கொங்கு வட்டார பேச்சு வழக்குகளையும் சொல்லாடல்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். Colloquial நடையை பயன்படுத்தியுள்ளதாலும், அன்றாடம் அதே பேச்சு வழக்குகளில் கரூரில் வசிப்பதாலும் எனக்கு அப்படியே நாவவில் ஒன்றிப் படிக்க சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.
பண்ணையம் பங்கு பங்கறது சம்மந்தமாக வரும் அத்தியாயம் 5 தான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களும், அதை சார்ந்து அவர்கள் பேசுவதையும் மிக அருமையாக வடித்துள்ளார்.
முத்துச்சாமியின் இந்த வலியை நான் ரொம்ப உணர்ந்துள்ளேன், துரதிஷ்டமாக சாமியப்பன் போன்றோரைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.
எழுத்தாளர், பங்கு வர்த்தக நிபுணர். அவர் பாஷையில் சொல்லனும்னா, " The stock குருத்தோலை has very good fundamentals and the investor is sure to reap rich & high Emotional Dividends. One can expect much more from the parent company, Chellamuthu Kuppusamy. "
கோவை புத்தக திருவிழாவில் வாங்கிய நடுகல் பதிப்பக வெளியீடான திரு.செல்லமுத்து குப்புசாமி அவர்களின் குருத்தோலை புத்தகத்தை தூக்கம் தொலைந்த நேற்றைய நள்ளிரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!. கொங்கு வட்டார வழக்கில் மிக இயல்பாக எழுதியிருக்கிறார். விவசாயக் குடும்பங்களில் அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் சொத்து பிரித்தல் முதல், சகோதரி பாசம், மாமியார் மருமகள் சண்டை, திருமண சடங்குகள், கிண்டல் பேச்சுக்கள், அந்த சமுதாயத்தினரின் கடுமையான உழைப்பு போன்றவற்றை கதையின் போக்கிலேயே அழகாக கையாண்டிருக்கிறார் முதல் அத்தியாயத்தில் பாப்பியும் முத்துசாமியும் சந்திக்கும் போது நடந்த சமாச்சாரத்தை கொஞ்சம் இலைமறை காய்மறையாக எழுதியிருக்கலாம். அதேபோல் ஆரவல்லியை பற்றிய ஒரு வர்னணையும், முத்துசாமியின் முதலிரவில் ஒரு இடமும் நேரடியாக இருந்தது. இவற்றை தவிர்த்திருந்தால் U சர்ட்டிபிகேட் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்!