'பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்' இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்ம்க்கதை என்றேன். புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிதாக சிந்தித்தால்தான் கடைத்தேற முடியும் என்பது என் கருத்து. வ. வே. சு ஜயர் காலத்தில் இருந்துதான் கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன.