மீண்டும் அலர், கைலாஷ் மற்றும் சிவா துப்பறியும் திரில்லர் வகை நாவல். இம்முறை பிரேதப் பரிசோதனை நிபுணர் டாக்டர் அலர்மேல் மங்கையைக் குறிவைத்து நடக்கும் தொடர் கொலைகளை துப்பறியும் ஸ்பெஷன் கிரைம் ஆபீசர் கைலாஷ், அலரின் கணவனும் கூட. தொடரும் கொலைகள் இந்த புது மண ஜோடியை எப்படிப் பதம் பார்க்கின்றது, கொலையாளியை, அவன் நோக்கத்தைத் தேடி விறுவிறுப்பாக செல்லும் கதை.
இவர்கள் முதலில் துப்பறியும் வழக்கு எனது கோணல் கோணங்கள். இந்த நாவல் அதே மாந்தர்களுடன் முற்றிலும் புதிதான ஒரு கேஸ்!