"மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் காலத் தமிழகம் ரத்தக்களரியானது. கண்ணகி காற்சிலம்பிலிருந்து மாணிக்கமும் இப்படியொரு மிளிர் கல்தான். இதே வண்ணக் கற்களுக்காகத்தான் இன்றய மேற்குலகம் காத்துக்கிடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும் மாஃபியாக்களும் இதைத்தான் தேடி வருகின்றன...."
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே சிட்டிங்கில் முடித்த நாவல். (Actually two, thanks to shatapthi and MRTS)
பொதுவாக வரலாற்றை கட்டுரையாகவோ இல்லை மிகை வர்ணனையில் நாவலாகவோ வாசித்திருப்போம். அவற்றை போலல்லாமல் விமர்சனப்பார்வைகளுடன் விவாதங்கள் கொண்ட ஒரு கதை தான் மிளிர்கல்.
சிலப்பதிகாரம், ரத்தினக்கல், சமண மதம், வர்க்க பேதங்கள், சாதி பாகுபாடு, கம்யூனிசம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இந்நாவலின் பேசுபொருளாக அமைந்துள்ளன.
ஏகப்பட்ட அட factors. குறிப்பாய் ஒன்றை சொல்ல வேண்டுமானால் அசோகர் பௌத்தத்தை தழுவியது பற்றிய விளக்கம்.
பி.கு: படித்து முடித்த பிறகு தான் தெரியும். படமாய் எடுக்க போகிறார்களாம். விகடன் விருது வாங்கியிருக்கிறதாம்
யப்பா..ஒருவழியா படிச்சு முடிச்சாச்சு. ஒரு ஆழமான/தீவிரமான ஆவணப்படத்தை எடுத்து அதை மசாலா படம்னு சொல்லி வெளியிட்டா..அதைப் பாக்குற நமக்கு என்ன உணர்வு இருக்குமோ அதே உணர்வுதான் இந்த புத்தகத்தைப் படிச்சு முடிச்சப்பவும்.மற்றபடி விரிவாக..நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
Under the guise of a documentary film-maker retracing the journey of Kannagi in the epic Silappadhikaaram, the novel tries to understands the motives behind those literary characters (who are possibly based on real-life inspirations) and the author Ilango adikaL, and juxtaposes against the modern-day activities in the precious stones trade, which is a central plot device in the epic. I liked the way the background information was presented through interesting expositions. It could have been paced better. It has enough content and a variety of elements to be made into a very good web series.
மிளிர் கல் - பெயரிலிருந்தே புதிரோடு தான் நாவல் நம்மை பயணம் செய்ய வைக்கிறது. அதாவது, கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள கற்களின் பின்புலம், அக்காலத்தில் வணகத்தில் ஏன் பெரும் தேவையாய் இருந்தது மற்றும் இக்காலத்தில் இதனை தேடி ஓடும் அளவிற்கு இதன் அரசியல் என்ன? பின்னணி என்ன? என்பதையெல்லாம் வரலாற்றோடு, தத்துவங்களோடு முன்னிறுத்தி பேசுகிறது.
' கொங்குநாட்டுப் பழங்குடியினத்தின் பெயர் கோவலனுக்கு வைக்கப்பட்டிருப்பது தற்செயலானதா? கண்ணகி எப்படி கொங்கர் செல்வியாக முடியும்? சேரன் செங்குட்டுவனுக்கு ஏன் கண்ணகியின் மேல் இவ்வளவு அதீத அக்கறை?
என இம்மூன்று கேள்விகளும் நாவலை வாசிக்க இன்னும் ஆர்வம் கொடுத்தது. காரணம், சிலப்பதிகாரம் என்னும் இலக்கியம் போட்ட புதிரில் முன்னரே சற்று ஈர்க்கப்பட்டு இதனை வாங்கி வாசித்தேன். முதல் கட்டம் கொஞ்சம் சரியாக போகவில்லையே என நினைத்தேன். ஆனால், ஒரு எண்பது அல்லது நூறு பக்கங்கள் தாண்டி போகும் போது ஒரு நல்ல ஆராய்ச்சியை, தேவைப்படும் அரசியல் களத்தோடு ஒரு நல்ல பயணக்கதையாய் செதுக்குப்பட்டிருக்கிறது.
இதில் அதிகம் பேசப்படுவது வரலாறும், தத்துவங்களும் நிறைய பக்கங்களை சூழ, நாம் பயணிப்போம். இதில், பிளேட்டோவும் வருகிறார், நம்மூர் மயிலை சீனிவெங்கடசாமியும் வருகிறார். கதைக்கு அவ்வளவு தேவையாய் இருக்கிறது.
மீனவர் இனத்தில் தொடர்ந்து, விவசாயம், பழங்குடியினர், தலித்துக்கள், செட்டியார், கவுண்டர் என அனைத்து தரப்பினரின் பெயரும் கதையில் வெளிப்படையாய் இருப்பது, கதைக்கு இன்னொரு பலம். ஆம், ஒவ்வொருவரை பற்றி பேசும் போதும், ஒரு கதாபாத்திரம் ஒரு காரியம் செய்ய முற்படும் போதும் வெறுமென நிகழ்வுகளாய் முடிக்காமல் ஒரு அரசியல், கருத்தியல், வரலாறு என பிணைக்கப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது.
ஒரு ஒரு அத்தியாயங்களை படிக்கும் போது, ஒரு கேள்வியோ, ஒரு சிந்தனையோ நம்முள் ஓடிக்கொண்டிருக்கும், இதனால் ஏனோ, நாவலை முழுவீச்சில் முடிக்க மனம் துடிக்கும். ' மான்கள் துள்ளினாலேயே நீலக்கற்கள் வெளிவருதுன்னு புறநானூறு சொல்லுது ' என எவ்வளவு எளிதாக அந்த காலத்தில் மணல் மேற்பரப்பில் இந்த கற்கள் கிடைக்கிறது பாருங்கள். இப்போது? என அறிவியல் ரீதியாகவும் சிந்திக்க தூண்டுது.
வணிகர்களுடைய காலத்தில் சமண மதம் எப்படி இருந்தது எனவும். அதனை ஆண்ட பேரரசுகள் இம்மதத்தினை பழங்குடியினரை அடக்குவதற்கு எப்படி உபயோகப் படுத்தினார்கள் எனவும், பின் நிலப்பிரபுத்துவ வரை வந்து புத்தம் தாண்டி, வைணவம், சைவம் என அலசி ஆராய்ந்து நம்மை பலவிதங்களில் தேடலில் ஈடுபடுத்திவிடக்கூடும் வகையில் சிறப்பாய் அமைந்திருக்கிறது இந்நாவல்.
கதையில் வரும் முல்லை என்னும் பெண் எடுத்த அந்த கடைசி கட்ட முடிவு, இன்று இலக்கியம் பயிலும் அனைவரும் எடுத்தால் நன்றாயிருக்கும் என பலவழிகளில் தேடல் மூலம் செயல்பட நினைக்க வைக்கும். ஆம், இலக்கிய தேடலில் தொடர்ந்த இவளது பயணம்? முடிவது அந்த இலக்கியத்தின் சிறப்பு? மக்களை ஒன்றிணைக்கிறதா? சிந்தனைகளை மேம்படுத்துகிறதா? ஒடுக்குகிறதா? அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என ஒரு கேள்வியுடன் கதையின் முடிவில் இன்னொரு பயணத்தை தொடருவாள். இதோ, அந்த கேள்வி, ' கண்ணகி இந்த மக்களுக்கு ஏன் தேவைப்படுகிறாள்? கற்புக்கரசியா? தெய்வமா? பழிக்கு பழி வாங்குபவளாகவா? .
நாவல் முடியும் விதம், மிகவும் அருமையான களத்தில் ஒரு சிலிர்ப்பை தந்து முடிந்தது.
யார் அவள்? வேறு யார்? காளியாக, கொற்றவையாக, அம்மனாக...காலங்கள் கடந்து நிற்கும் அவள்தான். என முடிகிறது!!
சிலப்பதிகாரத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் நூல் தான் மிளிர்கல். அது போக தமிழகத்தில் காங்கேயம் பகுதியில் கிடைக்கும் இரத்தின கற்களை பற்றியும், இந்த கற்களை வெளிநாடுகளுக்கு விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி விவசாய நிலங்களை கையபடுதுகிறது, தன தொழிலாளர்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல் சாகடிக்கிறது என்றும் பல இடங்களில் வருகிறது. நீங்கள் பெரியார் போல் சிலப்பதிகாரதில் நம்பிக்கை இல்லை என்றாலோ, அந்த காவியத்தில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலோ இந்த நாவலை தவிர்ப்பது நலம்.
எழுத்தாளர் இரா.முருகவேள் ஒரு சரித்திர ஆய்வு அடிப்படையிலான சஸ்பென்ஸ் திரில்லராக இந்த நாவலை முடிக்க என்னற்று வாய்ப்புகள் இருந்தும் காலம் கடந்து நிறமும் ஒரு ஆவணமாக மிளிர்கல் நாவலை படைத் திருக்கிறார். வரலாற்று ரீதியான மரபு ஆய்வுகள் மற்றும் அந்நாளைய வியாபார மூலதனம், மதம் மற்றும் நிதி நிலை குறித்து இந்த நாவலில கொண்டு வர அவர் எடுத்துளை முயற்சி ஆச்சரயமளிக்கிறது. அது போல சமகாலத்தில் நடக்கும் தொழிலாளராகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பதிவு செய��துள்ளார். இவை எல்லாமே கதையின நாயகியான கண்ணகியையும் அவள் கையிலிருக்கும் மிளிரகர்களுடைய சிலம்போடும் கதை முழுதும் பயணிக்கிறன. இந்த நாவலுக்காக எழுத்தாளர் இரா.முருகவேள் செய்துள்ள பல தரப்பட்ட ஆய்வுகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரஸ்யம் குன்றாமல தகவலகளை வாரி இறைத்தபடி நகரும் மிளிர்கல் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
A book that travels current and tries to relate 1000 year old history of Kannaki from poombukar to Madurai. Along the way it connects the corporates hunt for precious stones. How the knowledge in history could help them dig mine for uninterrupted supply of precious stones. How the culture evolved from pennar basin to Kaveri, cairn circle, samanar caves. Which kingdom Kannaki originally from why she left to west after losing kovalan. Kerala controlling the Kannaki temple. This makes me want to read silapathikaram and manimekalai. Why modern political parties idolizing Kannaki. Good eye opener and good read.
பொன்னியின் செல்வனுக்குப் பின் அதில் வரும் இடங்களோடு, மிளிர்கல்லுக்குப் பின் கண்ணகி போன பூம்புகார் முதல் குமுளி வரையான சேர்ந்துள்ளன. திருச்சி முதல் குமுளி வரை மீள் பார்வையாக இருக்கும். கண்ணகி கோயிலிருக்கும் குமுளியிலிருந்து முப்பது கி.மி தொலைவில் தான் கம்பம், அம்மாவின் ஊர். கம்பம் பள்ளத்தாக்கின் வயல்கள் ஊடே நின்று பார்த்தால் தெரியும் மலைகள் பெரியார் அணையும் புலிகள் காப்பகத்தையும் சேர்ந்தவை. பல முறை குமுளி சென்றும் சித்திராப் பௌர்ணமி அன்று மட்டும் திறக்கும் இக்கோயிலைப் பார்த்ததில்லை. விவரமில்லாத சிறு வயது ஞாபகம் : தமிழக கேரளா அரசியலில் சிக்கிய இக்கோவிலின் சீரமைப்புக்கு என் தாத்தா இறப்பதற்கு முன் பல முறை மனு எழுதியிருக்கிறார்.
சிலப்பதிகாரத்தை பள்ளிப் புத்தகங்களுக்கு வெளியே தேடியதில்லை. ரத்தினக் கற்களையும் ராசிக் கல்லாக மட்டுமே தெரியும். இன்றும் பெங்களூர் போன்ற நகர்களில் பெரிய ஹோட்டல்களில் கண்காட்சி போல் வைத்து ராசிக்கற்கள் என்ற பெயரில் கொள்ளை விற்பனை நடைபெறுகிறது. அவை என்னவென்றும் அவற்றின் பூர்விகமோ அரசியலோ துளியும் தெரியாது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட தலைப்பு சிலப்பதிகார மீளாய்வு மூலம் இரத்தினக்கல் அரசியல் சார்ந்தது. மேலோட்டமாக சிலப்பதிகாரம் புரிந்தால் போதுமென்றாலும் புலியூர் கேசிகனின் உரையை வாசித்துவிட்டு மிண்டும் ஒரு முறை வாசிக்க உத்தேசம்.
கரூர் நாமக்கல் காங்கேயம் பல்லடம் பகுதிகளில் தான் ரத்தினங்கள் கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தகவல்.
சிலப்பதிகாரம் உண்மையில் நடந்ததா? மதுரை எரிந்ததா ? கண்ணகி ஏன் தெய்வம்/அடையாளம் ஆனாள்? ரத்தினங்களுக்கும் சேர நாட்டுக்கும் என்ன சம்மந்தம் ? மதங்களுக்கும் அரசமைப்புகளுக்கும் என்ன சம்மந்தம் ? பல பல கேள்விகள், தகவல்கள் ஆய்வுகள் . வரலாற்று விரும்பிகளுக்கு அறுசுவை விருந்து. புனைவு என்று ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். "மிளிர் கல்" அடர்த்தியானது .
Though the story as a whole does not give some justifications, I could get some information on the history and as well present politics. Till now I had not known about precious stones and this novel opened my eye on that domain and explained how much precious stones are available in india. Helped me to know more about history of tamil nadu and as well made me get more interest on silapadhigaram. The novel as such has not quenched any of my thirst but has resulted me in gaining more thirst. The rating are low for not quenching thirst :)