‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.
மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் ஸி.வி. இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ஆனால் திரு. நீல. பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரணத் தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் ‘பள்ளிகொண்டபுரம்.’
Neela Padmanabhan is a Tamil writer and translator. He also writes in Malayalaman. He obtained a B. Sc in Physics and a degree in Electrical Engineering from Kerala University. He worked in the Kerala State Electricity Board till his retirement in 1993. His first noted work was the novel Thalaimuraigal (lit. Generations). He writes novels, short stories, poetry and essays in Tamil. In Malayalam, he has published a novel, some short story collections and a single essay collection. Besides Tamil and Malayalam, he also has a few English works to his credit. During 1985-89 he was the Tamil editor at Sahitya Akademi and was the convener of the Akademi's Tamil advisory board during 1998-2002. In 2007, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Ilai uthir kaalam(lit. Autumn). He had earlier won the Akademi's award for translators in 2003 for his translation of Ayyappa Paniker's works into Tamil. In 2010, his novel Thalaimuraigal was made into a Tamil film titled Magizhchi (lit. Happiness). His most noted work is his novel Pallikondapuram.(lit. Where the Lord sleeps). He currently lives in Thiruvananthapuram.
தனி மனித வாழ்வில் இளைஞனாய் உருவெடுத்து அந்தம் வரை தொடரும் திருமணபந்தம், குழந்தைகளோடான உறவு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் என அனைத்து சாராம்சங்களையும் எதார்த்தமான விவரணையோடு சொல்லுவதே பள்ளிகொண்டபுரம் கதையின் உட்கரு.. கதைக் களம் திருவனந்தபுரத்தின் பெயரை தாங்கி நிற்கவில்லையென்றாலும் திருவனந்தப்புர பத்மநாபக் கோவிலையையும் அதனைச் சுற்றியுமே. கதையின் காலக்கட்டம் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தொடங்கியும் அதற்கு முன்னே உள்ள மூன்று தலைமுறைகளைப் பற்றி நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் சிந்திப்பதே. கதையின் ஆசிரியர் நீல.பத்மநாபன். முதல் பதிப்பு 1970 ளில் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு தற்போது காலச்சுவடில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் , தேரோடும் வீதி , பைல்கள், உறவுகள் எனத் தொடர்ந்து இன்னும் பல. இலையுதிர் காலம் எனும் புதினத்திற்காய் 2007 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுள்ளார். கதையின் ஆசிரியர் எழுத்து நடையின் மூலம் ஒவ்வொரு இடத்தின் சூழ்நிலைகளையும், நிகழ்வுகளையும், காட்சிப்படுத்துவதில் மிளிர்கிறார். திருவனந்தப்புர பத்மநாபக் கோவிலின் விவரணைகளும் அதன் வரலாறும் அருமை. நடையின் மொழியில் கேரள மொழியின் வாடை அதிகம் வீசியிருந்தாலும் மொழியைப்பற்றிய ஆர்வமிருந்தால் அதன் எழுத்து நடைப் பாதிப்புகளை கொடுப்பதில்லை. கதையின் உள்ளமைப்பில் அனந்த நாயர் எனும் கதாப்பாத்திரத்தில் தொடங்கி அவரது குடும்பப் பின்னல்களிலேயே நகருகிறது, குடும்பத்தில் அவருக்கும் மனையாளுமான கார்த்தியாயினிக்குமான உறவில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை பெண் பார்க்கும் படலத்திலேயே தொடர்ந்து பின் படிப்படியாக சந்தேகமென்ற நோயினிற்குட்கொண்டு நாயகனை ஆட்டிப்படைக்கும் ஆற்றாமையும் அதனுள் கொண்டு ஏற்படும் மோதல்களும் பின்விளைவாய் பிரிவும் பின்னர் குற்றப்பொருத்தல்களும் என விரிந்து தன் குழந்தைகளோடான மகன் மகள் உறவில் ஏற்படுத்தும் வித்யாசங்களும் மகன் தகப்பன் மீது காட்டும் அபரிமிதமான வெறுப்புச்சூழலாய் நகர்ந்தொடுங்குகிறது. கதையின் மாந்தர்கள் ஒருவரையொருவர் குற்றம் காணும் பட்சத்தில் தனக்குள்ளான குற்றங்களை மறந்து விடுவதை கதையினூடே காணலாம். அத்தியாவசியத் தேவைக்கே சிரமப்படும் காலக்கட்டத்தில் தனக்கு மேல் மட்டத்திலும் அதிகாரவர்க்கத்திலும் உள்ளவரின் சூழ்ச்சியை எதிர்கொள்ள் இயலாமால் தனதாற்றாமையை பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கும் தாழ்வு மனப்பான்மைக்கு எண்ணையூற்றி தன் குடும்பத்தை தானே அறியாமல் எரியூட்டுகிறார். அதே நேரம் மனையாளின் மனோநிலையில் அவருக்கு ஏற்படும் மாறுபாடு பந்தத்தை முறிக்கச் செய்து பெண்ணை சுயநலப்படுத்த பிரயத்தனம் செய்கிறார் கதையின் முக்கிய மாந்தரான அனந்தன் நாயர். அதே நேரத்தில் அனந்த நாயரின் கோபம், அடி , காசநோய் எனக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் மனையாளுக்கு அவரை விட்டு பிரிந்து வேறொருவருடன் பந்தத்தை நீடிக்கச் செய்வதற்கான காரணம் பொருளாதாரச் சூழல் மட்டுமா என்ற எனக்குள்ள கேள்வியோடு நகர்கிறது. உறவில் பிரிவும் அதன்பின் நடைபெறும் அசௌகரியச் சுழலும் கார்த்தியாயினியைப் பழைய வாழ்விற்கு திரும்பச் சொல்லும் நேரத்தில் கணவனின் ஆலோசனைப் படி வாழ்வை முன்னோக்கி நகர்த்தும் நேரத்தில் அனந்தநாயருக்கும் கார்த்தியாயினிக்கும் பிறந்த மகனான பிரபாகரன் நாயரிடத்தில் தாங்கள் இருவருக்குமான உறவின் முறிவின் காரணத்தை தனக்குரிய விதமாய் சொல்லி தகப்பனுக்கும் மகனுக்குமான உறவைச் சீர்குலைப்பதும் கதையின் பிழையா தெரியவில்லை. மேலும் பிரபாகரன் நாயர் ஒட்டு மொத்தமாய் தகப்பனைக் குற்றப்படுத்தி வீழ்த்துவதும் வாழ்வைப் கேலிப் பொருளாக்கி பொருளாதார வளத்தை மையப்படுத்தி உறவுகளின் ஒழுக்கத்தை பிழைக்குள்ளாக்குவது சமகாலச் சுழலொடுப் பொருத்தப்பட்டு போகிறது. கதை அக்காலத்தில் சாதீயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதனால் சமூகங்களுக்குள் ஏற்படும் ஆற்றாமையும் , ஒடுங்கள்களையும் , கலப்பின் வழித் தோன்றல்களையும் அதனால் ஏற்படும் சந்ததிகளின் உறவுமுறைச் சிக்கல்களையும் அதனை எதிர்கொள்ளும் மனப்போக்கும் அதற்கு ஒடுங்க பொருளாதாரச் சூழலையும், அரசியலில் கலப்பினத் திருமணங்களுக்காய் உண்டாகும் எழுச்சியுமாய் பொருத்தியிருப்பது பிரமிப்பில். உறவுக்குள்ளான சுயநலப்பந்தங்களால் பரஸ்பரம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் இருவருமே சமகாலத்தில் நோக்கும் சமயம் சுயநலக் குற்றவாளிகளே. இல்லற பந்தம் என்பது நூல் பந்தமா ? புலனிச்சை போக்கியா ? சமூக பாதுகாப்பிற்காகவா ? சந்ததி உருவாக்கலா ? என்ற கேள்விகளை விட பரஸ்பரம் புரிந்து அன்பு செலுத்தி இக்கட்டான சூழ்நிலைகளில் தோள் கொடுத்து வாழும் சுயநலமில்லா வாழ்க்கையே . இதைப் பள்ளிகொண்டபுரம் சொல்லுகிறதோ இல்லையோ இன்றைய காலக்கட்டம் இக்கதையோடு பொருந்தி சுயநலவாழ்க்கையை இல்லறப்பந்தத்தோடு பொருத்தி அதன் விளைவுகளையும் ஆற்றாமையும் சொல்லியிருப்பதன் மூலம் ஆசிரியரின் தொலைநோக்குச் சிந்தனை வெற்றிக் களத்தை தொட்டுவிடுகிறது.....
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னளவில் அன்பு, பரிவு, கடமை, உரிமை போன்றவற்றோடு பெருமை, அகங்காரம், தன்னலம் போன்றவையும் இருக்கவே செய்கிறது. எனினும், வாழ்க்கையின் போராட்டங்களில் சில முன் நிற்கும், சில பின் தள்ளிப் போகும். இன்னும் சில ஊசலாடியவாறு அம்மனிதனை அலைகழிக்கும். ஆனால், எது என்ற போதும் சுயம் என்பதன் அடித்தளத்தின் மேலேயே அது அத்தனையும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
சுயம் என்பது எப்போதும் தன்னைச் சார்ந்து மட்டுமே நிற்பதல்ல. பிறர் பால் நாம் கொண்டுள்ள அன்பு, நம்பிக்கை, கௌரவம், மரியாதை, காதல் என இப்படிப் பிறரைச் சார்ந்தும் நிற்கும். அப்படிப்பட்ட வேளைகளில் அவைகள் பொய்த்துப் போகும் போது எழும் வலியும் வேதனையும் அச்சுயத்தையும், அதன் மனிதனையும் அடியோடு சாய்த்து விடும்.
அப்படி ஒரு நிலையால் ஆட்கொள்ளப்பட்டவர் தான் அனந்தநாயர். அவரது இரு நாட்களின் நினைவலைகளில், அவர் கடந்து வந்த ஐம்பது வருட வாழ்வை காட்சிப்படுத்துகிறது இப்புதினம்.
அனந்தநாயர்… வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்து வந்து, தனது ஐம்பதாவது வயதில் நின்று கொண்டு, தன் வாழ்வை மீண்டும் திரும்பிப் பார்க்கிறார். திருவனந்தபுரத்தின் வீதிகளும், பத்மநாப சுவாமி கோயிலும், அங்குள்ள மனிதர்களும் அவருக்கு மீண்டும் மீண்டும் அவர் வாழ்வின் சுவடுகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.
அனந்தநாயரின் மனைவி கார்த்தியாயினி, அவரையும் இரு குழந்தைகளையும் விட்டு விட்டு, வேறொரு திருமணம் செய்து கொண்டு போய் விட, அவர் இரு பிள்ளைகளுடன் தனித்து நின்று விடுகின்றார்.
காலம் கடக்க, பிரபாகரன், மாதவிக்குட்டி என அவரது பிள்ளைகளும் பெரியவர்களாகி தனித்தனியான சிந்தனைகளுடன் ��த்தம் வாழ்வை சிந்திப்பதில் விசனம் கொள்கிறார்.
பிள்ளைகள் அவரவர் வாழ்க்கை என செல்கிறார்கள். எனில், தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கான பொருள் என்ன? இனிமேல் வாழப்போகும் வாழ்விற்கான பிடிமானம் என்ன? எனும் கேள்விகளில், அவருள் விரியும் கடந்த காலம், நம்முன் காட்சிப்படுத்தப்படுகிறது.
அரண்மனை ஊழியராகப் பணி புரியும் அனந்தநாயர், அவர்தம் குடும்ப நிலை, அவர்களுக்கான மரியாதை, அவ்வூரில் அவருக்கான செல்வாக்கு, கௌரவம், அவரது மனைவியுடனான இல்லற வாழ்வு, அவருடைய பிரிவு, அதன் பின்னான அவருடைய வாழ்வின் சரிவு, பின் தனியனாக பிள்ளைகளின் வளர்ப்பு, இன்றைய அவரது குமாஸ்தா வேலை என நிகழ்காலமும் கடந்த காலமும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
அவர் நடந்து செல்லும் திருவனந்தபுர வீதிகள் அவரது எண்ணங்களை ஆக்ரமிக்கின்றன. அவர் கண்டு உரையாடும் மனிதர்கள் அவ்வெண்ணங்களின் நிகழ்வுகளை விரிவுபடுத்துகின்றனர். அதில் அவர் உணரும் காலமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அதிலிருந்து விலகிச் செல்லவும் இயலாமல், தத்தளித்து தவிக்கிறார்.
அனந்த நாயரின் வாழ்வின் வீழ்ச்சிக்கு அவரது ஆண் எனும் அகங்காரம் தான் காரணம் என்பதை நம்மிடம் உணர்த்தும் அதே வேளையில், அவர் அதனை உணர மறுக்கிறார். அது தான் இயல்பு, அது தான் தன் சுயம் என வாதிடுகிறார். அந்த சுயத்திற்கு மிகப்பெரிய அடியைத் தருகிறான் அவரது மகன், பிரபாகரன்.
அவரது இத்தனை வருட தியாக வாழ்விற்கு அவரது பிள்ளை பிரபாகரனால் அடி விழும் போது, அங்கே தியாகத்தின் பால் கட்டப்பட்ட, அவரது சுயம் பலமிழந்து போகிறது. அத்தனை சுலபமாக அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.
பொதுவாக, தாய் பாதை மாறிப் போனால், மகன் எனும் ஆண் அவளை அடியோடு வெறுத்து ஒதுக்குவது தான், தமிழ் மனங்களின் பிம்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் காட்டப்படும் பிரபாகரன், தாயிடமே தன் ஆதரவை நல்குகிறான். மாறாக, தந்தையின் இயலாமையை புறக்கணிக்கிறான். இது கேரளாவின் தாய் வழிச் சமுதாயப் பண்பாட்டை அவர்களது வாழ்க்கை முறையின் வழியாகக் காட்டுகிறது.
தன் வாழ்வை நம்முன் அப்படியே காட்சிப்படுத்தும் அவர், கூடவே நம்முடைய பரிதாபத்தையும், மிக அழுத்தமாகக் கோருகிறார். அந்த அளவிற்கு அவரது தத்தளிப்பும், தடுமாற்றமும், தனிமையும், இயலாமையும் கதை நெடுக ஊடுபாவாக இழைந்து செல்கிறது.
அனந்த நாயரின் மனச்சித்திரத்தின் வழி, நாமும் திருவனந்தபுர வீதிகளில் அலைகிறோம், அம்மனிதர்களுடன் உரையாடுகிறோம். கடந்த காலம், நிகழ்காலம் என மாறி மாறி வந்தாலும் கூட, ஒரு தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த அளவிற்கு அத்தனை இலாவகமாகக் காட்சிப்படுத்துகிறது ஆசிரியரின் எளிய மொழி நடை.
திருவனந்தபுரத்தின் வீதிகள், கோயில்கள், சாலைகள், கடைகள், மனிதர்கள் என அனைத்தையும் பற்றிய வர்ணனைகள், அவற்றோடு மட்டும் முடிவடையாமல், வாழ்வியல் தோற்றங்களோடு அடையாளப்படுத்தப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.
திருவனந்தபுரத்தின் குறுக்குவெட்டில், ஐம்பது வயதான அனந்தன் நாயரின் நாற்பத்தெட்டு மணி நேர வாழ்க்கையும் ஐம்பது வயதான அனந்தன் நாயரின் வாழ்கையின் நாற்பத்தெட்டு மணி நேர குறுக்குவெட்டில் 40, 50 களின் திருவனந்தபுரமும் தான் நாவல்.
நம் எல்லோரிடமுமே நாம் செய்தது, செய்துகொண்டிருப்பது எல்லாம் மிகச் சரியானவையே என நியாயப்படுத்துகின்ற குணம் எம்மை அறியாமலேயே நிரம்பியிருக்கிறது. நாம் செய்தவற்றை சரியென நிரூபிக்க எந்தளவு தூரம் அடிமட்டத்துக்கு இறங்குவதற்கும் எமது மனங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறன. இந் நாவலின் முதல் வரி தொடக்கம் கடைசி வரி வரைக்கும் இதன் நாயகனான அனந்தன் நாயரும் இதைத்தான் செய்ய முயல்கிறார்.
முதல் வாசிப்பில் அனந்தன் நாயரோடு ஒத்துப்போகும் நாம் இரண்டாம் வாசிப்பில் அவரை முற்றாக மறுதலிப்போம். இதன் மறுதலைக்கும் எழுபத்தைந்து சதவீதத்துக்கும் மேற்பட்ட வாய்ப்பு இருக்கிறது. எல்லாமே மனநிலையைப் பொறுத்தவை தானே.
அனந்தன் நாயரின் மனதில் தேங்கிக் கிடந்த சோகங்கள் எல்லாம் திருவனந்தபுரத்தின் சாலைகளில் அவர் கால்கள் பதிய பதிய நமது மனதிலும் பதிகின்றன. அதன் ஆழத்தை மிகவும் அழுத்தமாக கடத்தி இருக்கிறார் ஆசிரியர். ஆனால் இந்த புத்தகம் எனக்காக வைத்திருப்பது என்ன எனும் கேள்விக்கு என்னால் பதில் காண முடியாமல் போகிறது அதில் என் மீது பிழை இருக்கலாம் ஆனால் அப்படியே எனக்கு தோன்றுகிறது.
The book has definitely lost something in translation. Good story but in the end I have to say it fails to grip the reader. The characters are a bit one dimensional with the exception of the main protagonist, Ananthan Nair. If only the full potential in the story had not been brought out...I can only imagine what it would have been in the hands of somebody like Arundhati Roy or Amitav Ghosh...and hence the reading leaves you with a feeling of loss...But it is a quick and easy read, so that is a dubious plus, I guess.
48 மணி நேரங்களில் திருவனந்தபுரத்தை சுற்றி வரும் அனந்தன் நாயரின் நினைவோடை வழியே அவரது சோகங்களும் சாபங்களும் நிரம்பிய வாழ்க்கைச் சித்திரத்தை எளிதில் கடத்தி விடுகிறார் நீல. பத்மநாபன்.
வேதனையே வடிவான அவர் வாழ்க்கையில் இன்பமேதுமில்லாமல், தொடர் தோல்விகளுக்கும், சங்கடங்களும், இன்னல்களுக்கும், வருத்தங்களும் மட்டுமே இடமுண்டு. மனைவியால் 15 வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட தன் குடும்பத்தை மறுவிவாகம் செய்யாமல் பிழைப்பு நடத்திக் கரையேற்ற முனையும் அவர் மனம் ஏமாற்றங்களும், கசப்புகளுக்கும், சுய பரிதாபத்துக்கும் இடையே அயராது உழல்கிறது.
வசதியான குடும்பத்தில் பிறந்து ஏழ்மைக்கு சரிந்தாலும், சாதியின் மூலம் கிடைக்கும் சலுகைகளால் அவரால் ஒப்பேற்ற முடிகிறது. அற்புதமான அழகுடைய கார்த்தியாயினியை மணக்கும் காலம் அவர் வாழ்வில் மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்த ஒன்றாய் அமைகிறது. ஆனால், நோயினாலும், அதிகார வர்க்கத்திலிருக்கும் விக்ரமன் தம்பி அவர் மனைவியின் மீது ஆசை கொள்வதாலும், அவர்கள் மண வாழ்க்கையில் பிரளயம் தொடங்குகிறது. அதிகார/பண பலம் கொண்ட தம்பியை எதிர்க்க திராணி இல்லாது, மனைவியின் மீது கோபம் கொண்டு அவரை திட்டியும் அடித்தும் காயப்படுத்துகிறார். அவர்கள் வாழ்வே நரகமாகிறது. கடந்தகால நினைவுகள் நிகழ்கால சம்பவங்களுடன் இழைந்து மெல்ல புலப்படுகின்றன.
அவரது குடும்பத்தில் கணவனை விட்டுப் பிரிந்த பிற பெண்களை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறார். தன்னுடைய இரு பிள்ளைகளும் சாதி மீறி காதல் கொண்டிருப்பதை அறிய வரும் அவர், அவர்களிடம் கடந்தகாலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேச முயல்கிறார். மகள் மாதவிக்குட்டி அவர் பக்கம் இருந்தாலும், மகன் பிரபாகரன் தன் தாயின் பக்கமே நியாயமிருப்பதாகக் க���ுதுவதால் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி தன் வாழ்க்கை ஒரு ஒட்டுமொத்த தோல்வி எனக் கருதி அந்த இரவே உயிர் விடுகிறார்.
அக்காலத்து வாசகர்களுக்கு கார்த்தியாயினியின் மீது வெறுப்பும், அனந்தன் நாயரின் மீது பச்சாதாபமும் தோன்றியிருக்கலாம். ஆனால், அவரை வஞ்சித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேறச் செய்ததே தன்னுடைய செயல் தான் என்பதை உணர அவர் வெறுப்பும் கோழைத்தனமும் தடுக்கிறது. 15 வருடங்கள் ஆகியும் அதை நினைத்தே காலம் கழித்துக் கொண்டிருப்பது பரிதாபமானது.
1970இல் இக்கதையின் கரு அளித்திருக்கக்கூடிய அதிர்ச்சியை ஊகிக்க முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு சில காலம் மோகத்திலும் பரவசத்திலும் மூழ்கியிருக்கும் காலத்தின் விவரணை அட்டகாசம். காமம் என்பதே தவறு, உடலின்பம் பாவம், கட்டுப்பாடாக வாழும் வாழ்க்கையே சிறந்தது ஆகிய (இக்காலத்திலும் நம் திருநாட்டில் நிலவும்) கருத்துகள் அவருடைய குற்ற உணர்வின் மூலம் வெளிப்படுகின்றன. மேல் சாதியுடன் கலப்பு ஏற்புடையது ஆனால் கீழ்சாதியுடன் கலப்பு கூடாதது என்று அடிக்கடி பல மாந்தர்கள் கூறும் கருத்துகள் சாதியே மையமாக விளங்கும் சூழலின் பரிதாபத்தையும் ஆற்றாமையும் கோடிட்டுக் காட்டுகின்றன. நினைவோடை உக்தியால் ஏற்படக்கூடிய அயர்ச்சியை பத்மநாபனின் மொழிநடை சரிக்கட்டினாலும், கடைசி 50 பக்கங்களில் சலிப்பு தட்டுகிறது.
பலர் திருவனந்தபுரத்தை இந்நாவலில் சிலாகித்தாலும், அப்படியொன்றும் சிறப்பான ஆழம் சேர்க்கக்கூடிய படிமமாக எனக்கு அது படவில்லை. அனந்தன் வாழ்க்கையின் வீழ்ச்சியோடு திருவானந்தபுரத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது அவ்வளவு புதுமையான விஷயமும் இல்லை, ஒரு நடுத்தர டவுன் என்பதற்கு மேலே ஒரு கோவிலும் நாலு வீதிகளும் கொண்ட அவ்வூர் வசீகரம் எதுவும் பெறவில்லை.
வாழ்வில் தனக்கு ஏற்பட்ட அநீதிகளை எண்ணியெண்ணி வருந்தும் ஒருவரின் கதையாகவோ, தான் விளைவித்த செயல்களுக்கு பொறுப்பேற்க மறுக்கும் பிடிவாதமான ஒருவரின் கதையாகவோ பள்ளிகொண்டபுரத்தை வாசிக்கலாம்.
My feelings towards Neela Padmanabhan's Palli Kondapuram are somewhat ambiguous. The book takes the form of a stream-of-consciousness narrative spanning two days, featuring a sad and whiny middle-aged man as the protagonist. Initially, I found the first half of the book to be dragging and boring, as it introduced numerous characters from the entire town. Moreover, the protagonist's racist and sexist remarks were deeply frustrating. However, after around 100 pages, the book became more intriguing as the narrator's unreliability became apparent. While I am not sure if the author intended for the protagonist to be hated, you can understand the reasons behind his behaviour. Nevertheless, towards the end of the book, the narrative becomes murky once again, and the predictable ending and conversations felt like an attempt to justify the protagonist's actions. The narrative voice reminded me of Dostoevsky's Notes from Underground and Julian Barnes's The Sense of an Ending. Despite my criticisms, I do not think the book is bad; on the contrary, it is a good book with a very unlikeable and frustrating character. Although the character's racism and sexism leave a bad taste, they are to be expected from a character who is intentionally detestable.
திருவனந்தபுரத்தை களமாகக் கொண்டு, 1970 வாக்கில் நடக்கும் கதை. அனந்தன் நாயர் என்ற கணக்காளரின் இரண்டு நாட்கள் வாழ்க்கையும், அதனினூடாக அவரின் மண வாழ்வின் சுகமும்,துக்கமும் கூடவே அந்நகரின் அரசியல் பண்பாட்டு மாற்றங்களும் முன்னும் பின்னுமாக நகர்கின்றன. ராஜா செயலில் இருந்தபோது அவரின் காரியாலயத்தில் வேலையில் இருந்து, இந்திய அரசால் ராஜாக்கள் கைவிடப்பட்ட காலத்தில், வேலையிழந்த அவரின் பொருளாதார நெருக்கடியும், மனைவி அவரைப் பிரிந்து வேறொருவனோடு சென்று விட்டதன் வலியும் கதை முழுதும் விரவிக் கிடக்கின்றன. பெரும்பாலும் புறவுலக வர்ணனைகளும், சிறிது அகவுலக சிந்தனையோட்டங்களும் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதால் இயல்பாகவே மலையாள வாழ்க்கைச் சூழலை உயிரோட்டத்துடன் பிரதிபலிக்க முடிகிறது. மலையாளப் பரிச்சயம் அற்ற தமிழ் வாசகர்களுக்கு மொழியோட்டம் சிறிது தடையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் சமூக பழக்க வழக்கங்கள் பற்றிய புரிதலை இந்நூல் அளிக்கக்கூடும். உடன் வாழ்வின் மீதான சில கசப்பான கேள்விகளையும்!
மிக சிறந்த படைப்பு.அனந்தன் நாயரின் வாழ்க்கையை அவரின் சுய கழிவிரக்க பார்வையிலும் அவர்தம் மக்களின் யதார்த்த பார்வையிலும் சொல்லி போகிறது. தொடக்கத்தில் கூறப்படும் அவரது அகம் வழியாக நாம் பார்க்கும் திருவனந்தபுரத்தின் அழகு மொழியின் உச்சம்.
திரு.நீலபத்பநாபன் எழுத்து நடை மிக நேர்த்தி...பழைய திருவனந்தபுரத்தை நேரில் சென்று பார்த்தது போல ஒரு பிரம்மையை எற்படுத்திவிடுகிறார்.... கதை படித்து முடித்த பிறகு ,இது புதினமா அல்லது ஒரு வரலாற்றுபதிவா என்ற ஐயப்பாடு எழுகிறது.....
Absorbing reading. the story is told through the main person's encounters and thought processes in a single day and his helplessnes and dejection when his expectations about his children are belied.
രശസ്ത തമിഴ്/ മലയാളം എഴുത്തുകാരനും സാഹിത്യ അക്കാദമി അവാർഡ് ജേതാവുമായ നീല പത്മനാഭന്റെ വളരെയധികം പ്രശസ്തമായ, വിവിധഭാഷകളിലേക്ക് പരിഭാഷപ്പെടുത്തിയ തമിഴ് നോവലാണ് പള്ളിക്കൊണ്ടപുരം. ഈയിടെ ഈ പുസ്തകം റഷ്യൻ ഭാഷയിലേക്ക് പരിഭാഷപ്പെടുത്തിയിരുന്നു.
പള്ളിക്കൊണ്ടപുരം എന്നാൽ ഭഗവാൻ പള്ളികൊള്ളുന്നയിടം. പത്മനാഭസ്വാമി ക്ഷേത്രത്തിലെ മുൻ ഉദ്യോഗസ്ഥനായിരുന്ന,രാജ്യത്തോട് തിരുവിതാംകൂർ ചേർന്നപ്പോൾ രാജാവിന്റെ സാമ്പത്തിക ഭദ്രതയിലുണ്ടായ കുറവ് കാരണം പിരിച്ചു വിടപ്പെട്ട അനന്തൻ നായരുടെ ജീവിതകഥ. എന്നാൽ ആ കഥ പറയുന്നത് രണ്ടു ദിവസത്തിനുള്ളിലായാണ്.
തന്റെ ജീവിതത്തെ അനന്തൻ നായർ അപഗ്രഥിക്കുന്നു. പലതും അറിയുന്നു. അദ്ദേഹത്തിന്റെ ജീവീതകഥയിലൂടെ നമ്മുക്കും സഞ്ചരിക്കാനാവും. ഒരാളുടെ കഥപറച്ചിലാണെങ്കിലും ഇത് ഒരു വീക്ഷണകോണിലൂടെയല്ല അവതരിപ്പിക്കുന്നത്. അത് കൊണ്ട് തന്നെ വ്യത്യസ്തമായ കാഴ്ചകളും കാഴ്ചപ്പാടുകളും അവതരിപ്പിക്കുന്ന നോവൽ. കാലഘട്ടങ്ങളുടെ വ്യതിയാനങ്ങൾ വിവരിക്കുന്ന നോവൽ. എകദേശം അമ്പതു വർഷം മുമ്പു എഴുതിയതാണെങ്കിൽപ്പോലും തരിമ്പും നമ്മളെ മുഷിപ്പിക്കാത്ത നോവൽ.
നാഷണൽ ബുക്ക് ട്രസ്റ്റ് ഇറക്കിയ പുസ്തകമാണ് ഞാൻ വായിച്ചത്. മലയാള പരിഭാഷ ചെയ്തത് ബി മഹേശ്വരി ദേവിയാണ്.
A beautiful book that describes the journey of life of a person and the various characters that cross his lives. What i like about Neela Padmanabhan is the details that he gives to each and every character. The story is set in Trivandrum where I am settled and so was able to picturise most of the ways and places the characters travel through. The story talks about the life of an old man who lives with his son and daughter. He remembers his past life and about his wife who left him to live with another rich man. The story as in any NP books takes it time to build up but even though the slow setting of the book it will definitely keep us rooted.
அனந்தன் நாயர், வைரவன் பிள்ளை என்று பெரியாட்களுக்கு பரவாயில்லை. பிரபாகரன் நாயர் என்று அனைத்து ஆண்களுக்கும் சாதி பின்னொட்டு இருப்பதற்கு ஏதேனும் தனி காரணம் உண்டா?
நாவலின் ஆரம்ப பகுதிகளில் திருவனந்தபுரம் கோயில் வீதிகள் தத்ருபமாக வர்ணிக்கபட்டுள்ளன. பரிச்சையமானவர்கள் nostalgic ஆக உணரலாம். புதிதாக செல்பவர்கள் ஞாபகப்படுத்தி கவனிக்கலாம். ஆனால் எதை வைத்து நகரின் ஆன்மாவை தொட்டு விட்டதாக சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
நாவலின் இறுதி பகுதிகள் எனக்கு பிடித்திருந்தன. அதிர்வளிக்கவில்லை. ஆனால் இந்த அகச்சிக்கல்களை பேசியது நிறைவான ஒன்று.
எழுத்து நடையில் ஒரு குறையுமில்லை. தொடர் வாசிப்பு அயர்ச்சியை உண்டுபண்ணாத கதையும் மொழியும்.