ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது. என்ன நிகழ்ந்ததோ அதை மட்டும் பார்ப்பது மிகவும் கஷ்டம்; மேலும், உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறமை உள்ளவர்கள் சொற்பம். நூற்றுக்குத் தொண்ணூறு பேர், தங்களுக்கு பிடித்ததையும் பிடிக்காததையும், சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படி இப்படிப் பிழைகள் இருக்கின்றன; இன்னின்ன விதத்தில் இது நன்றாக இருக்கிறது என்று கருத்தைப் பூசி பிடித்ததை நிகழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்; பிடிக்காததை ஆட்கள் மேல் ஏற்றி விமர்சிப்பார்கள். இது உலகத்துக்காக தன்னை வெளிக்காட்டிக்கொள்வது. இது மனமும் மூளையும் இழுக்கும் இழுப்பு. உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல. இன்னொரு வகையில் நிகழ்ச்சிகளை அனுபவமாக உணர்வது. அனுபவமாக உணர்பவர்கள் அதில் சாயம் ஏற்றுவதில்லை. ஏனெனில் அனுபவம் என்பது உண்மை. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே இவ்வளவு குழப்பம் இருக்கும்போது என்ன நிகழ்ந்ததோ அதை எடுத்துச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் இதைப் படிப்பவர் விமர்சனம் செய்வார்களே என்று, சொல்பவர் அனேகமாகச் சில விஷயங்களைத் தவிர்ப்பார்கள். தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளில் சிலவற்றை அனுபவமாக உணர்ந்து அவற்றை இந்த நூலில் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் மாரி செல்வராஜ். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இது தவறு, நான் தவறு செய்துவிட்டேன் என்றோ இது நல்லது, இந்த நன்மையை நான் செய்தேன் என்றோ அதற்கு ஒரு விமர்சனத்தை அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இதுதான் நடந்தது அதை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார். அவர் வாழ்வில் நடந்தவற்றை அதன் போக்கில் மட்டும் பார்த்தால் அது சுவையான ஓர் அனுபவமே. ஒவ்வொரு அனுபவத்தையும் திடீர்த் திருப்பத்துடன் சொல்லியிருக்கும் நடை அவர் ஒரு கைதேர்ந்த கதைசொல்லி என அறிவிக்கிறது. சுவையான அவர் வாழ்க்கை அனுபவங்களை ரசித்துப் படிக்கலாம்!
தன் வாழ்வின் மறக்கமுடியாத சம்பவங்களை மறைக்காமல் பகிர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
பலதரப்பட்ட அனுபவங்களை பெற்றிருப்பவர் பேச்சாளாராகவோ , எழுத்தாளராகவோ , படைப்பாளியாகவோ இருப்பின் அவர்களின் பேச்சும் , எழுத்தும், படைப்பும் சிறப்பானதாக இருக்கும் அதற்கு இந்த புத்தகமும் மாரியின் திரைப்படங்களும் உதாரணம்.
சட்டக்கல்லூரியில் பயிலும்போது தனது கல்லூரி தோழியின் அழைப்பின் பேரில் அவளது சகோதரி திருமணத்திற்கு சென்றபோது தனது சாதியால் தனக்கு ஏற்பட்ட அவமானம் , பெண் வேடமிட்டு ஆடும் தன் தந்தைக்கு இளைஞர்கள் சிலரால் ஏற்பட்ட அவமானம் என பரியேரும் பெருமாள் படத்தில் காட்டிய பலகாட்சிகள் இவருக்கு நேர்ந்தவை , இப்படி இவரது அனுபவங்கள் பலவும் அதிர்ச்சியையும் , வியப்பையும் , வருத்ததையும் , சிந்தனையையும் ஏற்படுத்துகிறது.
பறவைகளை உயிராய் நேசித்த ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரும் , கொப்பரையில் நெல்லோடு வெந்து அவிந்த பூனை ராஜியும், கட்டிதழுவும் ரசூலும் ,பாவைக் கூத்து நடத்தும் தாத்தாவும் மற்றும் அவரின் உச்சி குடும்பன் , உளுவ தலையனும் , இழுத்து கொண்டிருக்கும் ஊர் பெருசுகளை வழியனுப்பும் மூக்கைய்யா தாத்தாவும், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட திருநங்கை கார்த்தியும் , சொட்டு அக்கா , வேங்கையன் அண்ணாச்சி, சின்ன குப்பை மாமா என பலரும் இன்னும் சில நாட்களுக்காவது என் நினைவுகளில் வாழ்வார்கள்.
புத்தகத்தை முடித்தபோது ஒரு வாழ்வில் கலவையான இவ்வளவு அனுபவங்களா ? 32 வருடங்களில் நமக்கு சொல்லிக்கொள்ளும்படி எதாவது அனுபவங்கள் இருக்கிறதா என்ற கேள்வி /எண்ணம் தானாகவே தோன்றியது.
வாழ்வியல் அனுபவங்கள் இருக்கிறதோ இல்லையோ நல்ல வாசிப்பனுபவத்திற்கு கண்டிப்பாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
என்றும் மறக்க முடியாத மனிதர்களையும்,அனுபவங்களையும்,நினைவுகளையும் நமக்கும் கொடுத்துவிட்டார்.. இந்த புத்தகத்தை படிக்கும்போது வாய் சிரித்ததை விட மனம் கனத்தது தான் அதிகம்..🤍
#234 Book 75 of 2023-மறக்கவே நினைக்கிறேன் Author-மாரி செல்வராஜ்
“வாழ்க்கை இலக்கியம் ஆகாது.வாழ்க்கையிலிருந்து பெறப்படுவது தான் இலக்கியம்.”
“கடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தால் அழுகை வராத வாழ்க்கை எத்தனைப் பேருக்கு சாத்தியம்?” என்று “சிதம்பர நினைவுகள்” புத்தகத்தில் ஒரு வரி வரும். அப்படியாக மாரி செல்வராஜ் தன் கடந்த காலத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்,அவருடைய கடந்த காலம் அவருக்கு மட்டும் இல்லை,எல்லாருக்கும் அழுகை வரும். அத்தனை வலி,காயம்,காதல்,அன்பு என எல்லாமே இருக்கிறது.
இதில் வரும் ஒரு சம்பவத்தை கூட ஒரு அத்தியாயமாக,ஒரு கதையாக கடந்து விடவே முடியாது.எல்லா கதாபாத்திரங்களும்,எல்லா சம்பவங்களும் மனதை பயங்கரமாக பாதிக்கிறது.மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நிறைய வலி இருக்கிறது என்பதை மட்டும் மறுக்கவே முடியாது. அவர் “மறக்கவே நினைக்கிறேன்” என்ற தலைப்பில் யாருமே மறந்து கடந்துப் போக முடியாத ஒரு படைப்பை படைத்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் தனது உண்மைகளை தான் கட்டி வைத்து கனமான மனபாரங்களை கட்டவிழ்த்த தளம். நமது மனதுக்குள்ளும் இதுபோன்ற ஒரு மறக்க வேண்டிய ஒரு நிர்வாணமான உண்மை உள்ளது, அதுவே அதற்க்கு அழககான உடை அணிவித்து மறைக்கிறது. இன்றிலில்லைலையெனினும் என்றாவது அது வெளிப்படும் கண்ணீராக. அதை, அந்த பாரத்தை அதிக நாள் சுமக்கும் திராணி நமக்கில்லை. யாருமற்ற ஒரு ரயில் பயணத்தின் ஜன்னலோர கண்ணீர் சொட்டுகள் வரையும் கோடுகள் அவை. மாரி செல்வராஜ் மை கொண்டு கிறுக்கிய பேணா நம் மன பாரங்களை சற்றேனும் குறைக்கும் வல்லமையுடையது .ஒவ்வொரு அனுபவமும் நம் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்துட ஒத்திசைந்து சற்றேனும் நம்மை நாம் செய்தவைக்காக ஒரு துளி கண்ணீரால் முற்றுப்புள்ளி தேடுகிறது. நன்றி மாரி.
ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்னால், பிரியா ஒரு புத்தக கண்காட்சி போனாள். அன்று, அவள், என் கைகளில் ‘மறக்கவே நினைக்கிறேன்’ புத்தகத்தை கொடுத்துவிட்டுப் போன கணத்திலிருந்தே எரிய துவங்கியது மாரியின் மீதான என் அன்பின், ஆச்சர்யத்தின் அகல். ராமின் உதவி இயக்குனர் என்ற ஒற்றை புள்ளியின்மீதே நம்பிக்கைகளை குவித்து வாசிக்கத் துவங்கினேன். அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் பேரன்பின் ரசாயன மாற்றங்கள். ஒரு புத்தகத்தை படத்தை நான் மறுவாசிப்பு செய்வதே மிகஅரிது. கல்லூரி சமயங்களில் பவுலோ புத்தகத்தை அதிகம் வாசித்திருக்கிறேன்; அதன் பிற்பாடு அதிகம் வாசிப்பது இந்த புத்தகத்தை தான்.
பிரியாவிடம் புத்தகத்தை திருப்பிக்கொடுத்த சில மாதங்களுக்கு பின்தான் மீசை துளிர்த்தது அந்த ஆசைக்கு; எனக்கென தனியாக ‘மறக்கவே நினைக்கிறேன்’ புத்ததக பிரதி வைத்துக்கொள்வோம். மாரியை யாரும் கொண்டாட, அல்லது இந்த அளவிற்கு கொண்டாட துவங்கவில்லை. அதனால் ‘மறக்கவே நினைக்கிறேன்’ புத்ததகமே எங்கும் கிடைக்காத காலம். எத்தனை கடை, நூலகம், பதிப்பகம் அலைந்தும் கிடைக்கவே இல்லை. பின், ‘பரவாலடா, நீயே வச்சுக்கோ என் புக் அ’ என ‘பிரியா’ கொடுத்த, ‘பிரியா’ என்று எழுதி பொம்மைகளிட்ட அந்த பழைய விகடன் பிரதியை, எங்கு திரும்பினாலும் ‘மறக்கவே நினைக்கிறேன்’ கிடக்கிற இந்த சமயத்திலும் மாற்றிக்கொள்ள விருப்பமே இல்லை.
முன்னாலேயே புத்தகம் படிந்திருந்தது, மாரியின் இரண்டு படங்களையும் வேறொன்றாக அணுக காரணமாயிருக்கிறது. சமீபத்தில் படித்த, பவி கூட ‘கர்ணன்’ பார்க்கும்போது அதைத்தான் சொன்னாள். மாரியின் மீது நான் கொண்டிருக்கும் அன்புக்கும் ஆச்சர்யத்திற்கும் காரணம், புத்தக கடைசியில் வருகிற அந்த கவிதைதான். மாரியின் சிரசின் முள்முடியிலிருந்து வழிகிறது அன்பின் பேரூற்று!
மாரி செல்வராஜ் தனது வாழ்க்கை நினைவுகளை புனைவு மேலிட நம் கைகளில் தவழவிட்டிருக்கிறார்.
"பரியேரும் பெருமாள்" திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு இப்புத்தகம் படிக்கின்ற போதும் ஏற்படுவதை உணர முடிகிறது.
"நினைத்துத்தான் ஆக வேண்டும். நினைத்தால் தான் மறக்க முடியும். மறக்கத்தான் நினைக்கிறேன்" என்றவர் தனது நினைவுகளை நம்மீதும் திணித்து மறக்க முடியாமல் செய்து விடுகிறார்...
கட்டாயம் ஒரு முறை படித்துப் பாருங்கள். மாரி செல்வராஜ் என்ற ��னி நபரை தெரிந்து கொள்வதற்காக அல்ல. தூத்துக்குடி மாவட்டத்தின் ஏதோ ஓர் கிராமத்தில் வாழ்ந்த கட்டுப்பாடுகளுக்கு அடங்காத சிறுவனின் கைகோர்த்து அவனது பால்யத்தையும் மனிதர்களையும் ஆசுவாசமாக வேடிக்கை பார்க்க...
மாரி தனது பால்யத்தை திரும்ப பார்க்கும் கட்டுரைகள் இவை. தனது எழுத்து தான் தனது படைப்புகள் என்று நிச்சயமாக தெரிகிறது. நான் இப்புத்தகத்தை மூன்றாவது முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது பால்யத்தை, எனது வாழ்வின் முதல் பாகங்களை படம் பிடித்து காண்பிக்கப்படுகிறது.
ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார், பால்யத்தில் செய்த நிறைவேறாத சத்தியங்கள், கு.சின்னகுப்பன் என்ற பூசாரி, கட்சியின் மீதோ அல்லது தனி மனிதன் மீது கொண்ட கண்மூடி தனமான அன்பால் தன்னை சுற்றியுள்ள உறவுகள் எப்படி மனஉளைச்சல் அடைகிறார்கள், திருவிழா, சிறு தெய்வங்கள், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு அவரது காணிக்கையை திருடியது பிறகு பயந்து அதை எப்படியாவது திரும்ப கொடுக்க முயற்சி செய்வது, தான் ஏன் குடிப்பதில்லை, சொட்டு அக்காவின் கதை, தன் பயத்தால் குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லும் தந்தை, நண்பர்கள் காதலுக்கு கவிதை எழுதி தருவது அதுவும் ஆசிரியையாக இருந்தால் அடி பலம் தான், ஏன் மதிப்பெண்கள் ஒரு உயிர் பிரிய காரணமாக இருக்கிறது? தனக்கு பாடம் சொல்லித்தந்த நண்பன் ஏன் ஒரு மதிப்பெண் கிடைக்கவில்லை என்று தனது உயிரை மாய்த்துகெள்கிறான், ஏன் சமூகம் ஒரு சாரரை மட்டுமே தீவிர வாதிகள் ஆக, திருடர்களாக எண்ணுகிறது சினிமாக்களும் அதையே செய்கின்றன என்பது அவலம், எந்த ஒரு பேரிலும் அப்பாவி மக்கள் கொள்ளப்படுகிறார்கள், நமக்கு உதவி செய்ய இயற்கை ஏதோ ஒன்றை அல்லது மனிதர்களை தந்து கொண்டே தான் இருக்கும், காதல்கள் இல்லாத மனிதன் யார் தான், யாருமின்றி இறந்து போவது போன்ற கொடுமை என்ன இருக்க முடியும், கார்த்திகா (திருநங்கையின்) முத்தம் அன்பின் ஆதீ ஊற்று , கருணை கொளை என்ற ஒன்று இங்கு ஏன் இல்லை? அப்படி தன்னை சுற்றியுள்ள அந்த உயிர்களை வழியனுப்பும் மனிதன், தான் பிறந்த கதை தன் அம்மாவின் வாயிலாக கேட்பது எவ்வளவு இனிமையான அனுபவம்
ஒன்றை ஒன்று தொட்டு தான் இயற்கையும், அன்பும் அமைந்துள்ளது..
மாரி!!!!!
நன்றி for making me re-read the book and share the views.
பரியேறும் பெருமாள் படம் ரிலிசான மொத நாள் தியேட்டர்ல படம் பாத்தன். இடைவேளைக்கு அப்புறம் நண்பணிடம் மச்சி சாதி பஞ்சாயத்த இழுத்துவிட போறான்டா இந்த டைரக்டரு என்றேன் ஆமா மச்சி அப்டித்தான் படம் போகுது என்றான் ஆனால் கிளைமேக்ச் காட்சியில் அற்புதத்தை நிழ்த்திட்டான்டா என்று சொல்லவச்சான் அந்த டைரக்டரு. அவரு 2013’ல மறக்கவே நெ(நி)னைக்குறேன்’னு ஒரு தொடர் விகடன்ல எழுதியுருந்தார் போல அத அப்பவே படிச்ச பலபேருக்கு தெரியும் அந்த படத்துல இருந்த பல காட்சி அவரோடு வாழ்க்கையில நடந்த மறக்க முடியாத நெனவுனு. நான் 2021’ல அந்த தொடர படிச்சப்ப தான் தெரிஞ்சுகிட்டன். டைரக்டரு மாரிசெல்வராஜ் மறக்க நெனைக்கும் சம்பவங்களை அறிய நினைப்பவர்கள் படிக்கவேண்டியது “மறக்கவே நினைக்கிறேன்!”-கலைச்செல்வன் செல்வராஜ்.
I grew up in a village much like the one Mari Selvaraj writes about, and reading Marakkavae Ninaikkiraen felt like stepping back into my own childhood. So many elements from the book brought back vivid memories — from the Uchi Kuduman and Ulla Kathan to the vibrant Dasara celebrations at the Mutamaramman temple.
During Dasara, I remembered how people would dress up as monkeys and walk the streets — and how, at times, they'd lift their masks so children wouldn't be scared. Sometimes, they’d deliberately put on a little act just to scare the kids who were boldly following them — a playful performance that added to the festive energy.
I was also pleasantly surprised to see Ammanpuram mentioned a few times in the book, as I have a friend from there. And the scenes of catching birds with nets — those were such a natural part of our village life too.
The stories take us through lush banana plantations and along the banks of the Tamirabarani, evoking the sights, smells, and sounds of a life deeply connected to the land and water.
One chapter that stood out was the one on police brutality against the Manjolai workers. It's a painful but necessary reminder of the injustices our communities have faced — a chapter that deserves to be remembered and passed on to the next generation.
And then there are scenes like taking the whole class to the principal’s room and beating the hell out of a few students — something that instantly took me back to school days. Harsh as it was, it’s a memory many of us can’t forget.
This book is more than just a memoir; it's a mirror for those of us who grew up in similar soil. It reminded me of things I had forgotten I remembered.
A book that i enjoyed thoroughly after a long time. This book is a collection of experiences from the author's life. All of them are quite interesting, eventful and is worth reading twice. The expereinces are honest, i felt a lot of humanness in the characters. I read this book a bit slow, reading 1 or 2 experiences in a day. I would say do not rush through this book. Go slow, live with the story and enjoy it. It would make one envy of the author's varied and rich experiences. This made me wonder if urban setting vs rural setting that makes one's life eventful and interesting or it is upto the individual. I feel the rural setting does make one's life eventful and the urban setting makes it repetitive. This book also made me reflect on my life and see if i can come up with 30 expereinces like this and how many non IT folks do i even know. I thought "Pariyerum Perumal" is a fictional story, after reading this book i realise that most of the things are real life experiences of the author Mari Selvaraj.
ஆனந்த விகிடன்ல் (வார இதழ்) திரைப்பட இயக்குனர் திரு.மாரி செல்வராஜ் எழுதிய தொடர் பின்பு விகடன் பதிப்பகம் மூலம் மறக்கவே நினைக்கிறன் மாரியின் அகம் சார்ந்த வாழ்கை பதிவு
கதைகள் நம்மை மாரி செல்வராஜின் உலகிற்கு கூட்டிச்சென்று வெளிப்படையான் விளிம்புநிலை வாழ்வியல் முகத்தை உணரச்செய்க்கறது சில கதைகளின் கரு அவரின் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் திரைக்கதை பார்வைக்குரிய காட்சி படிமம்.
நான் ஜெயமோகனின் அறம், எஸ்.ரா வின் கதாவிலாசம் மாதிரிப்படிவம் என்று வகைபடுத்துவேன்
மாரிசெல்வராஜ் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை 30 கட்டுரைகளாக கொண்ட இந்த புத்தகம் வாசிக்கும்போது குபீர் சிரிப்பையும், பெரும் சிந்தனை செய்யும் விதமாகவும், கண் கலங்கவும் வைக்கிறது, இத்தனை விதமான அனுபவங்களா என்ற வியப்பையும் ஏற்படுத்துகிறது. மாரி அவர்களின் கதை சொல்லும் விதம் என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் பல வருடம் பழகியதை போல ஒரு நெருக்கத்துடன் பேச தோன்றும் அளவிற்கு ஒரு நல்ல அனுபவத்தை இந்த புத்தக வாசிப்பு கொடுத்திருக்கிறது
"You can't connect the dots looking forward; you can only connect them looking backwards" மாரிசெல்வராஜ் அவர்களின் சிந்தனைகலை அவரது அனுபவங்களோடு சேர்த்து பார்கையில் அவர் சிந்தனை இத்தனை ஆக்கபூர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
The book talks on life experience which the author wants to forget. The book is not sad or tragedy, it has tinge of sadness on general behavior of human and (in some places) the mistake of author himself. A very natural book which is true and gives us experience of traveling with all people and story. Go for it you will surely like it.
"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு இந்த நூலை கையில் எடுத்தேன். நூலெங்கும் அன்றாடம் நாம் கவனிக்கத் தவறும் எளிய மனிதர்கள் நிரம்பிய பக்கங்கள்!
கர்ணன், பரியேறும் பெருமாள் கதைமாந்தர் குறித்து நாமறியாத பின்புலங்கள் இதில் நிறையவே உண்டு! பரியனைக் கொல்ல வரும் ஆணவக் கொலை தாத்தா தான் மூக்கையா தாத்தா. சலங்கை கட்டி பெண்ணாக ஆடும் தேர்ந்த சம்படி ஆட்டக்காரன் மாரியின் அப்பாவே தான்! பூங்குழலி, ராஜி, மணிமேகலை என்று மாரியின் தோழிகளின் சாயலில் வரும் கள்ளமற்ற ஜோவை, வேறொருவரின் மனைவியாக, மாரிக்காகவே எனப் பிரார்த்தனை செய்யக் காண்கிறோம்! பரியனின் அப்பாவாக நடித்த கொத்தனார் காரணமாகத் தான் மாரி இன்று வரை குடிக்காமல் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? இன்னும் சிறுவயதில் அக்காவை இழந்த குடும்பம், இறந்தும் கூடவே வரும் மஞ்சனத்தி என கர்ணனையும் காணலாம்!
மறக்க நினைப்பதாய் எழுதி, நம்மால் மறக்கவே இயலாத காட்சிகளை பதியவிட்டு செல்கிறார் மாரி. தன் சொந்த கிராமத்துக் கதைகளில் இருந்து, தன் கல்லூரி காலத்து நெல்லை, சினிமா வாய்ப்பு தேடி வந்த சென்னைக் கதை வரையான நிறைய சம்பவங்களில் நம்மையே மாரியாக உணர வைப்பது எழுத்தின் வெற்றி!
பொதுவில் ஒருவர் வைக்க மறுக்கும் பக்கங்களை நமக்கு பகிர்ந்துகொண்டதில், கொஞ்சம் சமூகத்தின் நிஜ முகமும் தெரியவே செய்கிறது! முக்கியமாக, நல்லது கெட்டது கடந்து உள்ளது உள்ளபடியே சில மனிதர்களை அறிமுகம் செய்கிற விதம் தேர்ந்த கலைஞன் இவர் என்று காட்டுகிறது. எழுத்தில் மட்டுமல்லாது, திரையுலகிலும் இன்னும் இவர் காட்டும்/காட்டப்போகும் நபர்களோடு கைகுலுக்க காத்திருக்கிறேன்! குறிப்பாக குலசை தசராவில் சாமியாடிய மாரியையும், கைப்பாவை பொம்மைகளைத் திருடிப் பின்னர் வருந்திய சிறுவனையும் திரையில் காண வேண்டும்!
மறக்க நினைக்கும் பக்கங்களை ஏன் ஒருவர் எழுதவேண்டும்!? மாரி இப்படி சொல்கிறார்:
"வேறு எதற்காகச் சொல்லப்போகிறேன்? புரிந்துகொள்ளுங்கள்; பிரியம் கொள்ளுங்கள்; மன்னித்துக் கொள்ளுங்கள், கூச்சமில்லை எனில் ஒரு முறை முத்தமிடுங்கள்!
ஏனெனில் இங்கு நான் என்பது எல்லாவற்றையும் ஒப்புகொண்ட நாங்கள் மட்டுமில்லை எதையும் சொல்லாமலிருக்கும் உங்களையும் சேர்த்துதான்'
Some one who would have born and brought up in down south especially in and around Tirunelveli and Tuticorin will be able to connect and relate so much...
This book also definitely cherish so much 90s kids mischievous incidents and memories.... Most of us know "Mari selvaraj" as a director and for his story... But this book has definitely brought a different perspective towards him...
His articulation of memories , stories of his childhood life, the culture, tradition, rituals in and around those area are so relatable..
Most of his film has reflection of this book, sry reflection of his life.. He made the narration so easy, relatable and more emotionally connected..
The theme holds many painful incidents but the narration and nuances of the character and the way he describes them makes more intresting to read...
உண்மை மனிதர்களின் வாசம் This book takes you closer to the lives of real people and the stories that the author had experienced. Each stories are told in their utmost truth and that's what makes these stories sepcial.
இது நான் படித்த முதல் சிறுகதை தொகுப்பு இதில் வரும் அனைத்து கதைகளும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் வரும் பூனை, வாத்தியார், கிளி, வாழைப்பழம் என ஏதோ ஒரு சொல் நம் நினைவுகளில் நிச்சயமாக அசை போடும். இதில் வரும் அனைத்து கதைகளும் மறக்க முடியாத வடுவுதான்.
புத்தகம் : மறக்கவே நினைக்கிறேன் ஆசிரியர் :மாரி செல்வராஜ் பக்கங்கள் :280 பதிப்பகம் : வம்சி புக்ஸ்
நான் படிக்க, வேலைக்கு, சுற்றுலா செல்கையில் வெளியூர், வெளி மாநிலங்கள் என சென்றிருந்த சமயங்களில் சில நேரம் எதேச்சையான உரையாடல்களில் யாரேனும் "நீங்க திருநெல்வேலி மாவட்டமா?" என்று ஒரு கேள்வி எழுவதுண்டு, "ஆமாங்க, பக்கத்துல தூத்துக்குடி மாவட்டம்" என்று எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஒரு கேள்விப் புன்னகை புரியும் போது. "அதான் உங்க பேச்சுலயே ஊர் வாசம் அடிக்குதே " என்று பல நேரங்களிலும். விழி விரித்து "அங்க எந்த ஊரு?" என்று ஆர்வம் ததும்ப கேட்கப்படும் கேள்வியிலேயே, 'நம்மூருக்காரங்க' என்று மனம் ஒரு பரவசம் அடையும்.அப்படி எங்கள் ஊருக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்க்காரர்களை, ஊரிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களில் சந்தித்து இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியுடன் கடந்து வந்த நாட்கள் உண்டு. அந்த உணர்வு மாரிசெல்வராஜ் அவர்களின் திரைப்படங்கள் பார்க்கும் போது எழுந்துள்ளது. "அட அப்டியே நம்மூருல பேசுறமாரியே படத்துலயும் பேசுறாவளே" ( அப்படியே நம்ம ஊரில் பேசுகிற மாதிரியே படத்திலும் பேசுகிறார்களே)
அதே வாசனை இந்த புத்தகத்திலும். எங்கள் ஊரின் அருகில் உள்ள ஊர்கள் வரும், அதை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகம் நான் வாசிப்பதும் இதுவே முதல்முறை. எனவே மாரிசெல்வராஜ் அவர்கள் மறக்க நினைத்து எழுதிய இந்த தொகுப்பு எனக்கு மறக்க முடியாத வாசிப்பாகவே அமைந்தது.ஆனந்த விகடனில் வந்த தொடரின் புத்தக வடிவம்.
நாம் எளிதில் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்க்கை அனுபவங்கள் தான் ஒரு தனிமனிதனாக, நமக்கு தனித்தன்மை தந்து இன்று இருக்கும் "நாம்" உருவாக காரணமாக இருக்கும்.
மாரிசெல்வம் என்ற ஒரு கிராமத்து சிறுவன் கடந்து வந்த மனிதர்கள், தாண்டி வந்த அனுபவங்கள்,மறக்க நினைத்தும் முடியாமல் மனதில் தேக்கி வைத்த ரணங்களை இயக்குனர் மாரி செல்வராஜாக அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தொகுப்பு இந்த புத்தகம்.
Marakkave nenaikiren : A subtle wholesome, much traumatic journey . Even most of the stories were so traumatic and heart touching one but the way of narration just impacted like as a arrow , the mandatory break I used to take about 5 to 10 minutes after reading a single story...... it was so thought provoking, and questionable. Mari na had a ability to easily get us to his world and the way he sees people in this book was so pleasurable to me I really liked that way and the narration in starting few pages was different comparing to last stories, like first the narration started like much more enjoyable (true, even the stories were traumatic but narration kinda helps me to see in mari na's prespective *starting few stories only*) but after and after it was much more empathetic and hard hitting one . And some of the stories were so questionable to the society and people belief and throughout the book, the way the mari na mentions and perceive a person was soo good , I wish I could be one of those wholesome characters in this book and the book itself started as his life like the first 2 ,3 stories will be based on his childhood days ( although childhood days were mentioned in so many place) and the ending was literally like how he felt about writing this book . it was great
ஒரு சில மாதங்களாக நான் தமிழ் புத்தகங்கள் வாசிக்கிறேன். நான் இதுவரைக்கும் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த நூல்யென்றால் அது மாரி செல்வராஜின் மறிக்கவே நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் — அவர் ஊரில் நடந்த கதைகள், கல்லூரி நினைவுகள், அவர் சந்தித்த வெவ்வேறு சுபாவங்கள் கொண்ட மனிதர்கள், அவரது உரவினர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றிய கதைகள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒறுக் கவிதை போல் இருந்தது. சில சமையங்களிள் குட்டி கவிதைகள் கூட சேர்த்திருந்தார். சிறு வயதில் மற்றவர்களின் டையரி வாசிக்கும் பழக்கம், நண்பர்களுக்குக் காதல் கவிதை எழுதப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டது, இவை போன்ற கதைகள் என்னைச் சிரிக்க வைத்தாலும். இன்னொரு பக்கம், ஜாதியால் அவர் சந்தித்த சவால்கள், அவர் நண்பர்கள் ரகூல் மற்றும் கார்த்திகாவின் கதைகள் என்னைச் சிந்திக்க வைத்தன. மாரி செல்வராஜ் ஒரு நண்பருக்கு எழுதும் கடிதம் போல இதை எழுத்திருக்கிறார். இந்த அத்தியாயங்களில் ஏராளமான அன்பை உணர்ந்தேன். பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் நாம் ரசித்த பரியனை இந்த புத்தகத்தில் மீண்டும் சந்தித்தேன். இப்புத்தகத்தை வாசிக்குப் பொழுது அடிக்கடி என் நண்பர்களிடம் இதில் வரும் கதைகளை பகிர்ந்துகோன்டேன். இந்த புத்தகம் முடியவே கூடாதென்று நினைத்தேன். மறக்கவே நினைகிறேனிள் படித்த கதைகள் என்றும் என் நினைவி இருக்கும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு ஆக சிறந்த கதை சொல்லி. ஒரு நாளில் முடித்து விடலாம் என்று எடுத்த புத்தகம் தான் "மறக்கவே நினைக்கிறேன்". ஆனால் ஒவ்வொரு கதைக்கு பிறகும் ஒரு இடைவெளி. அந்த கதைகளில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் எதோ ஒரு வடிவில் நமக்கு தெரிந்தவர்கள் போல தான் இருந்தார்கள். ஜோ, திவ்யா, குமார் அண்ணன், ராஜி, செல்வ லட்சமி, பூங்குழலி, மணிமேகலை, டாக்டர், ஸ்டீபன் வாத்தியார் என எல்லா கதாபாத்திரங்களும் உங்களை எதோ ஒரு வழியில் நிச்சயம் பாதிக்கும்.
தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள் என்ற நூலை வாங்கி விட்டு பின் அதே புத்தக கண்காட்சியில் தோழி பிறந்தநாள் பரிசாக வாங்கி குடுத்த புத்தகம் தான் "மறக்கவே நினைக்கிறேன்". கடந்த சில வாசிப்புகள் அனைத்தும் அரசியல், அறவியல் தளத்திலே இருந்ததால் இந்த நூல் எனக்குள் ஒரு ஆழ்ந்த அமைதியை நிறுவி செல்கிறது.
நான் எதிர்பார்க்கும் விதத்தில் கதை எழுதும் சிலரை மட்டும் எனக்கு தெரியும் அந்த பட்டியலில் அண்ணன் மாரி செல்வத்துக்கு ஒரு மிக பெரிய இடம் உள்ளது.
தீரா கதைகள், முடிவில்லா பயணம், தாகம் தீர அனுபவம் . நம் வாழ்க்கையில் பால்ய பருவத்தில் சில கசப்பான நினைவுகள் இருக்கும் அதை நினைவு கூறும் ஒரு நொடி உடல் சிலிர்க்கும் பிறகு நாம் அதை கடந்து செல்வோம் ஆனால் மாரி செல்வராஜ் அதை நினைவு கூர்ந்து அழகியலோடு,அரசியலோடு, இயற்கையோடு இணைந்து நமக்கும் அவர் வாழ்க்கை அனுபவத்தை ஒரு அனுபவமாக மாற்றுகிறார் பல கதாபாத்திரங்கள் என்னை நெகிழச் செய்தது சில பகுதிகளை படித்து முடித்தவுடன் புத்தகத்தை மூடி வைத்து ஒரு ஆழ்ந்த அமைதி செல்வேன் நான் படித்த புத்தகங்களில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டு படித்த புத்தகம் இதுதான் பல காரணங்கள் இருந்தாலும் அவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் மிகப்பெரிய காரணங்களாக இருந்தது முடிந்தவரை இதை வாங்கி படியுங்கள் இப்புத்தகம் மிகப்பெரிய அனுபவம்
5: "ஐந்தாவதாக பிறக்கும் பிள்ளை ஆணாக இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது. திரிகோண நட்சத்திரத்தில் பிறந்தவன் குடும்பத்தை அழித்து விடுவான். அழிப்பதற்கு என்றே அஸ்வினி நட்சத்திரத்தில் அவ்வளவு கருப்பாக பிறந்து இருக்கிறான்" என்ற மூடநம்பிக்கைகளை கேட்டு அந்த தாய் அன்று அவரைக் கொண்டு இருந்தால், இன்று முதலமைச்சரின் மகனான விளையாட்டுத்துறை அமைச்சரை வைத்து வெற்றிப் படம் எடுக்கும் மாறி செல்வராஜ் இருந்திருக்க மாட்டார்.
7: மாறி செல்வராஜ் அவர்களின் "மறக்கவே நினைக்கிறேன்" புத்தகத்தின் ஏழாவது தொகுப்பு மிகவும் முக்கியமானது. அந்த தொகுப்பை படித்து முடித்தவுடன் தான் நாம் தமிழர் கட்சி எப்படி தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் மீது மிகப்பெரிய சமூக தாக்குதரை தொடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். அந்தத் தொகுப்பில் வந்த ரசூல் போன்று இங்கிருக்கும் பிறமொழி தெரிந்த தமிழர்களும் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள பள்ளிகளை திறந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால் அது என்ன மாதிரியான சமூக இறுக்கநிலையை உருவாக்கி இருக்கும் என எண்ணும்போது மனம் பதறுகிறது. மேற்கூறியவாறு சமூக இறுக்கம் ஏற்படாததற்கு காரணம் பிற மொழி தெரிந்த தமிழர்களின் சகிப்புத்தன்மையும் அவர்கள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த தமிழர்களுடன் இரண்டறக் கலந்தனவும் மட்டுமே ஆகும்.
8: இன்று 1200க்கு 605 மதிப்பெண் வாங்குபவன் ஒரு நாள் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனராக ஆக முடியும். இன்று 1200க்கு 999 மதிப்பெண் வாங்குபவன் மறுநாள் தற்கொலை ��ெய்து கொண்டிருக்க முடியும். மதிப்பெண்ணை விட தினமும் வாழ்க்கையில் எதையாவது கற்றுக்கொண்டு சாதிக்கும் வரை சாகாமல் இருப்பதே சாதிக்க வழி.
10: ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு எங்கே நோய்நொடி வந்து படுத்து விடுவோமோ என்று பயந்து இருந்தால், உங்களுடைய பணப்பையில் விஷத்துடன் சுற்றலாம்.
11: உங்களுக்கு நன்றாக கவிதை எழுதும் திறமை இருந்தால் கூட, உங்களிடம் கவிதையை எழுதி தர கேட்ட நண்பரிடம், நீங்கள் சொல்ல அவர் எழுத வேண்டுமே தவிர உங்கள் கைப்பட எழுதி "பெறுநரிடம்" மாட்டிக் கொள்ளக் கூடாது.
24: இந்தத் தொகுப்பில் மாரி செல்வராஜ் அவர்கள் மஞ்சனத்தி பேயை பார்த்ததாக கூறியிருப்பார். பேய் என்று ஒன்று இல்லவே இல்லை. ஒரு பெண்ணை அடித்து புதைத்தவுடன் அந்த பெண்ணை பார்க்க முடியாது. உண்மையில் ஒளியில் நாம் பார்க்கும் பொருளானது, பிம்பமானது, நமது கண்ணின் ரெட்டினாவை கடந்து காணப���படும் போட்டோ ரிசப்டரில் படுகிறது. அப்படிப்பட்ட பிம்பத்தின் ஒளி ஒரு மின்சார சமிக்கையாக மாறி மூளைக்கு செல்கிறது. அங்கே மின்சார சமிக்கையை படமாக காட்டப்படுகிறது. நேஷனல் ஐ இன்ஸ்டிட்யூட் வெப்சைட்டில் உள்ள "ஹொவ் தி ஐ வொர்க்" என்ற கட்டுரையை படித்தால் அது உங்களுக்கு புரியும். ஒளி என்பது துகள்கள். இதை Einsteinம் கூறியுள்ளார். CERN என்ற நிறுவனம் மிகப்பெரிய அளவில் மின்காந்தங்களைக் கொண்டும் வருட கணக்கில் ஆராய்ந்தும் Higgs particles உறுதிப்படுத்தினார். அடித்து உள்ளே புதைக்கப்பட்ட பெண் வெளியே தெரிய வாய்ப்பில்லை. வெளியே தெரிந்தால் அது பேயாக இருக்க வாய்ப்பில்லை. ஏன் இந்த பேய்கள் எல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டிலும் சுடுகாட்டிலும் மட்டுமே இருக்கிறது? ஏன் இவையெல்லாம் ஒரு ஆள் நடமாட்டம் மிகுந்த ஒரு மதிய வேளையில் உணவகத்துக்கு எல்லாம் வருவதில்லை? பேய் என்பது இல்லை. மாறாக மாறி செல்வராஜுக்கு ஏதேனும் தேவைகள் இருந்து இருக்கக்கூடும் அல்லது இந்த தொகுப்பை எழுதும் சமயத்தில் அவரது மூளை அல்லது மனதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்க கூடும்.
கல்லூரி படிக்கும் காலத்தில் ஆனந்த விகடனில் வந்த மாரி செல்வராஜின் "மறக்கவே நினைக்கிறேன்" தொடரை வாசிக்க தொடங்கிய பசுமை நிறைந்த நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. மறக்கவே நினைக்கிறேன் வாசிக்க பழகிய கட்டத்தில் ஆனந்த விகடனின் மொத்த புத்தகமும் அரை நாள் கூட தாங்காது. அடுத்த வாரம் வரை ஒருவித வெறுமையோடு நாட்களை எண்ணுவதுதான் என் வழக்கம். ஒரு இரயில் பயணத்தில் ஆனந்த விகடனை வாங்கிக் கொண்டு வாசிக்கத் தொடங்கி எளிய மக்களோடு உரையாட தொடங்கிய நாட்களில் மாரியை பற்றி நினைத்திருக்கிறேன். யார்ரா இந்த ஆள் .., இப்படி எழுதுரானேயா மனுஷன்.? கூகுலுக்கு பெரிதளவு பரிட்சயப்படாத காலத்தில் அவரை பெயரை போட்டு தேடியிருக்கிறேன். மாரியின் கதைகளை படிக்கும் பொழுது ஒரு நள்ளிரவில் சிகரெட் புகைத்துக் கொண்டு தெருநாய்களின் கத்தல்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மாரியை அழைத்துச் சென்று அவரிடம் பேசத் தொடங்கிய பின், அவரது வாழ்வியலை கேட்கத் தொடங்கிய பின் இயக்குனர் ராமிற்கு என்ன மனநிலை இருந்ததோ அதே வியப்பும் , ஆச்சரியமும் என்னுள் தொற்றிக் கொண்டது.
மாரியின் கதைகளை பற்றி பேசவேண்டுமெனில் ஒரு கதை விடாமல் 30 கதைகளையும், 30வாழ்வியலையும் பேச வேண்டும். டைரிக்களின் ரகசியங்களை பற்றி என்னவென்று தெரியாத ஒரு காலத்தில் அதன் அழகியலை, அதன் மீதான காதலை, அதனை வலியுறுத்திய தோழிகளை, ஆசிரியர்களை பெற்றது பாக்கிமல்லாமல் வேறென்ன. மாரியின் முதல் கதை டைரியிலிருந்தே துவங்குகிறது.
சமூகத்தில் ஏராளமான தனித்துவமிக்க மனிதர்கள், உள்ளங்கள், எதார்த்தங்கள் வாழத்தான் செய்கின்றன. அவர்களை காணாமல் நகர்வதுதான் நமது துர்பாக்கியமே. ஒரு திருநங்கையின் மாசற்ற அன்பினால்,பிராணிகளை நேசிக்கும் ஆத்மார்த்தமான ஒரு ஆசிரியரால், ராஜி எனும் பூனையை நேசிக்கும் மென்மையான ஓர் உள்ளத்தால், ஜோ எனும் பேரன்புமிக்கவளால், ஒரு காவல் தொழிலாளியின் பாசப் பிணைப்பால் இந்த உலகம் ஓர் அரவணைப்பை பெறுகிறது. அந்த அரவணைப்பின் கதகதப்பில் இருந்துதான் மாரி எனும் பூக்கள் மலரத் துவங்குகின்றன.
எல்லோருடைய வாழ்விலும் பெண் தோழிகளும், 'ஜோ'க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எங்கே பேரன்பு மிக்கவர்களாக பரிணாமம் அடைகிறார்கள் எனில் "நான் என்றைக்கு கண்மூடி பிரார்த்தித்தாலும் அதில் உன் பெயர் இருக்கும் மாரி " என்று ஜோ சொல்வது போல மாசற்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைக்கப் பெறும்போதுதான் என்பதை மாரி மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
மாரியிடம் சொல்வதற்கு இன்னும் ஆயிரம் கதைகள் இருக்கிறது. நாம் இரண்டில் ஒருவராக இருக்க வேண்டும் ஒன்று கதையின் கருவாக அல்லது தாழ்த்தி கேட்கும் செவியாக. மாரியின் இந்த கதைகள் மறக்கவே நினைத்தாலும் மறந்து போகாத ஓர் உயிர்ப்புமிக்க ஓர் ஸ்பரிசத்தின் மிச்சங்களாக தங்கி நிற்கும்.
பரிட்சயப்படாத மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் தொடரை ஏற்கனவே படித்திருந்தாலும், இயக்குனராக பரிணமித்திருக்க "பரியேறும் பெருமாள்" மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் தொடரின் ஈரத்தை தொட்டுப் பார்க்க தோன்றியதால் முழு புத்தகமாக மீண்டும் வாசித்து முடித்திருக்கிறேன்.
மாரி = மழை
இன்னும் ஆயிரம் துளிகளை சிந்த வேண்டிய பழங்குடி கிராமத்திலிருந்து ஒரு வாசகன் எழுதுகிறேன்.
புத்தகம் : மறக்கவே நினைக்கிறேன் ஆசிரியர்: மாரி செல்வராஜ் பக்கம் : 280 விலை : ₹250 பதிப்பகம் : வம்சி புக்ஸ்
எப்படி, எங்கே ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு, மூன்று முறை எழுதி பிறகு அழித்து, திருத்தி என்று தான் தொடங்குகிறேன். பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் எழுதியது என்ற பிம்பத்தோடு தான் அவரது "மறக்கவே நினைக்கிறேன்" புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் நான் வாழ்ந்து பார்க்காத, அனுபவித்திராத நெல்லை மண்ணின் வாசனையை எனக்குள் கடத்திவிட்டார். இது கொஞ்சம் மிகையாக தோன்றலாம். ஆனால் வாசிக்கும் போது அப்படித்தான் உணர்ந்தேன். "பறவைகளின் கடிதம்" கட்டுரையைப் படித்து முடிக்கும் போது எதற்காக அழுதேன் என்று தெரியவில்லை. பறவைகளை அப்படி நேசித்து அந்த மரபொந்துக்குள் மடிந்து போன ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரை நினைத்தா? அல்லது றெக்கைகள் உடைப்பட இறந்து போன பறவைகளை நினைத்தா? அல்லது பறவைகளின் சாவிற்கு நேரடி காரணியாகவும், வாத்தியாரின் சாவிற்கு மறைமுக காரணியாகவும் இருந்திட்ட மாரி செல்வராஜ் மற்றும் அவருடைய நண்பர்களின் மீது ஏற்பட்ட ஒருவித கோபத்தினாலா? சரியாக தெரியவில்லை. அது போலவே "ஆதியாகமம்" கட்டுரை. வேகவைத்த நெற்பானைக்குள் மடிந்து போன ராஜி பூனை மனதை நீண்ட நேரம் பிராண்டியது. இப்படி ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சொல்லிக் கொண்டே போகுமளவிற்கு பொய் கலவாத எழுத்து புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. சம்படி ஆட்டக்காரனாக இருந்து அவரது அப்பா சந்தித்த அவமானம், "கார்த்தி"யாக இருந்து கார்த்திகாவாக மாறிய நண்பனின் மரணம், தேர்வில் தேர்ச்சி பெறவே மாட்டான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தேர்ச்சி பெற்றதை வெடி வெடித்து கொண்டாடும் பொழுது தன்னை தைரியப்படுத்திய நண்பன் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொண்டது, அண்ணனாக பாவித்து தன் சகோதரியின் திருமணத்திற்கு அழைத்த பெண்ணின் தந்தையும் உறவினர்களும் சேர்ந்து சாதியை வைத்து அவமானப்படுத்தி அனுப்புவது, உச்சி கொடும்பன் பொம்மையைத் திருடிவிட்டு பயந்து பயந்து நடுங்கி பிறகு கூத்து நடத்துபவர்களின் வண்டிப்பாதையில் வைத்துவிட்டு ஓடிவிடுவது, என ஒவ்வொரு பக்கமும் தரம். ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவங்களா என வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. பரியேறும் பெருமாளின் காட்சிகளை அவர் உருவாக்கவில்லை. வாழ்ந்தவிட்டு வந்திருக்கிறார் என்பது புத்தகத்தை வாசிக்கும் பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் கொஞ்சம் பக்கங்கள் நீளாதா என யோசிக்க செய்யும் அளவிற்கு சுவாரசியமான, நெல்லை மண்ணின் பேச்சு மொழி கலந்த எழுத்து நடை. இப்படியொரு அட்டகாசமான எழுத்தாளரை சினிமா விழுங்கிவிடுமோ என்ற கவலையும், இத்தனை வாழ்க்கை அனுபவங்கள் கொண்ட, திரைமொழிக்கு ஏற்றவாறு அந்த அனுபவங்களை அழகாக ரசிகனுக்குள் கடத்திடும் இயக்குனரின் அடுத்தடுத்த படைப்புகள் எப்படி இருக்க போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் ஒரு சேர எழுகிறது.