அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
லீனா :D - One line can describe her :D உவமைகள் அவளை விவரிக்க ஓவர் டைம் வாங்க வேண்டும் :D கணேஷ் & வசந்த் :D கேக்கவே வேணாம் ! scintillating duo of action , knowledge and wit :D கடைசி வரைக்கும் விஞ்ஞானமா பைசாசமான்னு புரிஞ்சிக்கவே இல்ல :D Typical வாத்தியார்'s way of twists and turns :D Pulse எகிறிடுச்சு :D
P.S. No Conjuring, Exorcist can equalize this book B|
Hands down one of the most intelligently crafted mysteries that I've ever read. Considering that my mystery/thriller consumption appetite has been at an all-time low for sometime, I was doubly surprised by the kick I got out of this novel.
Started this one with a lot of eagerness, if not expectations, Sujatha being one of my favorite writers and this one being my first glimpse at his famous lawyer sleuth duo of Ganesh-Vasanth. And though I wasn't disappointed or something, I got really nervous at about the halfway stage about the possible denouements to the mystery because the plot was so wildly pulsating between crime and science and supernatural, that the denouement could only be either wickedly brilliant or an absolute cliche. Thankfully, it was the former.
Talking about wicked brilliance -
Sujatha's narrative seamlessly shifts perspective throughout the novel, effortlessly hopping between the calmness and composure of lawyer Ganesh and the light-heartedness of his play boyish PJ-cracking assistant Vasanth and the grimness of the autumnal murders with an abundance of the usual Sujatha wordplays. Enjoyed the concocted Tamil poems that augmented the supernatural and had to kick myself for not being able to guess the Science part accurately enough despite it being a novel written in 1981.
Looking forward to reading more of Ganesh-Vasanth!
சுஜாதா அவர்களின் எழுத்திற்கு நான் அறிமுகம் ஆகும் முதல் நாவல் இதுவே..
அறிவியலுக்கும் அமானுஷ்யத்துக்கும் இன்று வரை ஒரு போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது... அறிவியலால் விளக்க முடியாத பல இன்னும் நம் உலகில் இருக்கத்தான் செய்கின்றன...
ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகு..அடுத்து என்ன நிகழ இருக்கிறதோ என்னும் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே சென்றது.. கணேஷ் வசந்த் duo மிக சுவாரஸ்யம்... கணேஷின் பகுத்தாய்வு + வசந்தின் நக்கல் ❤️ பேய் கதை வாசிப்பதால் இரவு நேரம் முக்கிய வேலைக்கு செல்ல சற்று யோசிக்க வேண்டியதாயிற்று😜😬
ஜிலேபி போல கதைக்களத்தில் அவ்வளவு திருப்பங்கள். Me being a thriller genre lover didn't knew such good novels existed in tamil 😑 கண்டிப்பாக அடுத்த முறை சுஜாதாவின் நாவல் எதாவது ஒன்று "Add to cart" செய்யப்படும் என்பது உறுதி❤️
பேய்யாவது பிசாசாவது இதற்கு பின் ஒரு அறிவியல் விளக்கம் இருக்கும்.சுஜாதா மீதும் கணேஷ் வசந்த் மீதும் நம்பிக்கை இருக்கிறது. இருந்தும் அடுத்த பக்கத்தை திருப்ப ஒரு பயம் நெஞ்சில் டிக் டிக் , முதுகுத்தண்டில் ஐஸ் , எதற்கு வம்பு இந்த வீணா போன புத்தகத்தை தூக்கி எரிஞ்சித்து அடுத்த வேலைய பக்க போலானு நெனைச்சா எங்க இந்த புத்தகம் தானா நகர்ந்து வருமோனு பயம். மூடவும் பயம் தொடரவும் பயம்.பாவம் பா இத வார இதழில் படித்த தலைமுறை.
கடைசி வரைக்கும் photos ah develop பண்ணி பார்க்கவேயில்லை.
பக்கத்துக்கு பக்கம் த்ரில், pulse எங்கயோ எகிறுத்து. சுஜாதாவின் best. best of கணேஷ் வசந்த்.
I read 'Kolaiyudhir Kalam' (= Murder Season) by Sujatha, for the first time, when I was a teenager. It was one my favourite detective mysteries then. I had forgotten most of the story since, including who was the bad guy :) So I thought it was a good time to read it again.
The story told in 'Kolaiyudhir Kalam' goes like this. Lawyer Ganesh and his assistant Vasanth are hired to look at some estate documents and see whether there are any problems with respect to title and ownership. The owner of the estate is a young woman called Leena, who is going to turn eighteen. Her parents have passed. Her uncle is her guardian now and has been managing the estate on her behalf. On her eighteenth birthday he will be handing over the estate to her. But when the lawyer duo stay at the estate for a couple days, strange things start happening, voices are heard in unoccupied rooms and there seems to be a ghost near the lake. And there is a legend behind the ghost – she seems to an ancestor of Leena, the young woman who owns the estate, and she is out there to get revenge. And before long someone is dead. And the dead person's body disappears. And both our heroes are beaten up by a probable supernatural being. Is it really a ghost which is doing all these bad things? Or is it some good old plain vanilla human beings who are doing these bad things out of greed? Who will benefit by these strange happenings? Is Leena's life in danger? Are out lawyer-detectives able to find the mystery behind all this? You have to read the story to find out.
Re-reading 'Kolaiyudhir Kalam' was an enjoyable experience. I had forgotten the story completely and so couldn't guess the revelation in the end. Sujatha does a Hitchcock and kills the main suspect halfway through the story and after that it is a roller coaster ride and it becomes harder to guess the ending. There are many popcultural and literary references throughout the story – like a quote from an O'Henry story, the Bruce Lee movie 'The Return of the Dragon', the Frederick Forsyth novel 'The Devil's Alternative', a description of a plot revelation from a Tamilvanan novel (one of my favourite Tamil crime fiction writers), Inspector Jacques Clouseau, Agatha Christie – it was fun to spot all these. I don't think I spotted or appreciated most of these when I read the book the first time, all those years ago.
I enjoyed reading 'Kolaiyudhir Kalam' again. It didn't resonate with me as much as it did to my teenage self, but it was an enjoyable read nevertheless. After reading the book I wondered whether I had grown out of Sujatha books. But then I remembered that I read the collected plays of Sujatha sometime back and it deeply resonated with me and I loved it. So there is hope yet.
Have you read Sujatha's 'Kolaiyudhir Kalam'? What do you think about it?
கொலையுதிர் காலம்-2007 ஆம் ஆண்டு வெளியான சுஜாதாவின் திகில் நாவல். அரசமரத்தடி மண்டபத்தில் ஓர் ஆவி, உருவமற்ற குரல்கள், தானாகவே நகரும் புத்தகங்கள், ரத்தமற்ற சடலங்கள், மேற்குறிப்பிட்ட அமானுஷ்ய நிகழ்வுகள் அனைத்தையும் முன்னதே அறிவிக்கும்பொருட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகம் என்று அனைத்து thriller elementsகளும் அம்சமாய் அமைந்திருக்கும் ஒரு நாவல் தான் இது.
கதையின் நாயகனான கணேஷ் தன்னை சுற்றி அந்தப் பண்ணை வீட்டில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகளுக்கெல்லாம் மற்றவர்களைப் போல் பேய் பிசாசு தான் காரணம் என்றில்லாமல், மாறாக அறிவியல் காரணங்களைத் தேடும் பகுத்தறிவு மிகுந்த ஒரு வக்கீல். நிறையக் கதாபாத்திரங்கள் இந்த நாவலில் வந்து சென்றாலும் கணேஷ் கதாபாத்திரம் மட்டுந்தான் ஓரளவுக்கு வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்கள் என் மனதிற்கு ஏனோ ஒட்டவில்லை. முக்கியமாக லீனா எனும் இந்த நாவலின் நாயகி கதாபாத்திரமும், கணேஷின் assistant ஆக வரும் வசந்த் கதாபாத்திரமும் நிறைய இடங்களில் எரிச்சல் உணர்வைத் தந்தது. நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் லீனாவிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிற பாணியில் தான் கதை நகர்கிறது என்றபோது, அவளின் கதாபாத்திரம் திடமாக இருந்திருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது. கதையில் வரும் அவ்வளவு twists and Turnsகளுக்கு எங்கேயாவது லீனாவின் character development தெரிய வரும் என்ற ஆர்வத்துடன் வாசித்ததற்கு ஏமாற்றம் தான் மிச்சம். லீனா, சுந்தர்.சி அவர்களின் பேய்ப் படங்களின் வரும் பேய்கள் போல makeup உடன் தான் கதை முழுவதும் வலம் வருகிறாள். அடுத்து வசந்த், இந்த நாவலின் Humor factorகென்றே படைக்கப்பட்ட ஒரு character முற்றிலும் Adult humor . ஒன்று இரண்டு இடத்தில் தான் சிரிப்பு வந்தது. மற்ற இடத்தில் எரிச்சல் மட்டுமே எஞ்சியது. பதின்மூன்று வயது சிறுமிகளை வைத்து Adult humor செய்திருப்பதாலும் சுத்தமாக ஏற்றுக்கொள்ளமுடியவில��லை இது ஒரு நாவலே என்றாலும்.
குறைகள் நிறைய இருந்தாலும், இந்நாவல் கதையின் விறுவிறுப்பிற்கு எங்கேயும் தொய்வு இல்லை. ஆர்வமும், நேரமும் ஒத்துழைத்தால் ஒருவர் ஒருநாளில் வாசித்து முடித்துவிடலாம். Hologram, electro-magnetism போன்ற இயற்பியல் கருத்துக்களைக் கதைக் களத்தோடு அழகாகப் பொருந்தியிருப்பது எழுத்தாளர் சுஜாதாவிற்கே உரிய பாணி என்று வாசிப்பவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.
*பதிப்பகத்தாரின் கவனத்திற்கு*: விசா பப்பிளிகேஷன்ஸால் பதிப்பிக்கப்பட்ட ஐந்தாம் பதிப்பு நான் வாசித்த இந்த நாவலின் பிரதி. அவ்வளவு அச்சுப் பிழைகள். அவற்றைத் தவிர்த்திருந்தால், சிரமம் இல்லாமல் இந்த நாவலை வாசகர்களால் வாசிக்க இயலும்.
The genre of thrillers is defined by books like these. Sujata's work written in 1983s before internet was a thing keeps you hooked till the very end (literally!).
Ganesh and Vasanth reach a village for due diligence of an estate from guardian to beneficiary. Except the beneficiary is an adolescents Leena who is tough to place with her weird swings. The Guardian tells them a chilling story of a family curse and haunting and as rational lawyers, they refuse to believe. Except when they see it with their own eyes and what chilling scenes!
Slowly, we find the book turn as a Ghost Vs Science explanation with the duo trying to explain the happening. Given we are almost 40 years ahead, it still gives you a good rational explanation with an absolute chilling end. The fact that both Ganesh and Vasanth are directly attacked and yet they keep going is a creative license. The police episodes don't add much value and I would assume they would have been more invested in the investigation than what happens in the book.
I've read a few books that works on the same concept - but none with the style of the master. Every "normal" theory to explain - the duo proposes and disproves it beyond suspicion. It also helps that the author keeps removing, quite violently, characters from the book (as hinted in the title).
முதன் முதலாக ஒரு புத்தகம் என்னை கலங்கடித்தது. வேண்டுமென்றே இரவு நேரத்தில் தான் படித்தேன். அப்பொழுதுதான் புத்தகத்தின் பயம் முழுமையாக நம்மை ஆக்கிரமிக்கும். :-)
புத்தகத்தின் முதற் பதிப்பு 1981 ஆம் ஆண்டு. ஆனால் வாத்தியார் கலக்கி எடுத்திருக்கிறார். ஹோலோகிராம், பார்கோட் இன்னும் என்னமெல்லாமோ அள்ளி தெளித்திருக்கிறார். பொறுமையாக இன்னொரு முறை படிக்க வேண்டும் அள்ளி தெளித்திருப்பதை புரிந்து கொள்ள. :-)
It still is works out as one of the best thriller/horror book even to this today. Considering the time it was written, the vast technical details he tried bring in, is amazing! Also, the logical explanations he tries to give to every scenario. Though there are many questions left unanswered, he has brilliantly woven the story such that the ending is left to the reader to decide, whether it is technology or the sinister that lead the entire story. Brilliant at that! The style of his writing appealed to me, a lot! There is no beating around the bush scenes or detailing too much into the characters or the places or even scene changes itself, trying to keep the book lengthier. This helped in keeping the pace of the book and I couldn't stop reading until I finished reading it. My first encounter with Ganesh and Vasanth, though Vasanth is attractive with his wits, somewhere it doesn't appeal much with his menine characteristics. Ganesh is the mature and deserving to be a boss type. Overall, the book is more than a good read, not the best though! (The bestest part is limited to the technical details considering the time the book was written)
This book was awesome...Actually to certain unpredictable things,we can give explanation in two ways 1. one from historical scriptures 2. from logical thinking deriving the possible solution whers science helps . For example, If u speak about, the world gonna get demolished in 2012 people speak about, 1. Some people say as per old scriptures given in bible or mayans calendar, 2. In another way people give out rational ideas y it should happ. This was clearly told in this book dealing with apparition. It was a very good thriller and I wud say pls dont read this book when u r alone.. lol...
Ganesh, a famous lawyer in Chennai and his junior, Vasanth, visits their client Leena viyasan's farm. Leena's uncle, Kumara viyasan, tells them that two years back a ghost possessed Leena and she killed a boy by drinking his blood. But Leena, 18 and innocent is about to become the heir of 10 million worth farm. Ganesh and Vasanth sees the ghost which appears to resemble leena. The next day they find a dead body in the farm. The dead body disappears from the police custody. The mystery is solved by the lawyers by debating science and supernatural theory.
I was pleasently surprised to see Ganesh and Vasdanth's characters right from page1. I was impressed by their cameo in Pesum Bommaigal and I wanted to read more and this one was perfect.
Sujatha's writing is execellent and his exuberance of youth in the dialogues of Ganesh and Vasanth is spellbounding.
The only regret was that when I badly wanted to know who was behind all this, Sujatha leaves the end to the reader's discretion.
Nobody can so easily blend science, ghosts and mystery into a master story ! The ghost parts give you chills that no horror movie managed to give you . The mandapam sequences are bone chilling .
The language so brilliant, story so crisp, suspense so curious and everything so perfect . The last line of the book reminds you of the last line of Aaaaah . Whoa !
The perfect book for a weekend or a long travel or whenever you're bored . Hats off, Sujatha !
I could not put down the book till the end. why Ganesh did not develop the photo ? why the girl leena was not tested by psychiatrist Dr Balagopalan? Still Ganesh could not find any electronic device or speaker in that house.how did the Book "sila Vinodhangal" move automatically ? Several questions unanswered..
A character's personality and role is very important when it comes under "mystery-thriller" genre and I always take it very serious. Vasanth is irritating, not so funny! May be I have been reading serious types of novels? Though story line was good, I dont feel the "wow" sense in this book.
The first detective novel of sujatha that I read. I liked vasanth character and the way sujatha has used him in the story. A good page turner which some times makes us feel like not going any way but the end was decent. The way ghost vs physics was handled carefully is something that is great. Go for it.
கையில் எடுத்த புத்தகத்தை முடிக்கும் வரை கீழே வைக்க விடவில்லை சுஜாதா. Probably the best sujatha novel i have read. கணேஷின் சிந்தனை , எதிர் பார்க்காத திருப்பங்கள், வசந்தின் சிரிப்புவெடிகள் - superb combination
ஒரு தனிமையான இரவில் படிக்க ஆரம்பித்து, பயம் அதிகமானதால், பாதியில் படிப்பதை நிறுத்தி, மீண்டும் காலையில் முடித்த நாவல். பல இடங்களில் சிலிர்க்க வைக்கும் சில இடங்களில் வசந்த்தால் சிரிக்க வைக்கும் More engaging than hollywood horror movies. Must read in a single sitting.
Lawyers Ganesh and Vasanth are visiting an estate to deal with some of its legal aspects. Leena is the owner of the estate and the caretaker is her uncle Kumara Vyasan. The lawyers start experience strange phenomena during their stay at the estate - voices from rooms, an apparition of ghost that looks very much like Leena, there are attacks on the lawyers and even murder. There is an myth circulating in the village that an ancestor's ghost is causing this havoc, but Ganesh will not accept it. He believes that this is a ploy by someone who is trying to steal Leena's estate ownership, while Vasanth is okay with the ghost theory and they both indulge in investigation to prove their respective point.
The only unsatisfactory aspect of the novel was the fluff around the mid-portion, where the events are repeated multiple times, without really proceeding into the action. The action kicks back in the final portions and the open-ended finale elevates the novels impact. A good read, but wouldn't count it amongst Sujatha's best.
தமிழ் புத்தகங்கள் வாசிக்காத காலத்தில் கூட மிகவும் பிரபலமான எழுத்தாளர் சுஜாதா என���பதை அறிவேன். இந்த புத்தகம் வாசிக்கையில், தமிழ் வாசகர்களிடம் தனக்கென ஒரு தனிஇடத்தை எப்படி எழுத்தாளர் உருவாக்கிக் கொண்டார் என்று தெரிந்தது.
கைபேசிகளுக்கு முன் தொலைபேசி ஆட்சி செய்த காலத்தில் இந்த கதை நடக்கிறது. லீனா தனது 18ஆவது வயதை அடையும் போது அவளுடைய பூர்வீக சொத்துக்கள் அனைத்தும் உயிலின்படி அவளிடம் வந்து சேரும். கணேஷ் என்ற வழக்கறிஞரும், அவரிடம் பணிபுரியும் வசந்தும் லீனாவின் எஸ்டேட்டிற்கு வருகிறார்கள், சொத்து சிக்கல்களைச் சரிசெய்வதற்காக. அங்கு நடக்கும் சம்பவங்கள் மற்றும் கொலைகள் பற்றி ஆராயச்சிதான் கதை. கணேஷ் அனைத்திற்கும் தரும் அறிவியல் யூகங்கள் நம்மை ஆசுவாசப்படுத்தினாலும், வசந்தின் அமானுஷ்ய கதைகளும் சான்றுகளும் நம்மை இறுதி அத்தியாயம் வரை நடுக்கத்திலேயே வைத்திருக்கும்.
அதிசுவாரஸ்யமான கதைக்களம், இயற்கை வர்ணணைகள் பெரிதும் இன்றி திகில் நிறைந்த எழுத்துநடை, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் ஒரு மர்ம முடிச்சு என்று சுஜாதாவின் தனிச்சிறப்புகளைக் கூறிக்கொண்டே போகலாம். என்னைப்போன்று crime and investigation பிரியரா நீங்கள்?!? இந்த படைப்பு உங்களுக்காக!
I loved how he narrated and made me wander between science and the supernatural. Filled with heart-pounding incidents, unexpected twists, and unsolvable puzzles. It's been an exciting read.
One of the most interesting novels I have read and also my novel (or any book) in Tamil. This book is a good mix of science, fiction, horror, fun and littler corny stuff.
I read this book about 2 years ago, dont remember a lot of intricacies ...
Love the way the story unfolds, the interaction between Ganesh - Vasanth Duo is great, the imagination by the author is awesome. Also bridging btw science and supernatural is pretty commendable.
2016-இல் தமிழ் புதினங்கள் நான் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வைரமுத்து, ஜெயமோகன், கல்கி இவர்களது புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தேன். எனக்கு பிடித்தமான மர்ம நாவல்களை தேடி அலைந்த அலைச்சல்; சுஜாதாவின் கணேஷ் வசந்தை அறிமுக படுத்தியது. அந்த புத்தகம் 'கொலையுதிர் காலம்'. அன்று ரசித்த அந்த புதினத்தை மீண்டும் இப்பொழுது ரசிக்க முற்பட்டேன். நான்கு வருடங்கள் ஓடிப்போய்விட்டதால் அறவே மறந்திருந்தேன் கதைக் களத்தை!
லீனா என்ற பெண்மணி எக்கச்சக்கமான சொத்துக்களுக்கு வாரிசு. அவளது சித்தப்பாவான குமார வியாசன் இத்தனை நாட்களாக அந்த சொத்துக்களை பராமரித்து வந்துள்ளார். அதை அடையப் போகும் தருணம் நெருங்கி வர; கணேஷ் மற்றும் வசந்த் சட்ட ரேகைகளை சரி பார்க்க வண்டலூர் தாண்டி இருக்கின்ற அவர்களுடைய இடத்திற்கு செல்கிறார்கள். எளிதில் முடியும் என்று நினைத்ததன் நடுவில் பல மர்மங்கள் அரங்கேறுகின்றன. தொடர்ந்து கொலைகள், காணாமல் போகும் பிணங்கள், எதிர் கொண்ட சாபம், பழி வாங்க துடிக்கும் ஆவி, லீனாவை ஆவி ஆட்கொள்வது என பல அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. சந்தேகத்தின் நிழல் குமார வியாசன்மேல் படரும் தருணம் அவரும் கொலை செய்யப்படுகிறார். குழப்பங்கள் அதிகரிக்க அறிவியலா அல்லது பைசாசமா என்ற அதன் மர்ம முடிச்சை கணேஷ் வசந்த் இருவரும் சேர்ந்து அவிழ்ப்பதே கதை களம்.
சுஜாதா என்பவர் 80- 90 க்களில் மிகவும் பிரபலம் அடைந்த எழுத்தாளர்களில் ஒருவர். அறிவியல், மர்மம், காதல், குடும்பம், இலக்கியம் என்று பல ரகங்களில் எழுதியவர். அவர் கதைகள் என்றும் ஒரு தமிழ் படத்தை பார்க்கின்ற ஒரு பிரதிபலிப்பை தருகிறது. காலத்தை வெல்லும் அறிவியல் சார்ந்த நிறைய விஷயங்களை அவர் புத்தகங்களில் பார்க்கலாம். ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அனைத்தும் அவர் புத்தகங்களில் காணலாம் - பாடல்களை தவிர்த்து. அதனால் தான் என்னமோ திரை துறையுடன் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது! அதிலும் வெற்றி கண்டார்.
சரி, புத்தகத்திற்கு வருவோம்! கதையின் மர்மத்தை நன்றாகவே நிலைநாட்டியுள்ளார் சுஜாதா. இது இப்படி இருக்கக் கூடுமோ என்று நினைப்பதற்கும் வேறு சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அவ்வளவு பரபரப்பாக செல்கிறது கதை. என்னால் இப்படி இருக்க கூடுமோ என்று இந்த மர்மத்தை அணுக முயன்றபோதும் எதிர்மாறாக பல விஷயங்கள் நடந்தது குழப்பத்தை நன்றாக நிலைநாட்டியது.ஒரு கைப்பிடி அளவுக்குத் தான் கதாபாத்திரங்கள். அவர்களையும் நன்றாக பயன்படுத்த்தியுள்ளார். இருந்தாலும் லீனா இவ்வளவு வெகுளியாயிருப்பது என்னமோ என்னால் ஏற்க முடியவில்லை. நடுவில் தீபக்கின் பெயரில் சந்தேகத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் வெறும் திசை திருப்பும் நோக்கமாகவே எனக்கு பட்டது. ஆனால் மர்மத்தை கடைசி வரை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளார் எழுத்தாளர். மர்ம முடிச்சுக்கள் அவிழும் தருணங்கள் நன்றாக வரையப்பட்டுள்ளது. இருந்தாலும் பல கேள்விகள் விடைகள் இல்லாமலே விடப்பட்டிருக்கின்றன. மர்மம் அம்பலமான பிறகும் முடிவு கூட உங்கள் ஆற்றலின் படி என்பது போல் நிறைவு பெரும் விதம்; இன்னும் பல கேள்விகளை கேள்விகளாகவே விட்டு செல்கின்றன.
மொத்தத்தில் ஒரு நல்ல மர்ம படம் பார்க்கின்ற போல் ஓர் உணர்வு. நான்கு வருடங்கள் முன்பு படிக்கையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மர்ம கதையாக இருந்த இப்புதினம் இக்காலகட்டத்தில் கூட என்னை வெகுவாக கவரவே செய்கின்றது. நான் படித்ததிலேயே முதன்மையான மர்ம புதினமா என்று கேட்டால்; அல்ல. இருந்தும் என்றைக்கும் என்னை ஈர்க்கும் தன்மை உடையதாகவே இருக்கும்.
Sujatha, man of wits and twists has woven the characters and the story really well. Every chapter ends with a twist which gets unfolded in the start of the next chapter. At first it may appear vague but once the ghost part starts appearing the story picks up the heat and speed. The astonishing part is when you are sure things are scientifically happened author stirs it up makes you believe about supernatural things. Mind you, this is a novel written in early 80's with scientific notions of 21st century. The beauty of the novel is that even in the last word of the novel the suspense is maintained. The witty and level headed pair of lawyers keep the reader glued in. Storytelling is so realistic that the reader can relate to it easily and the character building is perfect too. To keep the reader happy, he has spiced it up with a sexy hot lady. There are many unanswered questions. As you know, never diverged from the plot too. Overall, Amazing novel and lives it up for the ages to come. Timeless Thriller with quirky twists.