இது ‘டீன் ஏஜர்’ஸுக்காக எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ‘ஆனந்த’னைப் போலவோ, ‘அருணா’வைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.
இந்த நாவலை ‘டீன் ஏஜர்’ஸாரும் படிக்கலாம், ‘டீன் ஏஜர்ஸ்’ அல்லாதவர்களும் படிக்கலாம். படித்துவிட்டுத் தங்கள் கருத்தை எனக்கு எழுதவும் எழுதலாம்.