இந்த நாவலில் சில எதிரொலிகள் இருக்கின்றன. சில இடங்களில் கணேசனும் - கதை சொல்பவனும் அவர்கள் அடிப்படை மதிப்புகளை நோக்குகையில் இரத்தசம்பந்தமுடையவர்களே. அப்பட்டமாக இல்லை . ஆழமாக என்று தோன்றாமலும் இல்லை. ' இந்த நாவலில் அடித்தளமாக இயங்கும் ஒரு வாழ்க்கை நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் உடன்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'அசடு' என்ற நாவல் ஒரு வெற்றிகரமான படைப்பு என்பது குறித்து யாருக்கும் ஐயமிருக்காது. இதை படித்த பிறகு நம்முள் வளையவரும் நீங்கள், கணேசனை வேறு விதமாகத்தான் பார்ப்பீர்கள். இதைப் படைத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) தமிழில் கவிதைகளும், அசடு என்னும் நாவலும் எழுதிய எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி.
காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தி தமிழை இரண்டாமொழியாக எடுத்து படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்ததால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும்.
இலக்கிய வாழ்க்கை காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் 53வது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.
காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதினார்.
நூல் பட்டியல்
நாவல் அசடு (1978) கிரகங்கள் (1980) வீழ்ந்தவர்கள்
பிற பேசாத மரங்கள் (கவிதை தொகுதி) கோணல் மரம் (சிறுகதைகள்)
காசியபனின் தமிழ் விக்கி பக்கத்தை பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழில் மிகச் சிறந்த நாவல்கள் என்னென்ன என்ற எண்ணம் மனதில் தோன்றும் போதெல்லாம் அவருடைய அசடு நாவல்தான் மின்னிக்கொண்டு முதலில் எழும். என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் அது.
கணேசன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதெல்லாம் பெரும் துணிச்சலான காரியம் என்று நினைக்கிறேன்.
வென்றவர்கள் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, தோற்றவர்கள் பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் எதையுமே செய்யாமல் இருந்தவர்கள் பற்றி நான் இதுவரை படித்த ஒரே நாவல் அசடு மட்டும்தான்.
கணேசன், நாவலின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எதையுமே செய்யவில்லை. எதையுமே செய்யாமல் இருப்பவனை பற்றி என்ன எழுத முடியும்?. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை, ஒரு நாவலில் வரும் உதிரிக் கதாபாத்திரமாக வேண்டுமென்றால் எழுதிச் செல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நாவலின் நாயகனாக ஆக்குவதெல்லாம் சிந்தித்தே பார்க்கமுடியாத ஒரு செயல். ஆனால் காசியபன் அசடு நாவலில் அதைத்தான் சாதித்துக் காட்டியுள்ளார்.
அசடு நாவலில் குறிப்பிடத்தக்க "நிகழ்வு" என்று ஒன்றுமே கிடையாது. ஆனாலும் நாவலின் அந்த நூற்று சொச்ச பக்கங்களில் ஒரு மனிதனின் முழு வாழ்வும் (இருத்தல்) அடங்கியிருக்கிறது.
எந்த தனித்தன்மையும் அற்ற கணேசனின் வாழ்வுபோல்தான் இருக்கிறது அவனுடைய சாவும். ஏதோ ஒரு கோவில் வாசலில் அநாதை பிணம் போல கிடக்கிறான். கணேசனின் ஒரே நண்பனான கதைசொல்லிக்கே அவனுடைய இறப்பு பல மாதங்கள் கழித்துதான் ஒரு துணுக்குச் செய்தி போல வந்தடைகிறது.
கணேசனின் இறப்பை போல்தான் இருக்கிறது இந்நாவலின் இன்றைய நிலையும். யார் விழிகளும் தீண்டாமல் அநாதை பிணம் போல.
வந்துசென்ற உயிரின் காலடித் தடத்தை மண்ணே காட்டும், பறந்து மறையும் பறவைகளில் தடம் வானில் பதிவதே இல்லை.
வாழ்க்கை.. என்பது யாதெனில்..? அது பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள காலம். என்றால், அந்த காலங்கள் எல்லோருக்கும் ஒன்று போல இருக்கிறதா..? இல்லை. எனும் போது, அது எவ்வகைப்பட்டது..? அதற்கென்று குறிப்பிட்ட வரையறைகள் இல்லை. எனினும், சிலவகை பிம்பங்களால் அது கட்டமைக்கப்பட்டுள்ளது.
அவை கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள், செல்வ வளம் என்பது போன்ற சிலவகையான படிநிலைகளால் ஆனது. அதன் எல்லா நிலைகளுக்குள்ளும் சாமர்த்தியம், திறமை, வளம் போன்றவைகள் ஊடுருவியிருக்க வேண்டிய அவசியமும் உண்டு. இவ்வகை படிநிலைகளின் வழியாக ஒரு குறிப்பிட்ட உயர் நிலையை அடையும் வாழ்வே இங்கு வெற்றிகரமானதாகக் கருதப்படுகிறது. இவற்றில் ஒன்றில் கூட சறுக்கி விடக் கூடாது. மீறி சறுக்கி விட்டாலும் அதை வெளிப்படுத்தக் கூடாத ஒரு தந்திர மனோபாவமாவது இருக்க வேண்டும்.
இத்தகைய பிம்பங்களற்ற, இதற்கு மாறுபட்ட வாழ்வை சமூகத்தில் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஏன்..? அவ்வாழ்விற்காட்பட்ட ஒருவன், மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை. ஆக மொத்தம் மனித வாழ்வானது சாமர்த்தியம் என்ற ஒற்றைச் சொல்லால் மட்டுமே சுட்டப்பட்டு... அவ்வாறே கட்டமைக்கவும் பட்டுள்ளது.
இத்தகைய தீர்மானங்கள்… தனி மனிதனின் அகத்திற்கு எவ்வகையிலும் நிகராகி விட முடியாது. அவைகளால் எவ்வகையிலும் ஒரு மனித வாழ்வை வசப்படுத்தி விடவும் இயலாது. யதார்த்த வாழ்வின் வீரியத்தையும், சூழல்களின் தாக்கத்தையும் உங்களது கட்டுமானங்களும் பிம்பங்களும் என்ன செய்து விட முடியும்..? என்று கணேசன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மறைமுகமான அறைகூவல் ஒன்றை விடுகிறார், ஆசிரியர் காசியபன்.
அதற்கு ஆசிரியரின் கதை சொல்லும்…(கூறும் அல்ல..) உத்தி, மேலும் வலு சேர்க்கிறது. நம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, நமக்குத் தெரிந்த ஒருவரின், நாம் அறியாத விசயங்களை சிலபல நினைவுகளினூடாக மேலும் கீழுமாக பயணித்து… நம்மையும் அவர்களுடன் பயணிக்க வைக்கும்.. அலாதியான முறையில் கதை செல்கிறது.. மையக் கதாபாத்திரத்தின் சகோதரனின் வாய்மொழியாக…
பிறக்கும் பொழுதே தாயை இழந்தவன்.. வளரும் பொழுது தந்தையின் அரவணைப்பைப் பெறாதவன்.. கல்வியின் பால் நாட்டமில்லாதவன்… உறவுகளிடம் பிடிப்பில்லாதவன்.. செல்வங்களின் பால் பற்றில்லாதவன்.. பிரத்தியேக உணர்வுகள் என்று வரையறுக்கப்பட்ட எவைகளாலும் கூட சீண்டப்பட முடியாதவன்… என இப்படி எதுவுமே இல்லாதவன் தான் கதை மாந்தர்களால் அசடு என்று உருவகிக்கப்படும் கணேசன்…
தாயற்ற பிள்ளை என்பதனாலும், தந்தையின் மறுமணத்தின் காரணமாக வந்த மாற்றாந்தாயின் பிம்பத்தாலும்… தாய் வழிப் பாட்டியிடம் வளரும் கணேசன் அளவற்ற செல்லத்துடன் வளர்கிறான்.. அதனைக் குறித்த பிறரது கண்டிப்புகளை எல்லாம் பாட்டி அவனை அண்ட விடாமல் காக்கிறாள். நாளொரு செல்லமும் பொழுதொரு அலட்சியமுமாக, விளையாட்டுப் பிள்ளையாகவே… கணேசன் வளர்கிறான்.
இதற்கிடையில், பாட்டியின் உலக வாழ்வு முடிந்து விடுகிறது.. அவரது மரணம், கணேசனின் உலகை திகைப்பில் ஆழ்த்துகிறது.. வாழ்வின் திசை புரியாமல் தடுமாறி தவிக்கிறான். எனினும், தந்தையுடனான உறவு புதிப்பிக்கப்பட்டு அவருடன் செல்கிறான்.. மனது ஒட்டாத அந்த வீட்டில் வெகுகாலம் அவனால் இருக்க முடியாமல் போய் விடுகிறது.. வீட்டை விட்டு சென்று விடுகிறான்..
மனம் போன போக்கிலும், கால் போன போக்கிலும் காலத்தின் பாதையில் செல்லும் கணேசன், சின்ன சின்ன வேலைகளை செய்து பிழைக்கிறான். அவனது வேலை கற்றுக் கொள்ளும் சாமர்த்தியத்தினால் எங்குமே நிலையாக இருக்க முடிவதில்லை. தப்பும் தவறுமாக செய்யும் வேலைகளில் அவனுக்குக் கிடைப்பது என்னவோ அவமானம் தான். ஆயினும் அதையெல்லாம் பொருட்படுத்தாதவனாகவே வலம் வருகிறான்.. நினைத்துக் கொண்ட மாத்திரத்தில் எங்கெங்கோ இருக்கும் கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு விடுவதன் காரணமாக, இடையிடையே காணாமலும் போய் விடுகிறான்.
இந்நிலையில், ஹோட்டல் வைத்திருக்கும் ஆண்டி அய்யர், கணேசனிடம் மிகுந்த அபிமானம் கொள்கிறார். எவ்வித காரணமும் உறவுமற்ற ஒரு பந்தத்தின் பால் அவருக்கு ஒருவகை ப்ரியம் ஏற்பட்டு விடுகிறது. வேலை செய்தாலும் இல்லையென்றாலும் அவனை அங்கேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறார். எனினும் கணேசனின் பிறவி சுபாவத்தினால் அங்கேயும் அவனால் நிலை கொள்ள முடிவதில்லை.. அடிக்கடி அவனது யாத்திரையை மேற்கொண்டு விடுகிறான். இதையறிந்திருந்த ஆண���டி அய்யரும் அத்தகைய சுபாவத்துடனேயே அவனை ஏற்றுக் கொள்கிறார்.
கணேசனது உறவினர்கள் அவனுக்குத் திருமணம் செய்ய உத்தேசிக்கின்றனர். கணேசனுக்கும் கூட சிறிது ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆண்டி அய்யருக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. அவனது சுபாவத்தை முன்னிட்டே அவ்வாறு நினைக்கிறார். இருப்பினும் அவனுக்குத் திருமணமும் நடக்கிறது.
பெரும்பாலும் திருமணங்கள் எல்லோரது வாழ்விலும் ஒரு திருப்புமுனையாகவே அமையும். அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். ஆனால், அதிசயத்தக்க வகையில், அதுவும் கூட கணேசனிடம் தோற்றுத்தான் போய் விடுகிறது.
இல்லற வாழ்வின் பலனாக அவனுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. நடத்தை சரியில்லாத மனைவி, ஒரு நிலைக்குப் பிறகு ஓடிப் போய்விடுகிறாள். அப்போதும் கணேசனது சுபாவத்தில் எள்ளளவும் மாற்றமில்லை.. அவனது இல்லற வாழ்வு மின்னல் கீற்றாக மறைந்து போய் விட.. மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறவன் எவரோடும் தொடர்பற்று, சித்தன் போக்கு சிவன் போக்காக காலத்தைக் கடத்துகிறான்.. இறுதியில், ஒரு கடை வாசலில் பரதேசி கோலத்தில் அவனது காலம் முடிந்து விடுகிறது…
இந்த வாழ்வும் அதன் மனிதர்களும் வஞ்சித்தாலும்… வாழ்வைப் பற்றிய குறைகள் இல்லை… உறவுகளைப் பற்றிய பிணக்குகள் இல்லை.. மனிதர்களைப் பற்றிய குற்றங்கள் இல்லை.. சமூகத்தின் பால் விரக்தியில்லை. ஆனால், எவராலும் கைகொள்ள முடியாத நேர்மையை மட்டும் அவன் எவ்விதத்திலும் கைவிடவில்லை.. இத்தகைய பாத்திரப்படைப்பான கணேசனுக்கென்று.. தனித்துவம் எதுவும் கிடையாது, அவன் ஒரு அசடு என்ற ஆசிரியரின் பிம்பத்திற்குள் மறைந்திருப்பது, இச்சமூகத்தின் வரையறைகளைக் கண்டிக்கும் அவரது தார்மீகக் கோபம்..
கணேசனை எவ்விதத்திலும் உயர்த்தி பிடிக்கவில்லை, எனினும், மற்றைய கதாப்பாத்திரங்களின் சலசலப்பிற்கு இடையிலேயும் கூட, அவனது ஒற்றை பாத்திரம் மட்டும் கதை நெடுக மௌனம் காக்கிறது.. அதுவே அவனில் மட்டுமாக நமது பார்வையை மையம் கொள்ள வைக்கும் தந்திரத்தில்... புலப்படுகிறது ஆசிரியரின் தேர்ந்த எழுத்து நடை.
நடத்தை சரியில்லாத மனைவியை.. நண்பன் மட்டும் தனித்திருக்கும் வீட்டிற்கு அழைத்து வரும் கணேசனின் அந்த இரவும்… ஆசிரியர் அதனைக் கையாண்டிருக்கும் விதமும் மிக மிக அற்புதமானது… அந்த இரவின் அதிர்வலைகள் நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது, என்ன ஆகும் என்ற அலைபாய்தலில் வாசக மனதை சில நொடிகள் பதற்றத்தின் ஆழத்தையும், அடுத்தடுத்த நொடிகளில் நல்ல வேளை என்ற ஆசுவாசத்தையும் ஒருங்கே அளிக்கிறது. விரசங்களுக்கும் விவகாரங்களுக்கும் எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதை நிர்தாட்சண்யமாக நிராகரித்திருக்கும் அதே சமயம், நமது கற்பனைகளுக்கும் ஊகங்களுக்கும் இடைவெளியும் நிரம்ப கிடைக்கிறது.. இவ்வாறு ஒரே செயலின் மூலம், இருவேறு உணர்வு நிலைகளில் மனதை அலைபாய வைக்கும் நேர்த்தி, கதைக்கு கூடுதல் பலம்..
கணேசனைப் பற்றிய எல்லோரது எண்ணங்களையும் வாய்மொழியாகவே கூறும் ஆசிரியர், அவனை.. அவனது மனதை.. உணர்வுகளை எல்லாம் காட்சிகளாகவே மொழிப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே அவனது பாத்திரம் ஒரு படிமமாகவே நம்முள் பதிந்து விடுகிறது.
தாமரையிலைத் தண்ணீராகவே தன்னுடைய வாழ்வைக் கடந்து விடும் திடமும், துணிவும் அவனுக்கு இயல்பாகவே இருக்கிறது என்பதை, அவனது ஒவ்வொரு கடின நிலையிலும் நமக்கு உணர்த்திக் கொண்டே வருகிறார்..
வாசிப்பின் போது, நமக்குள் ஏற்படும் உணர்வு நிலைகள் எல்லாம், ஓ.. அப்படியா.. சரி.. போகட்டும்.. என்பது போன்ற கணேசனின் ஒற்றை உணர்வில் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது.. அந்த அளவிற்கு அவனது படைப்பில் அவ்வளவு நேர்த்தி..
ஒரு பக்கம் சராசரியின் பல்வேறு கிளைகளின் வழி விரிந்து கிடக்கும் வாழ்வில் திளைக்கும் கதை மாந்தர்கள்.. மறுப்பக்கம் சராசரி கூட கிடைக்காத கணேசன்.. என வாழ்வின் மீதான அலைப்புறுதல்களும், பாகுபாடுகளும் கதை நெடுக சுட்டிக் காட்டப்படுகிறது...
அசடு என்று அறிமுகப்படுத்தி.. அதற்கான வர்ணனையினால் அப்படித்தானோ எனக் கருதுவதற்கான இடைவெளியையும் உருவாக்கி… அவனது இயல்பான சுபாவத்தை உணர்த்திய பிறகு, அதன் பால் ஆர்வத்தைக் கிளற செய்து... அடுக்கடுக்கான வாழ்வின் அவலங்களினால் அவன் அடையும் இறுதி நிலையை… நம்முன் காட்டும் ஆசிரியர், கணேசன் அசடா..? என்னும் கேள்வியை நமக்குள்ளாகவே எழுப்பிக் கொள்ளத் தூண்டுகிறார். அதற்கான பதில் அவரவர் உணர்ந்து கொண்டால் போதும், எனும் தொனியில் நக்கல் தெறிக்கிறது.
பிறரது பார்வையில் அசடாக வலம் வரும் ஒருவனின் பார்வையில், பிறர் என்னவாக இருப்பார்கள் என்று கேட்டுக் கொண்டால், கிடைக்கும் பதிலானது நமக்குள்ளும் ஒரு அசட்டுப் புன்னகையையேத் தோற்றுவிக்கிறது…
சின்ன சின்ன உரையாடல்கள், வாழ்வின் மீதான அவலங்கள், மிகைப்படுத்தலில்லாத உணர்வு நிலைகள், சிக்கலான சூழலையும் இலாகவமாக கையாளும் திறன்.. சமரசமற்ற வாழ்வின் அப்பட்டமான மதிப்பீடுகள்.. என ஒரு மனிதனின் வாழ்வை இவ்வளவு குறைந்த பக்கங்களில்.. இவ்வளவு நிறைவாக படைக்க முடியுமா..? முடிந்திருக்கிறதே.. என்னும் ஆச்சரியமே மனதில் மேலோங்கி நிற்கிறது..
1978 ல் வெளியான ஒரு நாவல். ஒரு அசடான பார்ப்பனர் குறித்த கதை. அசடு என்றால் பிழைக்கத்தெரியாதவர்கள், சாமர்த்தியம் அற்றவர்கள், சூது அறியாதவர்கள், பணம் சம்பாதிக்க தெரியாதவர்கள். ஆனால், இவர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். இப்படியான ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த நாவலில் வரும் கனேசன் என்பவருடையது. மிக சிறு பருவத்திலேயே தாயை இழந்துவிடும் கனேசனை அவரது உறவினர்கள் வளர்க்கிறார்கள்.
தாய் இல்லாத பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் கனேசன் ஒரு “அசடாக” வளர்க்கிறார். எந்த ஒரு வேலையும் சரியாக செய்யத்தெரியாமல் வாழ்வில் எப்படி அவர் கஸ்டப்படுகிறார் என்பது தான் கதை. இந்தியா முழுமைக்கும் அவர் சுற்றித்திரிகிறார். அதாவது இந்தியா முழுமைக்கும் அவருக்கு ஏதேனும் ஒரு உறவினர்கள் இருக்கிறார்கள். அங்கு சென்று சில மாதங்களோ, ஆண்டுகளோ இருந்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவார். பிறகு, மீண்டும் சென்றுவிடுவார்.
ஒரு நிலையான வாழ்க்கை அவருக்கு இல்லை. அத்தோடு தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து “ஷேத்திரங்களுக்கும்” சென்று கடவுளை கும்பிடுகிறார். ஆனாலும் அவரது வாழ்க்கை மாறவில்லை. காரணம், அவரது பூர்வ ஜென்ம கர்மா என அவரே ஓர் இடத்தில் சொல்லிவிடுகிறார். அவரது வாழ்க்கை கடைசி வரை மாறவில்லை. திருமணம் ஆகி குழந்தை பிறந்தும், அவர் மனைவி அவருடன் வாழாமல் சென்று விடுகிறார்!
இப்படியான மனிதர்கள் இன்றும் இருக்கலாம். ஆனால், அவர்கள் கனேசன் அளவிற்கு இருக்கிறார்களா என்று தெரியவில்லை!
Story about a man named Ganesan who can't do a menial job properly and his struggle for survival. The language used by author has so many Malayalam words and Brahminical style of writing.