தன்னை தாங்கிக் கொள்ள ஒரு மிகப்பெரிய குடும்பமே இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு தன் சம்பாத்தியத்தில் வாங்கிக் கொண்ட தனி பங்களாவில் உடல் பயிற்சி அறையில் மேல் சட்டை அணியாமல் கீழே பாக்ஸர் மட்டும் அணிந்து கொண்டு பாக்சிங் பேக்கை வெறிக்கொண்டு தன் கரங்களால் குத்திக் கொண்டிருந்தான் திடீரென்று அந்த ஞாபகம் வந்தால் வெறி கொண்டு போனவன் மிருகமாய் மாறி இப்படி ஏதாவது ஒன்று செய்து வைப்பான்...
"ஆஆஆஆஆ என்ன முட்டாளாக்கி என்னை ஏமாத்திட்ட இல்ல நான் தாண்டி உன்ன அழ வைக்கணும் நீ என்ன துடிக்க வச்சு போயிட்ட மறுபடியும் என் கண்ணில் சிக்கிபாரு அன்னிக்கு இருக்கு உனக்கு சிவராத்திரி எங்கடி போன அஞ்சலி இஇஇஇஇ"