந்தியை வணங்குவது ஐதீகமாகும். அந்த ஐதீகம் எதனால் உருவாகியிருக்கும் என்பதை உணர்த்துவதற்கு ஒரு உதாரணக் கதையாக 'நந்தி ரகசியம்' எனும் குறுநாவல் அமைந்திருக்கிறது. புத்தகத்தில் ஒரு வரி வருகிறது, 'புத்திசாலியின் பொய்க்கு எட்டு நாள் ஆயுசு, மிக மிக புத்திசாலியின் பொய்க்கு என்பது வருஷம் ஆயுசு' என்று. இந்த ஒரு வரியே, 'பொக்கிஷத்தின் சாவி' குறுநாவலுக்கு அறிமுக வரியாக அமையும்.
இந்த நாவல்களோடு அரிய செய்திகளும் சேர்ந்தே உள்ளன. For Ex.. "அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைக்கும் போது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். கிருஷ்ணா, ராமா என்று இறை நினைப்போடு இருப்பவர்கள் அமைதியாக வாழும் இடம் என்கிற பொருளில் வந்ததுதான் கிராமம் என்று கூறுவார்கள். அப்படி வடிவமைக்கும் போது வடக்குப் பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துக் கொண்டு ஆற்றுக்குத் தென்பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள். இப்படி அமைக்கும் போது தென்புறத்தில் மலையோ, காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேஷமாகக் கருதுவார்கள். பெரும்பாலும் அந்த ஊரில் எல்லோருமே வளமோடுதான் இருப்பார்கள். அப்படி வடிவமைக்கப்படும் ஊரின் சிறப்பையும் எதாவது ஒரு விதத்தில் குறித்து வைப்பார்கள்."
nandhi ragasiyam was very good and the details given about village and how it was planned etc were all very good. the second story was very ordinary hence reduced the rating.