நான் திரைப்படங்களை நடிகர் வாயிலாகப் பார்ப்பதில்லை. இயக்குநர் வழியாக அதன் தரத்தை தீர்மானிப்பேன். அந்த இயக்குநர் எழுத்தாளராக இருக்கின்றாரா? அந்த எண்ணம் கொண்டவராக இருக்கக்கூடியவரா? என்பதனை காட்சி அமைப்பில் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நான் மிகவும் ரசித்த, ஆச்சரியப்பட்ட மூன்று திரைப்படங்கள் 1. அமரன் 2. லக்கி பாஸ்கர் 3. லப்பர் பந்து. இதில் இரண்டு படங்களை இந்த மின்னூலுக்கு தலைப்பாக வைத்துள்ளேன். லக்கி பாஸ்கர் விமர்சனத்தை இதில் எழுதியுள்ளேன். நன்றி.