தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது. மூன்று பேரும் தொடர்ந்து நடந்தோம். விஜய் முதலில் சென்றான். நான் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். ஜோசப் என் பின்னால் வந்தான். வழி தவறி விடக்கூடாது என்பதற்காக ஜோசப் என் கையைப் பிடித்துக்கொண்டான். முதலில் இரு விரலை பிடித்தவன் சிறிது நேரம் கழித்து மொத்த விரல்களையும், என் விரல்களோடு கோர்த்துக்கொண்டான். ஒரு இடத்தில், கூட்டம் அதிகமாகி நாங்கள் முன்னே போகமுடியாமல் நின்றோம். ஜோசப் என்னை உரசியபடி பின்னால் நின்றான். ஒரு கையில் எங்கள் விரல்கள் கோர்த்து இருந்தன. மறு கையால் என் தோளில் கை வைத்தான். ஜாக்கெட் பாதி, கழுத்து பாதி என்று அவன் கை என் தோளில் இருந்தது. கூட்டம் இப்போதைக்கு நகர்கிற மாதிரி தெரியவில்லை.