வரவிருக்கும் பேரண்டத்தின் பெரும் போருக்கு, ஆதியோர்கள் அறுவரின் அவதார்களை பயிற்றுவிப்பதற்காக, இறையோன் அரனின் ஆறாவது அவதாரமான பகவான் பரசுராமர், பொதிகை மலைத்தொடரில் மறைந்திருக்கும் உலகின் கடைசி விண்ணகரமான குமேருவில், ஆழி என்ற விந்தைக்கூடத்தை நிறுவி, பல உகங்களாக அமுதனாய் வாழ்ந்து வருகிறார்.
குமேரு விண்ணகரம், நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் விண்ணவம் ஆகிய ஐம்பூதங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட பூத கணத்தினருக்கும், சக்திவாய்ந்த இறக்கைகள் கொண்ட பறக்கும் வானேறுகள் போன்ற தொன்மாவினங்களுக்கும் தாயகமாகும்.
பூத கணங்கள்:
வானரர்கள் – குரங்கும் மனிதனும் கலந்த இனம்இயக்கர்கள் – குள்ள மனிதர்கள்அரக்கர்கள் – மாபெரும் மனிதர்கள்
#362 Book 33 of 2025- ஆழி~ஆதியோர்களின் அவதார்கள் Author- மாணிக் Rating- ⭐️⭐️⭐️⭐️⭐️
தமிழில் fantasy fiction genre-இல் கடந்த சில வருடங்களாக நிறைய புத்தகங்கள் வருகிறது. ஒவ்வொன்றும் ஒரு புது அனுபவத்தை கட்டாயமாக தருகிறது.அதே வரிசையில் தான் இந்த படைப்பும். இன்னும் பிரம்மாண்டமாக!
இந்த நூல் இந்திய புராணக் கதைகளின் அடித்தளத்தில் எழுதப்பட்டாலும், இது ஒரு purely imagined mythological fantasy universe. அதாவது புராணப் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மாயங்களும், மர்மங்களும் சூழ்ந்த குமேரு என்ற பொன்னகரத்தில் பகவான் பரசுராமர் யுகங்களாக அமரராக வாழ்ந்து வருகிறார். அவர் நடத்தும் “ஆழி” என்ற academy-யில் பூமியில் மீண்டும் தோன்றியருக்கும் 60 அவதாரங்களும் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பெரும் போருக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கே இந்த பயிற்சி. மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த கதைக்களம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு திருப்பத்தோடு முடிகிறது. மாணவர்களுக்கும் வரும் போட்டியும்,அந்த போட்டியால் அவர்கள் எதிர்கொள்ளும் தேடலும்,திருப்பங்களும் வாசிப்பு அனுபவத்தை இன்னும் அழகாக்கிறது.
Harry Potter, Lord of the Rings, Percy Jackson & the Olympians மாதிரியான புனைவுகள் பிடித்தவங்களுக்கு இது ஒரு perfect Tamil counterpart. இந்த கதையின் எழுத்துநடை இதன் பெரிய பலம். வேதம், புராணம், சமயக் கூறுகள் எல்லாம் புரியும்படியாக எழுதியிருக்கிறார். பல விஷயங்கள் அருகில் இருந்து உணரும் வகையில் இருக்கிறது.
புதிய உலகங்கள், தத்துவ புனைவுகள், யதார்த்தமான அனுபவங்கள் ~இதை எல்லாம் ஒரு புத்தகத்தில் சேர்க்க முடியும் என்பதற்கு ஆழி தான் உதாரணம்.
#reviewcopy #paidcollab Note- This is a paid collab (#reviewcopy), but my review is 100% honest and based on my true reading experience.