Vikramadhithan of Vadhabi decides to take the Pallava Dynasty under siege. Rajasimman, the Pallava prince with the help of Pandavas fights the Salukas and gets back Kanchi
கலைகள் என்று சொல்லும் போதே நினைவிற்கு வருபவர்கள் பல்லவர்கள்.
சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினாலும் உடனடியாக அதைப் பல்லவர்களிடமே பறிகொடுத்த போரைப் பற்றி விவரிக்கிறது இந்த ராஜநந்தி.
இராஜசிம்மன் இளவரசனாகச் சிற்பக் கலையில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் சாளுக்கியப் போரையும் எதிர்கொண்டு மேலும் வீரர்களை மடியவிடாமல் மன்னனுடன் மறைந்து போய் திட்டம் தீட்டி காஞ்சியைக் கைப்பற்றியதை மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இளவரசர்களின் காதல் எப்பொழுதும் அரசியலுடன் தொடர்புடையது தான். படைத்தலைவர் மகளைக் காதலித்ததே அக்காதல் வெறும் காதலாக நிற்க போதுமாகிறது.
மன்னரின் குறுக்கீடு, எதிர்கால பல்லவ சாம்ராஜ்ஜிய நலன் என்று கண்முன் காட்டப்படும் அரசியல் விதிகளில் கார்குழலியின் காதல் காணாமல் போகிறது.
சரித்திர கதைகளில் நுணுக்கமான விவரிப்புடன் அடுத்து என்ன என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையான எழுத்துக்களே படிக்கச் சுவாரசியமாக்குகிறது. இம்மாதிரியான மேம்போக்கான தகவல் வழி சொல்லப்படும் கதைகளில் வரும் மெத்தனங்கள் ஆர்வத்தைக் குன்றவிடுகிறது.
சாண்டில்யனின் விரிவான(830) ராஜ திலகத்திற்கும் (https://www.goodreads.com/book/show/1...) இதற்கும்(144) சில வேறுபாடுகள், போரை தவிர்ப்பது மன்னன் இதில் ராஜசிம்மன். இதில் பாண்டியன் உதவுவது போல் உள்ளது. ஒரு முறை படிக்கலாம்.