எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு 18 வயதில் மாடலாகப்போகிறேன் என்று மும்பைக்கு ஓடிப்போன சஹானா முப்பது வயதில் மீண்டும் கோத்தகிரிக்கு வருகிறாள். அடுத்த வேளை சாப்பாட்டிற்கு இல்லை ஆனாலும் அவளின் உடன்பிறந்த திமிரும், நக்கலும் அப்படியே இருக்கிறது. அவள் சென்றதில் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்ட வருண், ரேகா, சுதர்ஷன் அனைவரும் அவள் வருகையை வித விதமாக அணுகுகிறார்கள்.
அழகான கோத்தகிரி மலையில் வாழும் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் முள்வேலியா? முல்லைப்பூவா? சஹானா யாருக்கு முள்ளாக, யாருக்கு முல்லைப்பூவாக இருப்பாள்? இதில் சுதர்ஷனுக்கு திருமணம் முடிக்கத் துடிக்கும் பாட்டி கமலம், வருணுக்கு மறுமணம் செய்ய நினைக்கும் தாய் என்று அனைவரும் சஹானாவை ஜோடி சேர