சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப் பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புலப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து குரல்வளை நெரிக்கப்படுகிறது.
இந்தச் சுதந்திரம் கூட இல்லாமல், எல்லாம் எதற்கென்று தோன்றுகிறது.
நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்... கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும் பிஸ்கெட் போலச் சில பரிசுகள், நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டுகளித்தலா என்று தெரியவில்லை.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
நாஞ்சில் நாடனின் அவர்களின் படைப்புகளில் நான் படிக்கும் முதல் புதினம் இது. நாகர்கோவில் பேச்சு வழக்கம் அதிகம் பரிச்சயம் இல்லாத காரணத்தினால் சில இடங்களில் தடுமாறினேன் . முதல் பாதி மிக விறு விறு . இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வு காட்டியது. கதைக்களம் பல்வேறு சுவாரசியமான இடங்களில் நடந்தாலும் , பூலிங்கம் பயணிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நிகழும் நிகழ்வுகள் ஒரே மாதிரியான பாங்கு உடையதாக நான் உணர்ந்தேன். ஒரு சம்பவம் எப்படி அதில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை புரட்டிப்போடுகிறது என்பதை சொல்லும் கதை . ஆரம்ப பிரச்சனையின் பாதிக்கப்பட்ட அப்பாவி கதை மாந்தர்களே , பின்னர் முடிவில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வாக ஆகிறார்கள் ,ஜப்பானிய ஜென் பௌத்தத்தின் என்சோ எனப்படும் வட்டத்தைப்போல .... யதார்த்த Gerontophilia (தன்னை விட வயதில் மூத்தவர்கள் மேல் கொள்ளும் பாலியல் ஈர்ப்பு) கதையெங்கும் விரவிக்கிடப்பது நெருடலாக தெரியவில்லை. ஆனால் ஆசிரியரின் obsession towards ablution (குளியல்) எரிச்சல் . கதை நாயகன் எனக்கு தெரிய 20 முறைக்குமேல் இக்கதையில் குளிக்கிறேன் . Worth a casual read.
எட்டுத் திக்கும் மதயானை ❤️ • திண்டாடும் வாழ்வின் அன்றாடத்தினை எழுத்தின் வலிமையுடன் இக்கதையில் வென்றாடியிருக்கிறார் நாஞ்சில் நாடன். வரிகளில் விளையாடிய மொழி வழக்கும் வார்த்தைப்பிரயோகங்களும் வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்கியது. 1999ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு இது. பழைய புத்தகத்தின் அணுக்கமாதலால் இன்னும் தனியின்பம். • செய்யாத்தவறுக்கு தண்டனை ஏற்கும் ஒருவன், அதன்பின் அவன் வாழ்வில் தண்டனைகளேதும் ஏற்காமல் செய்யும் தவறுகள், சந்திக்கும் மனிதர்கள், சிந்திக்கவிடா பிரச்சினைகள், சுமக்கமுடியா பாவச்சுமைகள், பணப் பிசாசின் பசி நாவுகள், நகரத்தின் நரக வாசல்கள், இயல்பான மனித உணர்வுகள் என வாழ்க்கைச் சக்கரத்தின் எல்லாப் பக்கங்களையும் விறுவிறுப்பாக உரசிச் செல்கிறது கதை. • வாழ்க்கை நேர்கோடுமல்ல, அழகாக பின்னப்பட்ட சிலந்திவலையுமல்ல, எதையோ தேடிப்போகும் நேர்கோட்டில் அந்தந்த நிமிடத்தில் போடப்படும் முடிச்சுக்களும் அவிழ்க்க விளையும் திருப்பங்களில் போடப்படும் அடித்த முடிச்சுக்களுமாக ஓர் ஒழுங்கற்ற அழுக்குப்படிந்த அடர்த்தியான சிக்கல். வெளிச்சமில்லா வீதியில் போகும் விளக்கற்ற பயணம். • “துன்பப்படுவதுதான் வாழ்வின் சத்தும் சாரமும் என்றால் எதற்கு இந்த வாழ்க்கை? எந்தக் கானல் நீரைத் தேடி, நாத்தொங்க, மூச்சிரைக்க, கண்கள் மயங்க, அடிவயிறு எக்க இந்த ஒட்டம்?”
#309 Book 70 of 2024- எட்டுத்திக்கும் மதயானை Author- நாஞ்சில் நாடன்
“துன்பப்படுவதுதான் வாழ்வின் சத்தும் சாரமும் என்றால் எதற்கு இந்த வாழ்க்கை? எந்தக் கானல் நீரைத் தேடி, நாத்தொங்க, மூச்சிரைக்க, கண்கள் மயங்க, அடிவயிறு எக்க இந்த ஓட்டம்?”
“நாஞ்சில் நாடன்” எழுதிய புத்தகம் என்றால் எதையும் யோசிக்காமல் அப்படியே படித்து விட வேண்டும். இது நான் வாசித்த நான்காவது நாஞ்சில் நாடன் படைப்பு. முதல் மூன்று ஏற்படுத்திய அதே தாக்கம்,அதே பிரம்மிப்பு,அதே வாஞ்சை இதிலும் இருந்தது.
“பூலிங்கம்” என்ற கிராமத்து இளைஞனைப் பற்றிய கதை இது. அவன் செய்யாத தவறுக்கு,ஊருக்கு பயந்து வெளியூருக்கு செல்கிறான்.அங்கு அவன் தெரிந்தே எல்லா தவறுகளையும் செய்கிறான்.ஆனால்,மாட்டிக்கொள்ளவும் இல்லை,தண்டனையும் இல்லை. அப்படியே காலம் நகர்கிறது,இடையில் ஒரு முறைக் கூட சொந்த ஊருக்கு செல்லவே இல்லை. அவ்வப்போது பணம் மட்டும் அனுப்பி வருகிறான்.அவன் ஊரிலிருந்து ஏதேச்சையாக ஒரு நபரை சந்திக்க நேர்கிறது.அதன் பின் வரும் திருப்பங்களே கதை!
மனித வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது தான். ஆனால்,அதை தத்ரூபமாக எழுத்தில் வடிப்பது அத்தனை எளிதல்ல! அதை ஒவ்வொரு முறையும் இவரது எழுத்தில் பார்க்கலாம். கிராமத்து வாழ்க்கை,மரபு,கட்டமைப்புகளை அழகாக கையாண்டிருப்பார்.
மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை நியாயமாக நடத்த முயற்சிக்கின்றனர், ஆனால் அதற்கு அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், சிக்கல்கள், மற்றும் அழுத்தங்கள் நம்மை மாற்றி விடுகிறது. தங்கள் வாழ்க்கையில் உரிமைகளை நிலைநிறுத்தவும், துன்பத்திலிருந்து விடுபடவும் அவர்கள் எடுக்கும் முடிவுகள்,அதன் பின் வரும் தாக்கங்களை இவர் இதில் விவரித்திருக்கும் விதம் அபாரம்.
இவரின் வட்டார மொழிநடையைப் பற்றி எத்தனை எழுதினாலும் மிகை ஆகாது! ஒரு சாதாரண கதையை,ஒரு பெரும் படைப்பாக மாற்றும் இவரது எழுத்து நடை,உணர்வுகளை கண்ணாடி போல் காட்டும் கதைக்களம்,இறுதியில் இயல்பான,எதார்த்தமான ஒரு முடிவு என இந்த புத்தகம் எல்லா வகையிலும் மிளிர்கிறது.
My Rating- ⭐️⭐️⭐️⭐️⭐️ Available on- Amazon/Panuval bookstore
அடி மட்ட மக்களின் வாழ்வை அப்படியே பிரதி எடுக்கும் நாவல். சலிக்காத எழுத்து நடை. இடையே துள்ளி வரும் நய்யாண்டி. தத்துவ விசாரத்தோடு வாழ்வின் விழைவுகளை நிதர்சனத்தை சல்லித்தனத்தை பெருந்தன்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. இத்தனை கொடும் உலகத்திலும் நல்லவர்கள் இருப்பதை காட்டி நம்பிக்கை அளிக்கிறது. தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரின் படைப்பு - மிகச் சிறப்பு!
ஒரு புள்ளியாய் தொடங்கி நேர்கோடாய் எவ்வித தடங்கலுமின்றி பயணித்து, கடைசியில் ஒரு முற்றுபுள்ளியாய் முடிவதில்லை வாழ்க்கை. இதை சாரமாய் கொண்டு புனையப்பட்ட நாவல் இது.
கடைக்கோடி பாரத தேசமாம் நாஞ்சில் நாட்டில்(நாகர் கோவில்) இருந்து, தான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து, பின் உயிருக்கு பயந்து ஆந்திரம், கர்நாடகம், கோவா, மராட்டியம், மும்பை என அலைந்து பிழைக்கும் ஒருவனின்(பூலிங்கம்) கதையை, தத்துவார்த்த விளக்கங்களுடன் சொல்லும் நாவல்.
மீன்/கோழி சாப்பிடும் ஒருவனை, வேறு வழியே இல்லை இனி நீயே உன் உணவை பிடித்து உண்ண வேண்டும் என்று சொன்னால்..ஒன்று அவன் பட்டினி கிடந்த�� சாக வேண்டும் அல்லது தான் உயிர் வாழ எப்பாடு பட்டாவது, அவைகளை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டு தன்னுடைய இருத்தலியலை நிரூபிக்க போராட வேண்டும்...அப்பேர்பட்ட உணர்வை இப்புத்தகத்தை வாசிக்கையில் பெற முடிகிறது.
ஒருவன்., எந்த நேரத்திலும், எந்த வகையிலும், எந்த திக்கிலிருந்தும் தன்னை சுற்றி மத யானைகளாய் வரும் பிரச்னைகளை எதிர் நோக்கி இருக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்வியல் பாடத்தை நாம் இந்நாவல் மூலம் பெற முடிகிறது!
இயக்குனர்கள் - ராசு மதுரவன்(அமரர்), சாமி, சீனு ராமசாமி யாராவது ஒருவர் இந்நாவலை படமாக்க முனைந்தால் பொருத்தமாக இருக்கும். அல்லது இந்நாவலை வாசிக்கையில் இவர்களது படம் போல, நம் கண்முன் இக்கதையின் காட்சிகள் விரியும்.
வாசிப்பிலும் அயர்ச்சி ஏற்படுத்தாமல்.., அதாவது முன்னுரை முதல் கடைசி அத்தியாயம் வரை...அதை வேகம் என சொல்லமுடியாது...ஆவலை தூண்டும் விதமான ஒரு எழுத்து வர்ணனையாய் இருப்பதால் புத்தகத்தை கீழே வைக்க தோன்றவில்லை. முடிந்த அளவில் சீக்கிரம் படித்தாகிவிட்டது. கிடைத்தால் மறுக்காமல் வாங்கி படிக்கலாம்.
பி.கு: என்ன ஒரே நெருடல் என்றால்...பூலிங்கமோ, அவன் ஊரை சேர்ந்தவர்களோ நாகர்கோவில் பேச்சு வழக்கில் பேசுவது சரி...ஆனால் பிற மாநில கதை மாந்தர்களும் நாஞ்சில் பேச்சு வழக்கையே பயன்படுத்துவதாக எழுதியிருப்பது.,சிறிது ஒட்டவில்லை...ஆனால், கதையின் காற்றாட்டு ஓட்டத்தில் இது ஒரு பெரும் பொருட்டாக இராது
This entire review has been hidden because of spoilers.
கதை நெடுகிலும் நாஞ்சில் வட்டார மொழியும் வட்டார பண்பாட்டு கூறுகளும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நாஞ்சில் நாட்டில் ஒரு கிராமத்தில் ஆழ்மனதில் மூண்ட அக்கினி தீயினால் செய்த ஒரு காரியத்தினால் ஊரை விட்டு ஓடிவரும் பூலிங்கத்தின் வாழ்க்கையை தேடும் பயணமே இந்த நாவல்... பேர் ஆற்றங்கரையில் நின்று ஆற்றாமயோடு ஒருவனின் தத்தளிக்கும் போராட்டத்தை பார்ப்பது போல் உள்ளது.. ரயில் பயன்களும் ரயில்வே ஸ்டேஷன்ங்களும் எத்தனை திக்கற்று ஓடியவனுக்கு வாழ்வளித்து உள்ளது, உறுதெரியாது விழுங்கியிருக்கவும் கூடும்... வெளியே தெரியாது குற்றம் செய்பவன் யோகியின் வெளியே தெரிந்து குற்றம் செய்பவன் அயோகியன்..அடையாளம் அற்று வாழும் ஒருவன் எதற்கு அஞ்சுவதில்லை.. வாழ்வே அவனுக்கு பிரதானம்...தன் இருப்பே பிரதானம்... வெளிய தெரியாத எவ்வளவு ரகசியம் பூட்டி வைக்கப்பட்டு பின்னர் ஒருவன் எரியும் போது சாம்பலாகவோ, புதைக்க படும் போதோ புழுகளுக்கு உணவாகவோ மாறி விடுகிறது.. நெடுஞ்சாலையில் புது வாழ்வு தேடி பயணம் தொடங்குகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுடலை மாடன் காத்து அருள்வானாக 🖤
A nice novel about a life of an ordinary man. The twists and turns of events that lead to the character going to various troubles in life. The native accent of the South of Tamil nadu resonates throughout the novel. The characters portrayed exhibits the bitter realities of how normal people, government staff, etc behave.
Its very dry read story like entering into gents hostel 😊. but the perspective from the guys side story telling is quite impressive and good awareness for the young ones who doesn’t have proper guidances.
I like the writer's writing. But this is definitely not his best work. Can't able to connect with this book. Like his previous works. Still this book is amazing.