Jump to ratings and reviews

தேரிமணல் [Therimanal]

மண்டைக்காட்டுக் கோயில் (1982) விழாவை ஒட்டி ஏற்பட்ட கலவரம் எப்படி உருவாகி, பரவி, சாதி, மத, ஊர்க் கலவரங்களாக விசுவரூபம் எடுக்கிறது என்பதை இந்த நாவல் அருமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ளது. ஊர்களுக்கிடையேயான கலவரம் பகையாக மாறுகிறது. அதன் விளைவு ஒரே மதம் - கத்தோலிக்கக் கிறித்தவ சமயம் சார்ந்த காதலர்களை (விக்டர் - விக்டோரியா) மணம் செய்து கொண்டபின், விக்டரின் ஊரான தாமரைக்குளத்தில் வாழ, ஊர்க்காரர்கள் எதிர்க்கின்றனர். அடிப்படையில் இரு ஊர்க்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர். ஆயினும் பகை, கண்ணை மறைக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமைப்பட்டு இருந்த மக்கள் இவர்கள். அனேகமாக அனைவருமே உழைத்துப் பிழைப்பவர்கள்.

222 pages, Kindle Edition

Published April 23, 2025

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Dhanaraj Rajan.
547 reviews373 followers
June 13, 2025
Three and half stars.

1982 இல் நடந்த மண்டைக்காடு கலவரம் பற்றிய நாவல் என்றதும் உடனே வாங்கினேன். கலவரங்கள் பற்றிய இலக்கியப் பதிவுகள் தமிழ் இலக்கியச் சூழலில் மிக அரிதாகவே தோன்றுகின்றன. இது என்னுடைய கணிப்பு. தவறாகவும் இருக்கலாம். ஆகவே மண்டைக்காடு கலவரம் பற்றிய கதை என்றவுடன் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

கதையின் படி ஒரு சாதாரண வாக்குவாதம்தான் (மீனவருக்கும் நாயர் சமூகத்து ஆள் ஒருவருக்கும்) பிற்பாடு சமயப் பூசலாகவும் சாதிப் பூசலாகவும் மாறியிருக்கின்றது. ஆக ஒரு தீப்பொறி கொழுந்துவிட்டு எரியும் தீயாக மாறவேண்டுமென்றால் அதற்கு சாதிச் சாயமோ அல்லது சமயச் சாயமோ பூசினால் போதும் என்றும் அதையே அரசியல் ஆதாயம் தேடுபவர்களும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த நாவல் எளிதான மொழி நடையில் சொல்லிச்செல்கிறது.

ஆனால் இந்தக் கருத்தை இன்னும் அழுத்தமான வகையில் எடுத்துச் சொல்லத் தவறியிருக்கிறார் ஆசிரியர். தகவல்களாக வந்து விடுகின்றன. கதைப்போக்கில் கதை நாயகர்களின் உணர்ச்சிக் கொப்பளிப்புகள் அல்லது அவர்களது மனச் சிந்தனைகள் அல்லது அவர்களது மனதை அறுக்கும் கஷ்டங்கள் வாசிப்பவருக்கு கடத்தப்பட வேண்டும். அப்போது அது இன்னும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எழுத்தாளர் முயன்றிருக்கிறார். ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது அவருக்கு.

மற்றபடி எழுத்தாளரின் சமூக அக்கறை, சமூக விமர்சனம் ஆங்காங்கே நன்முறையில் வெளிப்பட்டு இருக்கிறது. ஒரே பகுதியில் ஒருவரை அண்டி ஒருவர் வாழும் சமூகச் சூழலில்/புவியியல் சூழலில் (மீனவர்கள் மற்றும் நாடார்கள்) எப்படி அவர்கள் ஒரு சில அரசியல் வர்த்தகர்களின் சூழ்ச்சியால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு வன்மத்தை வளர்த்தார்கள் என்பதை பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். அந்த வகையில் எழுத்தாளர் தன் சமூகக் கடமையை உணர்ந்தவராகவே செயல்பட்டுள்ளார். அவருக்கு நன்றி.

எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் மண்டைக்காடு கலவரம் பற்றி 'மறுபக்கம்' என்ற பெரிய நாவலை எழுதியுள்ளார். கிடைத்தால் அதையும் வாசிக்க வேண்டும்.
Displaying 1 - 1 of 1 review