S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும். எனக்கு சிறுகதை என்றால் மிகவும் பிடித்தது. சிறு வயதில் இருந்தே சிறுகதைகள் நிறைய படித்திருக்கிறேன். அதற்காக எனக்கு ஒரு முழு நாவல் பிடிக்காது என்று சொல்ல மாட்டேன்.
இதுவே எனது முதல் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை ஆகும். நிறைய முறை அவரது “தேசாந்திரி” மற்றும் “நூலக மனிதர்கள்” படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை. பிறகு வீடுற்க்கு சென்ற போது சித்தப்பாவின் இரண்டு புத்தகங்கள் இருந்தன. நான் நினைக்கிற புத்தகத்தை வாங்கி படிக்க முடியவில்லை இதையாவது படிக்காலம் என்று நினைத்தேன். தலைப்பு எண்னை மிகவும் ஈர்த்தது. “Francis Itty Cora” என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்தேன். அதை பதினெட்டாம் நூற்றாண்டின் மழை படிக்கும் போது எனக்கு அது நினைவுக்கு வந்தது. இரண்டும் கதைகள் வேறு. ஆனால் அவை எனக்கு இன்னும் சில பக்கங்கள் நிடிதிற்காக கூடதா என்று தோன்றியது.
ஒவ்வொரு சிறுகதை படிக்கும் போது ஒவ்வொரு விதமான உணர்வு எனக்குள் தோன்றியது. அதை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை. சில சிறுகதைகள் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து மற்றும் சில கதைகள் சிந்திக்ககுடிய வகையில் இருந்தன. ந்த்தை மற்றும் சிங்கம் பற்றிய கதை அருமையாக இருந்தது.
நீங்களும் சிறுகதைகள் படிக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறுவேன்.
27 சிறுகதைகள் உள்ளது,ஒவ்வொரு கதையும் எதாவது ஒர் வகையில் மனதை பாதிக்கின்றது,சில கதைகளில் நாம் நேரிட்ட பல சம்பவங்களோடு கதை இருப்பதால் மேலும் மனதோடு நெருங்கிவிடுகிறது. எல்லா நாட்களையும் போல என்ற சிறுகதை மிகவும் விருப்பமான ஒன்று எனக்கு.
எஸ்.ரா வை வாசிப்பது என்பது எப்போதும் உற்சாகமான மனநிலையை எனக்கு தரக் கூடியது. ஜீரோ டிகிரி பதிப்பகம் சார்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் சாரு நிவேதிதா அவர்கள் Pleasure of text என்ற பதத்தை உபயோகித்தார். அதாவது வாசிக்கும் போது மகிழ்ச்சியை ஊட்டக் கூடியது என்ற பொருள்படும்படி கூறப்பட்ட பதம் அது. எஸ்.ராவை வாசிக்கும்போது அப்படித்தான் உணர்கிறேன்.
எஸ்.ரா எழுதிய 24 சிறுகதைகள் அடங்கிய தொகுதி தான் இந்த பதினெட்டாம் நூற்றாண்டின் மழை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு வகை. இவற்றில் சில சிறுகதைகள் வாசிக்கும்போதே மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரச் செய்தன.
புத்தன் இறங்காத குளம் என்று ஒரு சிறுகதை. அரண்மனையில் பிறந்து வெளியே சுதந்திரமாக சுற்ற முடியாத சித்தார்த்தன் எனும் சிறுவன் அரண்மனை உச்சியிலிருந்து அருகேயிருக்கும் குளத்தை ஒரு மழை நாளில் பார்க்கிறான். அது அவனை வசீகரிக்கிறது. இந்த உலகின் கண் அது என்பது போல அவனுக்கு தோன்றுகிறது. ஒரு கண் இந்த குளம் என்றால் மற்றொரு கண் எது என்று அவனை யோசிக்க வைக்கிறது. இவன் அந்த அந்தக் குளம் குறித்து மற்றவர்களிடம் விசாரிப்பதை கண்டு அரண்மனையில் வேலை செய்பவர்கள் அந்த குளத்தில் இருந்து தாமரையை பறித்து வந்து தருகிறார்கள். ஆனால் சித்தார்த்தன் விரும்புவது அந்த தாமரையை அல்ல. வளர்ந்து பெரியவனாக அரசனாக மாறிய பிறகும் அவன் அந்த குளத்தின் அருகே செல்வதே இல்லை. திடீரென ஒருநாள் அந்த அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். புத்தனாக மாறுகிறான். அட்டகாசமான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதை இது.
ஏஸ்.ராவின் பெரும்பாலான கதைகள் தனித்துவிடப்பட்ட, நகரம் நோக்கி மனிதர்கள் நகர்ந்த பின்பு காலியாகி போன கிராமங்களை பற்றி பேசுகிறது. அதேபோல அவரது கதைகளில் வெயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. சில சிறுகதைகள் மாய யதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக தன்னைச் சுற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் பொழுது எதையும் பார்க்காமல் தனக்கு தேவைப்படுவதை மட்டுமே பார்த்துப் பழகிய ஒருவனுக்கு திடீரென அவனது பார்வையில் இருந்து அவனுக்கு தேவைப்படாத அனைத்தும் மறைந்து போகின்றன. முதலில் பயந்து போகும் அவன் பிறகு அப்படியே வாழப் பழகிக் கொள்கிறான் கடிவாளம் கட்டிய குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை இடித்துரைப்பதாகவே இந்த கதை எனக்கு தோன்றியது.
எஸ்.ராவின் வழக்கமான வசீகரமான எழுத்து நடையில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான இந்த புத்தகம் சிறந்த வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு தரக் கூடியது.