எத்தனை பேரை தெரிந்து வைத்திருக்கிறார். எத்தனை ஆளுமைகளுடன் உறவாடி இருக்கிறார். எத்தனை நிச்சலன நினைவுகள். பொறாமையாக இருக்கிறது. புதுவை என் கிராமத்தில் இருந்து ஒரு ஒன்றரை மணி நேரப்பயணம் தான்.. இருந்தும் அதிகம் செல்லாத ஊர். அடுத்த முறை நிச்சயம் போய் வர வேண்டும். இளவேனிலை சந்திக்க முடியுமா தெரியாது..
உலகத்தரம் வாய்ந்த நிகழ்வெளி. ஒவ்வொரு ஆளுமையின் படங்களுடன் இளவேனிலின் உரைநடையும், படங்களின் technical details தவிர்த்து (ஒரே ஒரு இடத்தில் 350D என்று குறிப்பிடுகிறார்) ஒரு அனுபவமாக சொன்ன விதம் பிடித்திருந்தது.