வெற்றிச்செல்வியின் சிறுகதைகள் ❤️ • ஈழத்து எழுத்தாளர்களில் நான் மிக மதிக்கும் ஆளுமைகளில் ஒருவரான வெற்றிச்செல்வி அக்காவின் எழுத்தில் 30 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு இச்சமூகத்தின் சாயங்கலந்த முகமூடிகளையும் வாழ்வின் கோரப்பக்கங்களையும் எட்டுத்திக்கும் சுட்டுத் தள்ளுகிறது . போரைத் தொடர்ந்து நம் மக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் எவ்வாறெல்லாம் துன்பக் கரத்தால் இழுத்தடிக்கப்பட்டார்கள்/படுகிறார்கள், என்பதன் குறுக்கு வெட்டுப்பார்வைதான் ஒவ்வொரு கதையும். வெறுமனே துயரப்பகிர்வாக மட்டும் இருந்துவிடாமல் ஒவ்வொரு கதையும் உணர்வுபூர்வமாக எம்மையும் இழுத்துச்செல்வதோடு எத்துணை இடர்வரினும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பயணிக்கக் கற்றுத்தருகின்றன. வெற்றிச்செல்வி அக்காவின் சொந்த நினைவுப் பகிர்வாய் அமைந்த கதையும் இதில் அடங்கியது தனிச் சிறப்பு. • ஆயுதப்போர் மௌனித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.. நம் மக்களின் அகப்போரும் உளப்போரும் மௌனிக்கும் நாள்தான் என்றோ…