எப்பவுமே புதினம் வாசிக்கயிலதான் நினைவுகளின் பக்கம் ஓடியோடி மனம் துள்ளிக் குதிக்கும், ஆனால் அதற்கு நேர்மாறாக “இது யாருடைய வகுப்பறை?” என்ற தலைப்புடைய கல்வி சார்ந்த இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நினைவுகளை முன்காட்டி வியக்க வைக்கிறது. எவருக்கும் மகிழ்வான இக்கட்டான நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாக அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இருக்கும். அந்த சூழ்நிலையில் என்னோடிருந்த முகங்கள், ஆசிரியராகட்டும் அல்லது உடன் படித்த நண்பர்களாகட்டும் அவர்களோடு மானசீகமாக உரையாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தேன்.
நமது இன்றைய கல்விச் சூழலை புரிந்துகொள்ள அதன் தோற்றம் முதல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கல்விக் குழுவின் செயல்பாடுகளையும் உள்ளடக்கி, பல்வேறு கல்வியலாளர்கள் முன்வைத்த கருத்தியல்கள், ஆசிரிய மாணவ உறவுகளின் இன்றைய தேவையென சிறப்பான குழந்தை/மாணவ மைய கல்விக்கான தீர்வை நோக்கி பயணிக்கிறது நூல். மிகப்பெரிய உரையாடலுக்கான களம் கல்வி என்பதை உள்வங்கிக் கொள்ள உதவும் நூல்.
we always think why our education system like read this book you will get information about education.
Must read book who interested to know more about education, must read for teachers.
* Different aspects of Students Psychology * How the classroom should be there and what it will be like * Explained how the Student - Teacher relationship will make education as better one * Information about education history & educationist
A lot more thing there, very good summary about education and author showcased information from many books.