Jump to ratings and reviews
Rate this book

Exile

Rate this book
Udhaya is a virile hedonist, an angsty writer, a discriminating connoisseur, a reverent Francophile and an abrasive critic. Time-tested, seasoned and experienced, he transports the reader to the rustic streets of Thanjavur, the buzzing locality of Mylapore, the boondocks of Delhi, the most engaging historical whereabouts of France, Thailand and Morocco, and (quite often) his beloved's bedroom with uncensored personal anecdotes. Unabashedly raw, undeniably true to life and pluckily critical, Marginal Man anatomizes the personalities and the sexual nature of its vast and curious cast and the eidos of multiple societies with a fine scalpel.

435 pages, Hardcover

First published October 1, 2010

10 people are currently reading
167 people want to read

About the author

Charu Nivedita

80 books147 followers
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (31%)
4 stars
20 (28%)
3 stars
13 (18%)
2 stars
11 (15%)
1 star
4 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Jagan K.
50 reviews15 followers
Read
February 21, 2016
சாரு நிவேதிதா ஒரு விசித்திரமான எழுத்தாளர். தன் படைப்புகளை விட, அதைச் சார்ந்த கருத்துக்களாலும், விமர்சனங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமாகவே இருக்கிறது அவர் ஆளுமை. சாருவை பற்றி, இணையத்தில், மிக முற்போக்கான, பின் நவீனத்துவ transgressive எழுத்தாளர் என்று இருப்பதாலேயே, பலருக்கு அவர் படைப்புகளின் மேல் இயல்பான ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இப்போதும் ஏதாவது ஒரு நூலகத்திலோ, இல்லை புத்தகக் கடையிலோ, சாருவின் நாவலை எதேச்சையாக புரட்டிப் பார்த்தோமேயானால், அதில் வித்தியாசமான பல அம்சங்கள் இருப்பதை காண முடியும். அவரின் எழுத்தை ஏற்கனவே வாசித்தவர்களுக்கு அதில் அபாரமான வேகமும், அழகான மொழி நடையும் இருக்கக் கூடும் என்பதை ஊகிக்க முடியும். இது சாரு என்ற எழுத்தாளரின் மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த வெற்றியின் மூலம் இலக்கியவுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவி, தன் படைப்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். சாருவின் படைப்புகளில் அந்த படைப்பைத் தாண்டி சாருவே அதிகமாகத் தெரிவதுண்டு. எக்ஸைல் அது போன்ற ஒரு படைப்பே.

இந்நாவல் பயணிக்கின்ற தளம், சாருவின் பிற நாவல்கள் வாசித்தவருக்கு மிகப் பரிச்சயப்பட்ட ஒன்றே. பல்வேறு பெயர்களைக் கொண்ட கதாப்பாத்திரங்கள், எழுத்தாளன் - கதை சொல்லி இருவேறு ஆட்களாக இருப்பது, பின்னர் அவர்களுக்குள் இருக்கும் பாகுபாடு மெல்ல மெல்ல கரைவது, சோகமே உருவான ஒரு பெண், எப்போதும் ஓவர்டோசில் இருக்கும் francophilia (இந்த நாவலின் முதல் பக்கத்திலேயே செர்ஜ் துப்ராவ்ஸ்கியின் ஆட்டோஃபிக்ஷன் பற்றிய ஒரு மேற்கோள் ஃபிரெஞ்ச் மொழியிலேயே முன் வைக்கப் படுகிறது), பல உலக இலக்கியங்களைப் பற்றிய குறிப்புகள் என்று தெரிந்த ஒரு பாதையிலேயே நம்மை வழி நடத்துகிறது.

சாரு என்றாலே "செக்ஸ்" கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு, அதை மட்டுமே எழுதுபவர் அல்ல என்று இப்படைப்பு உணர்த்தக் கூடும். எக்ஸைலில் பெரிதாகத் தெரிவது கலவி என்று நாம் புரிந்துகொள்ளும் செக்ஸ் அல்ல, பால் என்று பொருள்கொள்ளப் பட வேண்டிய செக்ஸ். ஆணுக்குள் இருக்கும் பெண், பெண்ணுக்குள் இருக்கும் ஆண் என்ற அகமுரண்களைப் பற்றிய சித்தரிப்பு இந்நாவலின் முக்கியப் பங்காக உள்ளது. இந்நாவல் தொடங்குவதே செக்ஸில் தான். மணமான ஒரு ஆணும், மணமான ஒரு பெண்ணும் உடலுறவு கொள்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பமே இந்நாவலின் முதல் climax (climax என்பதை சிலேடையாகப் பொருள் கொள்க). இவ்விருவரும் தம்பதிகள் அல்ல என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் நீங்கள் சாருவின் எழுத்துக்களை வாசித்ததில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. செக்ஸ் என்பது இந்நாவலில் முக்கியமான அங்கமாக இருக்கிறதே அன்றி இதன் கரு தனக்கே நிர்ணயித்துக் கொள்ளும் பாதை சற்றே வித்தியாசமானது. மேற்கூறிய இரு கதாப்பத்திரங்களின் இயல்பு வாழ்கையும், காதல் வாழ்கையும் பின்னிப் பிணைவது தான் எக்ஸைலின் ஒரு பெரும் பங்கு. அதே சமயத்தில் முன்னுக்குப் பின் முரணான வாதங்களைக் கொண்ட அப்பெண்ணின் நம்பிக்கையில்லா கூற்றுகளை, இடைச்செருகலாக நுழைந்து, ஆங்காங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறது "கொக்கரக்கோ" என்ற கதாப்பாத்திரம்.

பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் இருக்கும் இந்த பூமியில் இருந்து கொண்டு, அதன் மொத்த இயக்கத்தையும் கணிக்கும் விஞ்ஞானிகள் போல் வாழ்க்கை என்ற பிரபஞ்சத்தில் செக்ஸ் என்ற ஒரு புள்ளியைக் கொண்டு அந்த வாழ்கையின் போக்கை நமக்கு எடுத்துரைக்கும் முயற்சியே சாருவின் படைப்புகள். எக்ஸைல், அந்தப் புள்ளியை மட்டும் மையப்படுத்தாமல் அதை தாண்டி வாழ்கை என்னும் பிரபஞ்சத்தின் அங்கமாக விளங்கும் வேறு சில கோள்களையும் கூர்ந்து நோக்குகிறது. ஒரு பெரிய நூலை படித்தபின் அதனுள் நமக்கு தேவையான விஷயங்களை கோடிட்டு குறிப்பெடுத்துக் கொள்வது போல், வாழ்வியல் சார்ந்த அத்தனை நூல்களையும் படித்துக் குறிப்பெடுத்துத் தொகுத்தால் அதுதான் எக்ஸைல். மேற்கூறிய மையக் கதாப்பாத்திரங்கள் அந்தப் புள்ளியை நோக்கிக் குவிந்து கிடக்க, அதை தாண்டிய வாழ்வியல் நோக்குகளை நமக்கு சிவா (எ) அம்பா (எ) கருவூரார் மூலம் சாரு காண்பிக்கிறார். யார் இந்த சிவா? இவன் மன நிலை எப்படிப்பட்டது? இவன் செயல்களுக்கு அர்த்தம் என்ன? இவன் மேல் உதயாவிற்கு ஏன் இப்படி ஒரு பிடிப்பு? என்று பல கேள்விகளை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கிறது இப்பாத்திரம். குறிப்பாக சிவா அம்பாவாக மாறுவதும் (ஆணினுள் இருக்கும் பெண் போன்ற அக முரண்களைப் பற்றி எழுதியதை நினைவு கூர்க) பின் கருவூரார் என்ற அவதார புருஷன் ஆவதும், அந்த ஒவ்வொரு நிலையிலும் அப்பாத்திரம் முன் வைக்கும் வாழ்கையை, மனிதர்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய அவதானங்களும் ஒரு உளவியல் ஊஞ்சலாட்டத்தை உண்டாக்குகிறது.எனக்குத் தெரிந்தவரை இதுவரை நான் படித்த சாருவின் கதைகளில் இதைவிட சிறந்த பாத்திரப் படைப்பு இருந்ததாகத் தோன்றவில்லை.

எக்ஸைலில் சாரு தனக்கே உரிய அதி தீவிர வீரியத்தோடு தோன்றாமல் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். தன் பொதுவான புலம்பல்களைத் தாண்டி இதில் ஆன்மீகம், அரசியல், சிட்டுக் குருவி லேகியம், சிந்தனைத் தேடல் போன்ற பல விஷயங்களைத் தொடுகிறார். இந்த நாவலைப் பற்றி "Life: A User's Manual" என்று அவர் கூறியதை இங்கே நினைவு கூறுகிறேன். நாவலுக்குள் இது எல்லாமே அனாவசியமானவையாகவே எனக்கு தோன்றியது. கிட்டத் தட்ட கோணல் பக்கங்களை படித்த உணர்வு. ஆனால் இந்த அமைதி ஒரு புதிய சாருவை எனக்குக் காட்டியது. அது எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்த கட்டமாக இந்நாவலின் போக்கிற்குத் துளி கூட சம்பந்தமில்லாத பல உபரி கதாப்பாத்திரங்கள் தத்தம் வாழ்கையை நம்முன் வைத்துவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் நகர்கிறது. இதன் பங்கு என்ன என்று சந்தேகிக்கும் முன்னரே நம்மை அறியாது அந்த கதை போகும் திசையில் பயணித்துக் கொண்டிருப்போம். இது எழுத்தாளர் சாருவின் தனித்திறமை. இந்த பத்திகள் அனைத்தும் தேவையா என்றால் இல்லை என்பதே என் பதில். ஒரு புறநிலை நோக்கோடு பார்க்கும்போது இது அவசியமில்லாத, பக்கங்களை நிரப்ப பயன்படுத்தப்படும் உத்தியாக தோன்றும். ஒரு வகையில் அது உண்மையே. ஆனால் இது சாருவின், சமூகத்தின் மீதான பார்வையை, உண்மைத்தன்மையுடன் சித்தரிக்கிறது. சாருவின் பல (எல்லா?) படைப்புகளிலும் இது போன்ற கதாப்பாத்திரங்கள் இருப்பது இயல்பே. பெரும்பாலும் கோணல் பக்கங்கள் போன்ற பத்தி எழுத்துக்களில் கூட இது போன்ற மனிதர்களை நாம் காண முடியும். ஆனால் ஒரு நாவலில் இவர்களின் பங்கு என்ன? இவர்களின் இருப்பு இந்நாவலின் புனைவுலகை எவ்வாறு பாதிக்கிறது? இதைப் பற்றிய எனது புரிதலை விளக்க சில விஷயங்களை நான் கூற வேண்டியிருக்கிறது.

Read the complete review here: http://orukozhiyinkooval.blogspot.in/...
Profile Image for Karunakaran Palanichamy.
33 reviews4 followers
February 24, 2018
The greatest book from a nature lover for nature admirers. Charu Nivedita is one of india's notable writers. There is no wonder this is his best creation. Each page of this book teaches humanity.
Profile Image for Niroshan Croos.
1 review
March 13, 2023
This is one of the greatest novels which I come across during past few years.. His writing method is outstanding with thousands of information gathered around the world.. His knowledge on certain areas is amazing...

The multiple views about Anjali's character and the way he reveals at the end through Kokkarako is perfect ending for the novel... Altogether this novel gives vast knowledge about the different life styles through its magical writing pattern...

Hatsoff Charu Nivedita.!!!
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Ramkumar.
9 reviews
September 12, 2018
Charu Nivedita transaggresive write. Exile is classical example novel of this genre writing . Peculiar to Tamil
Only charunivedita can writer such extraordinary novel .
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.