C. Viruthachalam better known by the pseudonym Pudhumaipithan (also spelt as Pudumaipithan or Puthumaippiththan), was one of the most influential and revolutionary writers of Tamil fiction. His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility. He is an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by present-day writers and critics of Tamil fiction. In 2002, the Government of Tamil Nadu nationalised the works of Pudumaippithan.
His career as a writer began in 1933 with an essay "Gulabjaan Kaadhal" (Love for Gulab jamun) published in the magazine Gandhi. His first short story "Aatrangarai Pillaiyaar" (Pillaiyaar on the river bank) was published in 1934 in "Manikodi" and from then on his short stories appeared regularly in it. His short stories appeared in a number of magazines like Kalaimakal, Jothi, Sudantira Chanku, Oozhiyan and Thamizh Mani and the annual issue of Dina Mani. He worked briefly as a sub-editor at Oozhiyan and later at Dina Mani. In 1943, he left Dina Mani to join Dinasari.
In 1940, his book "Pudhumaipithan Kadhaigal" (The stories of Pudhumaipithan), an anthology of his short stories was published. He slowly ventured into the world of Tamil cinema and worked as a scriptwriter in the films Avvaiyaar and KaamaValli. In 1945, he started "Parvatha Kumari Productions" and made an abortive attempt at producing a film called "Vasanthavalli". While working on the movie "Raja Mukthi", in Pune he contracted tuberculosis. He died on 5 May 1948 at Thiruvananthapuram.
புதுமைப்பித்தன்!!!! எஸ். ரா முதல் பவா வரை பல எழுத்தாளர்கள் இவரைப்பற்றி புகழ்ந்து, ஆச்சரியப்பட்டு எழுத, பேச கேட்டிருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை அதற்கு விலையும் ஒரு காரணம். இந்நூலை எளிய விலையில் (₹150) கிடைக்கப்பெற்று புதுமைப்பித்தனை வாசிக்க வாய்ப்பளித்த சீர் வாசகர் வட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்...
நிச்சயமாக அத்தனை புகழ் மாலைகளுக்கும் தகுதியுடையவர்தான் புதுமைப்பித்தன்!!!...
அவர் எழுதிய கதைகளையும் அது எழுதப்பட்டிருக்கும் காலக்கட்டத்தையும் பார்க்கும் போது பிரம்மிப்புடன் புரிகிறது அவர் ஏன் 'புதுமைப்பித்தன்' என்று!!...
1930 களில் எழுதப்பட்டது என்பதால் மொழி நடையும், சில வார்த்தைகளும் தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தது...
எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என 10க்கும் மேற்பட்டவை இருந்தாலும் 'செல்லம்மாள்' கதையை படித்து அது தந்த சோகத்திலிருந்து மீள சில தினங்களானதென்றால், 'வீபரீத ஆசை ' கதை தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை...!!!
நிச்சயம் அனைவரும் (குறிப்பாக சிறுகதை காதலர்கள்) வாசிக்க வேண்டிய புத்தகம்...
புத்தகம் : புதுமைப்பித்தன் கதைகள் எழுத்தாளர் : புதுமைப்பித்தன் பதிப்பகம் : சீர் வாசகர் வட்டம் பக்கங்கள் : 626
🔆இணையத்தில் பல விடயங்கள் “வைரல்” ஆவது உண்டு . அத்தி பூத்தாற் போல் புத்தகங்களும் ‘வைரல்’ ஆகும் . அப்படி வைரலானது தான் புதுமைப்பித்தன் கதைகள் . அவர்களின் கதைகளை சீர் வாசகர் வட்டம் சார்பில் , புத்தகமாக வெளியிட்டுள்ளனர் .
🔆நாம் அனைவரும் கண்டிருப்போம் , அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை , யாரோ ஒருவர் பிரதிஷ்டை செய்திருக்க கூடும் . அதை மிகவும் நகைச்சுவையான பாணியில் எழுதியிருக்கிறார் - அதுவே ஆற்றங்கரைப் பிள்ளையார் .
🔆 “கடிதம்” என்னும் சிறுகதை மிகவும் அருமையானதாக இருந்தது . ஒரு எழுத்தாளன் கிடைக்கக்கூடிய விமர்சணம் , அது நல்லதோ , கெட்டதோ அவனால் எடுத்துக் கொள்ள முடியும் . ஆனால் போலியானதாக இருந்தால் ???? என்ன ஆகும் .
🔆 மற்றுமொரு கதை “சாப விமோசனம் “ . இந்திரனால் அகலிகைக்கு நேர்ந்தது அனைவரும் அறிந்ததே . கல்லாய் மாறிப்போன அகலிகைக்கு ராமனால் மோட்சம் கிடைத்தது . பின்னர் , ராமனின் திருமணம் நடந்தது . 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகும் ஒரு கொடுமை நடந்தது , அது தான் அக்னிப் பிரவேசம் . சீதைக்கு நடந்தது ராமனுக்கு ஏன் நடக்கவில்லை ?? அகலிகையும் நானும் ஏற்றுக் கொள்ளாதது இதுதான் . அகலிகைக்கு ஒரு நீதி , அவனுக்கு ஒரு நீதியா ….. திருமணம் ஆகும் போது ராமர் மாதிரி கணவன் வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பேதைமை .
🔆கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் … நகைச்சுவை கலந்த கதை … எட்டி நின்று கரம் தான் கொடுக்க முடியும் , உடன் வாழ முடியாது .
100 கதைகளைக் கொண்டது . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் . அனைவரது நூலகத்தலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
"காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை - இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டு கொண்டே வருகிறது. இன்று - நேற்று - நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனை தானே.
நான் என்ற ஒரு கருத்து, அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின் என்று நாமாக வக்கணையிட்டுப் போட்டுக் கொண்ட வரிகள்... இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்...
நான் என நினைத்த - நினைக்கும் - நினைக்கப் போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்... கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் கட்டும் மணற் சிற்றில்தானே இந்த நாகரிகம்... மகா காலம் என்ற சிலந்தியின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவ நதியின் ஓரத்தில் கட்டி வைத்த மணற்சிற்றில்... என்ன அழகான கற்பனை' என்று உச்சிப் போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்.
மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக் கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத் தானா... நான் பிறப்பதற்கு முன்... என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞை உண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப் பற்றியுள்ள சூழ்நிலைக்குத் தான் பிரக்ஞையுண்டா? " -புதுமைப்பித்தன்
தமிழ் இலக்கியத்தின் முதல் பிதாமகன் புதுமைப்பித்தன். அவரில் இருந்து தான் தமிழின் நவீன இலக்கியம் தொடங்குகிறது ( பாரதி மரபும் கையாண்டார்). புதுமைப்பித்தன் கதைகளையும் அவரின் வாழ்வு அனுபவங்களையும் பார்க்கும் போது மிகவும் பெருமைக்காக இருக்கிறது. அந்த வகையில் தமிழின் நவீன இலக்கியம் தொடங்கிய இடத்திலேயே மிக வலுவான ஒரு அடித்தளத்தை புதுமைப்பித்தன் அமைத்து கொடுத்திருக்கிறார். சிறுகதையில் எல்லா வடிவங்களையும் முயற்சித்து பார்த்திருக்கிறார்.பின் நாவீனதுவம், மேஜிகல் ரியாலிஷம், வரலாறு, ஃபேன்டஸி என்று அத்தனை வடிவங்களையும் எழுதி இருக்கிறார். புதுமைப்பித்தனின் மொழி நடை சற்று சிடுக்கானதாகவும் மிக அதிகமான சமஸ்கிருத சொற்களை பயன்படுத்திய இருப்பதாலும் விரைந்து வாசிப்பதற்கு ஒரு தடையாகவே இருக்கிறது. உண்மையிலேயே நிறைய கதைகளை வாசிப்பதற்கு மரபின் மீதும் தொன்மத்தின் மீதும் நமக்கு பரிச்சியம் இருந்தாக வேண்டியதாக உள்ளது. பெரும்பாலான கதைகளில் வறுமை நிறைந்த வாழ்வை எள்ளள் உடன் பதிவு செய்திருக்கிறார். இரண்டாவதாக அவரது கதைகளில் வெளிப்படுவது புரட்சிகரமான கதைகள் மூடதனங்களையும் மரபில் இருக்கும் பழமைவாதங்களையும் மிகக்கடுமையாக பகடி செய்து எழுதுகிறார். புதுமைப்பித்தன் கதைகள் எழுதிய காலகட்டம் இங்கு சுதந்திரப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் அதிகமாக இருந்த காலகட்டம் ஆனால் புதுமைப்பித்தன் ஒன்று இரண்டு வரிகளைத் தவிர சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை பற்றி எந்த கதையும் எழுதியதாக தெரியவில்லை அது ஏன் என்றும் புரியவில்லை. நிற��ய கதைகள் காலம் கடந்து நிற்பவையாகவும் நிறைய கதைகள் தேவையற்றவையாகவும் இருந்தது உண்மையில் புதுமைப்பித்தனையே வாசிப்பது என்பது கதைகளில் இருக்கும் சமஸ்கிருத வார்த்தையால் மிகக் கடுமையான ஒன்று ஆகவே இருந்தது.
புதுமை பித்தன்'இன் சிறுகதை தொகுக்கப்பு ஒரு உளவியல் பூங்கா. பல்வேறு மனித வாழ்வியல் முரண்களின் முகவரி
கதைகளின் கட்டமைப்பு 1930 -> 1980 மொழி நடைக்கும் , கால சூழலக்கும் ஒத்து இயங்கும் ஒரு படைப்பு. என்னக்கு சில, பல தமிழ் வார்த்தைகள் புரிய வில்லை அது என் மொழி ஆளுமைக்கு விட்ட சவால். அவரின் சமூக திறனாய்வும் , நையாண்டி முடிவும் சிறுகதைகளுக்கு இலக்கணமாக கருதலாம் .
ஐயர், பிள்ளை, என இரு பெரும் சமூக சாதிகளின் மாந்தர்கள் பெருவாரியான இடங்களை நிரப்புகிறார்கள். பித்தனின் சாதி விழுமியங்கள் ஒரு புரட்சி .
புனைவு கதைகள் நம்மை அந்த உலகிற்கு கூட்டிச்செல்லும்.
நூற்றியிரண்டு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில்...சித்தி, இது மிஷின் யுகம், கொடுக்காப்புளி மரம், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஆகிய நான்கு சிறுகதைகள் எனக்கு பிடித்திருந்தது.
What a phenomenal book! World class indeed. I donno if Manto and Chugtai have written works like this. Ponnagaram, Aatrangaraiyil pillayar, Chellammal are all powerful stories that changed me a bit. The language is tailored to the exact audience he wants to talk to. Many hardcore stories use Manipravalam so much so that its super hard to understand even for me, who has some exposure.
சிறுகதைகளின் அரக்கன் - புதுமைபித்தன். கதைகள் பலவற்றில் தொடக்கமும், முடிவும் இருக்காது. வாழ்க்கையின் ஒரு அத்தியாயம். அவர் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, அந்த சமுதாய சூழலை அனுமானித்துக்கொள்ளலாம். சில கதைகள் மேஜிக் ரியலஸித்தல் அடிப்படை கொண்டதினால், ஒவ்வொருவரும் அவர்களது கற்பனைக்கு ஏற்றவாரு கிரஹித்து கொள்ளலாம். இவர் உபயோகித்திருக்கும் மொழி எனக்கு ஆரம்பத்தில் கடினமாகவே இருந்தது. பழக்கபடும்பொழுது இறுதிக்கே வந்துவிட்டேன்.
My first book on pudhumaipithan.Top 20 Short story compilation of him by Anandha Vikatan publication. What a writer. Can understand why he is considered pioneer in short stories. Written revolutionary stuffs in pre independence era. Need separate guts for it. Any Tamil short story fans should read his works first.
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம்.
ஆற்றங்கரையோரமாக இக்கதை துடங்கும். கரையோரம் ஒரு பிள்ளையார் வீற்றிருப்பார். ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வருவதால் மணற்குன்றும் கற்பாறைகளும் பிள்ளையாரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன.
அந்த சமயம் பார்த்து ஓர் கிழவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் பிள்ளையார் படும்பாட்டை பார்த்து ஒருயோசனை தோன்றியது அவரது மனதில்.
அவர் பிள்ளையாருக்குச் சமுகம் என்ற மேடையை அமைத்து, பிள்ளையாருக்குப் பேய்ப் பிடிக்காமல் இருக்க சமயதர்மம் என்ற அரச மரத்தையும் மற்றும் ராஜ தர்மம் என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார்.
வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் தண்ணீர் எப்போதும் இருந்துவந்து. இதனால் அரச மரமும் வேப்ப மரமும் செம்மையாக வளர்த்தன.
பிள்ளையாருக்கு இன்பம் என்னவென்று தெரிந்தது, இதன் காரணமாக தனக்கு உதவிய பெரியவரின் நினைவில் தனக்கு மனிதன் என்று சூட்டிக் கொண்டார்.
தண்ணீர் மிகுதியாக மற்றும் வண்டல்களினாலும் இரண்டு மரமும் செழித்து வளர்த்தன. பிள்ளையாருக்குமரத்தின் வாயிலாக நிழல் கிடைத்தது மழைக் காலத்தில் எப்போதும் குளிர்ந்த காற்றும் பிளைளையாலின் மீது மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்தன.
இரண்டு மரங்களும் செழித்து வளர்ந்தமையால் பறவைகள் மரத்தின் மேல் கூடுகள் கட்டி பிள்ளையார் மீது அசுத்தம் செய்துக் கொண்டியிருந்தன.
அந்த வழியாக இரு கிழவர்கள் வந்தனர். பிள்ளையாரின் கோலத்தைப் பார்த்தவுடன் இருவரும் ஆற்றங்கரைக்குப் போய் தண்ணீர் எடுத்துவந்து பிள்ளையாரைக் குளிப்பாட்டினார்கள்.
அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் பிள்ளையார் இருளில் சூழ்ந்து காணப்படுகிறார் அவர் மீது சூரிய ஒழி பட்டால் என்ன என்று எண்ணி ஒருவர் மரக்கிளைகளை வெட்டினார் மற்றொருவர் பக்கத்தில் ஒருமேடையை அமைத்தார்.
இவர்கள் இருவரும் பிள்ளையாரைக் கொண்டுவந்து அந்த புதிதாக அமைக்கப்பட்ட மேடையில் வைத்தனர்.
சிறிது நேரம் பிள்ளையாருக்குச் சூரிய ஒழி இதமாக இருந்து. ஆனால் நேரம் செல்லச் செல்ல சூரிய ஒழியின்தாக்கம் அதிகமானதால் பிள்ளையாருக்கு உடம்பு முழுவதும் சூட்டுக் கொப்பளம் வந்தேவிட்டன. ஆகையால் அவர் பழைய இடத்துக்கே ஓடிச் சென்று அமர்ந்து கொண்டார். இதனால் அந்த மேடையை கட்டியவர் மனம் வருந்த அவர் கட்டிய மேடையில் அமர்ந்து உயிரை விட்டார் .
சில காலம் சென்றது அரச மரமும் வேப்ப மரமும் பிள்ளையாரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து கொண்டு இருந்தன. பிள்ளையாரின் தலைப் பகுதி இரு மரக்கிளைகளுக்கிடையில் சிக்கிக்கொண்டன, மற்றும் வேப்ப மரத்தின் வேர்களோ பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிக்கொண்டு அவருக்குத் துயரத்தைத்தந்தன.
பல காலம் உருண்டோடியது பல கிழவர்கள் ஆற்றங்கரைக்கு வந்தனர். வந்தவர்கள் பிள்ளையாரின் நிலைகண்டு பீதியடைந்து, பிள்ளையாரை எப்படியாவது இந்த இடத்தில் இருந்து எடுத்து வேறு இடத்துக்கு மாற்றத்திட்டம் தீட்டினர்.
பிள்ளையாரை அவர்கள் விடுவித்தனரா? இந்த தறுவாயில் பிள்ளையார் என்ன கனவு கண்டார்? பிள்ளையார் தான் கண்ட கனவு நினைவாகி தன்னை விடுவித்துக்கொள்வாரா? போன்ற பல கேள்விகளுக்கு ஆற்றங்கரைப் பிள்ளையார் என்ற கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
-பாலமுருகன். லோ-
—————————————————————-
பொன்னகரம்.. திரு புதுமைப்பித்தனால் புனையப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இதுவும் ஒன்று. இந்த கதை மணிக்கொடி இதழில் 06.05.1934 வெளிவந்துள்ளது..
இந்த கதையைப் பார்க்கப் போனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி நகர்த்துகிறார்கள் எப்பத்தை எதார்த்தமாக அவரது கதையில் கூறியிருப்பார் திரு புதுமைப்பித்தன்அவர்கள்.
கதை ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் சாராயக் கடை இருக்கும் சந்தில் இருந்து ஆரம்பிக்கும்.
அந்த குறுகலான சந்தினை அப்படியே படம்பிடித்து எடுத்துக் காட்டியிருப்பார் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன்.
மழை பெய்தால் அந்த சந்தின் நிலைமை என்வாயிருக்கும் என்பதை அழகாக நமக்குப் புரியும்படி சொல்லியிருப்பார்.
அங்கு வளரும் சிறு பிள்ளைகள் தண்டவாளத்தின் பக்கம் நின்றுகொண்டு எப்படி தன் கையை உயர்த்தி குட்மார்னிங் சொல்கிறார்கள் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மேலும் பிள்ளைகள் எப்படிச் சந்தோசப்படுவார்கள் அந்த தண்டவாளத்தின் பக்கத்தில் நின்று விளையாடும்போது போன்ற பல விஷயங்களை அழகாக எடுத்துரைத்திருப்பார்.
கதையின் நாயகி அம்மாளு; அம்மாளுவின் புருஷன் முருகேசன். முருகேசன் குதிரை வண்டி வைத்துப் பிழைப்பு நடத்துபவன். அவனுடன், அவன் தம்பி, தாய், மனைவி(அம்மாளு) மற்றும் குதிரை. அம்மாளு மில் கூலி வேலைப் செய்கிறாள். இவர்கள் இருவரின் சம்பளத்தைவைத்துத் தான் அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
ஒரு நாள் சந்தோஷத்தின் மிகுதியால் முருகேசன் சாராயம் அருந்திவிட்டு கீழே விழுந்து, எழுந்து வீட்டிற்கு. அவனுக்கு மருந்து போடக் கூட காசு இல்லை அவளிடம்.
எப்படி அவள் கணவனுக்கு மருந்து வாங்குகிறாள். என்ன செய்தாள் மருந்து வாங்குவதற்கு. இதைத்தெரிந்து கொள்ளப் பொன்னகரம் என்ற கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
-பாலமுருகன்.லோ-
——————————————————————
உணர்ச்சியின் அடிமைகள்..
இந்தக் கதையும் புதுமைப்பித்தனின் கதைகளில் ஒன்று. எழுத்தாளர் கதையின் வாயிலாகக் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் ஆசாப் பாசங்கள், ஒருவர் மற்றொருவரின் பெயரில் எவ்வளவு அன்பு வைத்தரிக்கிறார்கள் போன்றதை அழகாகத் தனக்கே உரித்தான பாணியில் சொல்லவிருப்பார்.
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வைத் தான் இவர் தன் கற்பனையைக் கலந்து அவரது எழுத்துக்களின் முழமாகத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒன்றரை வருடம் கழித்து இவர்களுக்குக் குழந்தைப் பிறக்கிறது. அவர்கள் அந்தக் குழந்தையை எப்படிக் கவனித்தார்கள் என்று சொல்லியிருப்பார் எழுத்தாளர்.
கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் உரையாடலை, நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். படிப்பவர் மனம் கோணாதவாறு அவரது எழுத்துக்கள் இருக்கும்.
காலம் செல்லச் செல்ல அவர்கள் இருவரும் எப்படித் தங்களது முதுமையைக் கையாண்டார்கள் என்பதை அழகாகக் கூறியிருப்பார்.
அவர்கள் இருவரும் எப்படிப் பேரப்பிள்ளையுடன் விளையாடுகிறார்கள் போன்ற அனைத்தையும் பக்குவமாக எடுத்துரைத்தரிப்பார்.
உணர்ச்சியின் அடிமைகள் கதையைப் படிக்கும் போது நமக்குள் தோன்றும், நாம் அனைவரும் அடிமைகள் தான் என்று. இக்கதை மணிக்கொடி இதழில் 08/07/1934 வெளிவந்துள்ளது.
-பாலமுருகன்.லோ-
—————————————————————-
கட்டில் பேசுகிறது…
இதுவும் திரு புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் ஒன்று. இந்த கதை மணிக்கொடி இதழில் 13.05.1934 வெளிவந்துள்ளது.
ஒருவன் உடல் நலக்குறைவால் அல்லது அவன் தவறுதலாக எடுத்த முடிவால்! உடல் பாதிக்கபட்டு கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவனின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதை எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் கூறியிருப்பார்.
கதைக்களம் கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில் உடங்கும். அங்கு நாயகனை ஒரு படுக்கையில் கிடத்தினார்கள்.
அவனது வலதுபுறமும், இடதுபுறமும் அவனைப் போல் வேறு சில நோயாளிகள் படுக்கையில் கிடத்தப்பட்டனர்.
ஒவ்வொரு படுக்கைக்குப் பக்கத்தில் அவர்களுக்கு வேண்டிய மாத்திரை, மருந்துகள் எல்லாம் வைப்பதற்கு ஒரு தடி அலமாரி உண்டு.
நாயகனுக்கு மறுபடியும் அந்த வயிற்றுவலி. அவரை கையால் வயிற்றை அமுத்திக்கொண்டு ஒருபுறமாகத் திரும்பிப் படுத்தான். அவன் மனம் சற்று வாடியது ஸ்பிரிங் கட்டிலாம் கட்டில் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டான்.
இது இப்படி இருக்கக் கட்டில் அவனுடன் பேச ஆரம்பித்தது. கட்டில்: என்ன வோய்! என் ஸபிரிங்கிற்கு என்ன குறைச்சல்? நீ நாளைக்கு ரொம்ப… என்னிடம் வருகிறவர்களை, மரியாதையாக நான்கு பேரோடு, சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் முறைப்படி நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன அர்த்தமாகவிட்டதா? உமக்கு அந்த வழித்தான்.
நாயகனின் காதுகளில் கோரமான பிசாசுச் சிறுப்பு சத்தம். இன்னும் சந்தேகமா என் டயரியை வாசிக்கிறேன் கேள்!
கட்டில் நாயகனிடம் என்னவெல்லாம் கூறியது. நாயகனுக்கு என்ன நடந்தது? என்பதைக் கட்டில் பேசுகிறது கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். - பாலமுருகன்.லோ-
——————————————————————-
நிகும்பலை….
திரு புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இக்கதை 15.07.1934யில் மணிக்கொடி இதழில் வெளிவந்துள்ளது.
விடிந்தும் சூரியனின் ஒழி அந்த அறையின் பக்கம் செல்லவில்லை. அந்த அறையில் ஒரு மாணவன் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏகாக்கிர ( ஒன்றிலே ஊன்றிய மனம்) சிந்தனையிலிருந்தான்.
என்னவென்று பார்த்தால் இரவு முழுவதும் பாடப் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தான் பரீட்சை காரணமாக.
இந்த கதை மூன்று நண்பர்கள் தங்களது பரீட்சையை எப்படி எழுதுகிறார்கள் என்பது தான். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைப் படிக்கும் போது, நமது பள்ளி மற்றும் கலாசாலை(பல்கலைக்கழகம்) ஞாபகம் மனதில் வந்த செல்லும்.
எப்படி மாணவர்கள் பரீட்சைக்குத் தயார் செய்து கொள்கின்றனர். நண்பர்களிடையே பாடச் சம்பந்தமாக என்னபேசிக் கொள்வார்கள் என்பதைத் தொழிவாக எடுத்துக் கூறியிருப்பார்.
பிறகு நண்பர்கள் ஒன்று சேர்ந்து கலாசாலை ( பல்கலைக்கழகம்) சென்று ‘ஹால் டிக்கட்டு’ எப்படி வாங்குகின்றனர் போன்ற பல சுவாரசியமான விஷயங்களை அழகாக தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
மாணவர்கள் எப்படியெல்லாம் பரீட்சை ஹாலுக்கு வருகைதருவார்கள். அவர்களது மனோபாவம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதைத் தெள்ளத் தொழிவாகச் சொல்லியிருப்பர் தன் எழுத்துக்கள் மூலம்.
இந்த மூன்று நண்பர்கள் பரீட்சையை எழுதினார்களா? அவர்களது வாழ்க்கையில் அடுத்தகட்ட நடவடிக்கைஎன்ன? தெரிந்துகொள்ள நிகும்பலை கதையைப் படியுங்கள்.
- பாலமுருகன்.லோ-
—————————————————————
தனி ஒருவனுக்கு….
பாவாடைக்கு மகனாகப் பிறந்தவன் அம்மாசிச் சாம்பான். ஏனோ அம்மாசிச் சாம்பானின் தகப்பன் பாவாடை குறுகிய காலத்திலே இறைவனடிப் போய்ச் சேர்ந்துவிட்டார்.
அந்த ஊரில் பணம் படைத்த ஒருவர் இவனுக்குச் சிறுத் தொகை பணம் கொடுத்து உதவி திருமணமும் நடத்திவைத்தார். சில காலம் கடந்தது! அம்மாசிச் சாம்பானின் அம்மாவும் இறையடி சேர்ந்தாள்.
ஏன்னோ இதற்குப் பிறகு அம்மாசிச் சாம்பானுடன் அவனது மனைவியும் உடன் வாழவில்லை. அவனது மனைவி தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
எழுத்தாளர் இந்த கதையின் வாயிலாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அம்மாசிச் சாம்பான் எப்படி இந்த உலகத்தில் வாழ்ந்தான் அவனை மற்றவர்கள், எப்படி நடத்தினார்கள்? அம்மாசிச் சாம்பான் ஒரு வேலை சோற்றுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிந்தான்?
என்னென்ன நாடகங்கள் நிறைவேற்றினான் ஊர்கார்ர்கள் மத்தியில் போன்ற எல்லாவற்றையும் நேர்த்தியாக தன் எழுத்தின் மூலம் சொல்லியிருப்பார்.
அவனுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்? ஜெகத்தினை அழித்துடுவோம் என்ற அடிகள் நம் செவியில் விழுந்தவுடன், நம் மத்தியில் என்ன உருக்கம், என்ன கனிவு! ஆனால் அம்மாசிச் சாம்பான் வாழ்வில் நடந்ததோ முற்றிலும் வேறு. தெரிந்து கொள்ளத் தனி ஒருவனுக்கு என்ற கதையைப் படியுங்கள்.
இந்த கதையும் திரு புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஒன்று. இது மணிக்கொடி இதழில்12.08.1934யில் வெளிவந்துள்ளது.
- பாலமுருகன்.லோ-
—————————————————————-
ஒப்பந்தம்…
ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு எப்படி திருமணத்தை நடத்த ஏற்பாடுச்செய்கிறார்கள் என்பதை எழுத்தாளர் தன் எழுத்துக்கள் மூலம் அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார்.
பார்வதி நாதன் பி.ஏ முடிதாகிவிட்டது மற்றும் சர்வீஸ் கமிஷன் பரீட்சையை ஒழுங்காக எழுதி முடித்தாகிவிட்டது. பிறகு என்ன அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறான்.
தந்தை; சங்கர லிங்கம் பிள்ளை அவர்கள் . தந்தையின் ஆசை!பிள்ளையை ஒரு பெரிய இடத்தில் திருமணம் பேசி முடிக்க வேண்டுமென்று.
இதற்காக வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருந்தது. பார்வதிநாதனின், அம்மா சங்கரலிங்கத்திடம் பெண்ணை பற்றிச் சொன்னாள். அதற்கு சங்கரலிங்கம் கூறினார் நமது மகன் படித்து விட்டு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் தங்க நகைகள், இரண்டாயிரம் ரூபாய்க்கு மற்றது ஒரு ஆயிரத்துக்குச் செய்தார்களேயானால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த சமயம் பார்த்து தபால் ஒன்று வீடு தேடி வந்தது. தபாலில் நாயகனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. உடனே தந்தை தன் மகனை அழைத்தார் பார்வதிநாதனும் மாடியிலிருந்து கீழேயிறங்கி வந்தான். அவனிடம் தபாலைக் கொடுத்துப் படிக்கும் படிச் சொன்னார் சங்கர லிங்கம். அவனும் தபாலைக் கையில் வாங்கி படிகளானான். அதில் அவனுக்கு அரசாங்கத்திலிருந்து குமாஸ்தா வேலைக்குக் கடிதம் வந்திருந்தது, உடனே வந்துச் சேறும் படிச் சொல்லியிருந்தது அந்த கடிதத்தில்.
பிறகு என்ன குடும்பத்தில் மகிழ்ச்சி தான். சங்கரலிங்கம் மகனிடம் சொன்னார்; இனிமேல் உனக்குக் கல்யாணம் தான் என்று சொல்லி, உனக்கு உன் அம்மா ஒரு சிங்கிகொளத்து பெண்ணை பார்த்து வைதிருக்கிறார் என்று. உடனே பார்வதிநாதனுக்கு வெக்கம் தாங்க முடியவில்லை.
நாயகனுக்குச் சென்னையில் வேலை. பெரியவர்கள் பேசி முடித்தபடி சிங்கிகொளத்து பெண்ணுடன் திருமணம் நடந்ததா? நாயகனுக்கு!என்ன நடந்தது பார்வதிநாதன் வாழ்வில்? முழுவதையும் தெரிந்து கொள்ள ஒப்பந்தம் கதையைப் படியுங்கள். இந்த கதையும் புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பில் ஒன்று. மணிக்கொடி இதழில் 05.08.1934யில் வெளிவந்துள்ளது.
மக்களிடம் நல்ல கருத்துக்களையும் சிறந்த வாழ்க்கைப் பதிவுகளையும் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களிடம் இருந்து தனித்தே நிற்கிறார் நமது புதுமைப்பித்தன்! அவரே சொல்லியும்விடுகிறார்! இவை எல்லாம் வெறும் கதைகளே! ஓர் எழுத்தாளனுக்குத் தான் கண்டதையும் கேட்டதையும் தன் கற்பனையைக் கொண்டு எழுத எல்லா உரிமைகளும் உண்டு! என் கதைகளைப் படித்துவிட்டு கோபித்துக்கொள்பவரையே அதிகம் நேசிக்கிறேன்! அதனால் அவர்களை மேலும் கோபப்படுத்த இன்னமும் எழுதுகிறேன் என்கிறார்!
"புதுமைப்பித்தன்" என்ற பெயருக்கேற்ப மேலும் இவரது பல கதைகளைப் படிக்கத் தூண்டுவனப் போல் புதுமையாகவே அமைந்துள்ளன இவர் கதைகள். நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டாலும், ஓர் நல்ல நூலைப் படித்த திருப்தி மனதில் நிறைந்துள்ளது❤️
நான் நினைத்ததை தான் எழுதுவேன்! உலகத்தையும் மக்களையும் என் எழுத்தின் மூலம் திருத்துவதோ மாற்றுவதோ என் நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே, கடைசியில் நமக்கு அற்புதமான படைப்புகளை வேறு விதமாகக் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது!
தன் மன ஓட்டப்படி கதைகளை எழுதிக் கொடுத்துள்ளார்! நான் படித்ததிலேயே இவர் எழுத்து நடையும், வார்த்தைகளும் எனக்கு சிலது புரியவில்லை என்றாலும், புதுமையாக இருந்தது❤️. மேலும் அந்தக் காலத்தில் மக்கள் பயன்படுத்திய பேச்சு வழக்கு, எழுத்து நடை ஆகியவற்றின் மேல் நாட்டம் வந்துவிட்டது✨
புதுமைபித்தன் 1930-40களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது.
கதைகள் பெரும்பாலும் அப்போதிய மெட்ராஸ் மாகாணம், திருநெல்வேலி மற்றும் அதனை ஒட்டிய கிராமங்கள் சார்ந்து புனையப்படுள்ளன. கதைகளின் காலகட்டம் சுதந்திரத்துக்கு முன்பான காலகட்டமாக அமைத்துள்ளது.
சில இதிகாச, புராண கதைகளும், அறிவியல் புனைக்கதைகளும் இடம்பெற்றுள்ளன.
கதைக்கரு மாறுபடினும், பெரும்பாலும் அனைத்து கதைகளிலும் ஒருவித குறும்பும், நகைச்சுவையும் இழையோடுவதை காணமுடியும்.
கதைமாந்தர்கள் பெரும்பாலும் நடுத்தர அல்லது ஏழை வர்க்கமாக இருக்கக்காணலாம்.
அக்கால சமூகம், அரசியல் மற்றும் மதம் எவ்வாறு கதைமாந்தர்களின் வாழ்கையில் பெரும் பங்கு ஆற்றியுள்ளன என்பது கதைகளில் பிரதிபலிக்கிறது.
இக்கதைகள் யாவும் நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய காலபொக்கிஷங்கள் ஆகும்.
மிகவும் பிடித்த கதைகள்: - இலக்கிய மம்ம நாயனார் புராணம் - துன்பக்கேணி - விநாயகர் சதுர்த்தி - மனித யந்திரம் - செவ்வாய் தோஷம் - பொய்க் குதிரை - மகாமசானம் - செல்லம்மாள் - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - சித்தி - நீர்விகற்ப சமாதி - படபடப்பு - அவதாரம் - பொன்னகரம் - நிகும்பலை - ஒப்பந்தம் - இரண்டு உலகங்கள் - ராமனாதனின் கடிதம் - இந்த பாவி - வெளிப்பூச்சு - சமாவின் தவறு - தேக்கங் கன்றுகள்
முப்பது கதைகள். அவற்றில் சில புரிந்து கொள்வது கடினமாக இருந்தது- ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம்.
ஆனால் படிக்க படிக்க அந்த காலத்திலேயே இத்தனை புரட்சிகரமான எண்ணங்களா என்ற வியப்பு மேலோங்கி நின்றது. அந்த எண்ணங்களை தைரியமாக எழுதி இருப்பதும், அவற்றை இன்னும் தைரியமாக பிரசுரித்ததும் புல்லரிக்க வைத்தது. கோபாலயங்கரின் மனைவி, அந்த முட்டாள் வேணு முதலிய கதைகள் எக்காலத்துக்கும் புதுமையானவை.
மேலும் கடவுள், மதம் ஆகிய சென்சிடிவ் விஷயங்களை நக்கலாக புதுமைபித்தன் கையாண்டிருப்பது மிக மிக ஆச்சிரியமே! ஆற்றங்கரை பிள்ளையார் என்னும் கதை கண்டிப்பாக படிக்க கூடியது.
Slice of life எனப்படும் யதார்த்த கதைகள் நிறைய. நகைச்சுவை பல கதைகளின் கதாநாயகனாக இருந்தது. மற்ற கதைகளில் மெல்லிய இசை போல. பழைய காலத்து ஸ்ரீதர் சின���மா பார்க்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. புதுமைபித்தன் திரைக்கதைகளும் பின்னாளில் எழுதியுள்ளார்.
டாக்டர் சம்பத், பயம், நான் பாவி போன்ற கதைகள் மூலம் தன் கற்பனை கூடாரம் எவ்வளவு பெரியது என்று காட்டியிருக்கிறார்.
மிகவும் versatile தொகுப்பு. எல்லா கதைகளையும் படிக்க முடியாவிடினும் சிலவற்றையாவது கண்டிப்பாக எல்லா தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படிக்க வேண்டும்.
The advantages with these classics is that it empoers you time travel. Then you realize how some things in the world have transformed drastically and some things have not changed even a bit. But a classic is a classic.
"காவியத்திற்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன்" என்று ஜெயகாந்தனால் புகழப்பட்ட எழுத்தாளரின் நூற்றி மூன்று சிறுகதைகளையும் உட்கொண்ட முழுமையான தொகுப்பு இந்தப் புத்தகம். இப்படிப்பட்ட ஒரு படைப்பை விமரிசித்து எழுதுவது எளிது அல்ல. அதுவும், பெரும்பான்மையான கதைகளை விரும்பி அனுபவிக்காத ஒரு வாசகனாக, விமரிசிப்பது நிச்சயம் எளிதல்ல.
புதுமைப்பித்தனின் கதைகள் அனைத்தும் சுதந்திரத்திற்கு முன் நடப்பவை. திருநெல்வேலி ஜில்லாவில், தாமிரவரணியின் கரையில் நடக்கும் கதைகள் நிறையவே உள்ளன. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வையும், ஆண் -பெண் பாலின வர்க்கத்தில் பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் பிரத்யேகமான சங்கடங்களையும், வாழ்க்கையில் நிகழும் சாதாரண நிகழ்வுகளை வித்யாசமான கண்ணோட்டத்தில் நோக்கும் திறமையும் குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், பல கதைகளில் இவர் கையாண்டுள்ள தமிழ் மொழியின் உபயோகம் படிப்பதற்கு எளிதல்ல.
இந்த நூற்றி மூன்று கதைகளில் மூன்றில் ஒரு பங்கு கதைகள் என்னைக் கவர்ந்தன. அதிலிருந்து குறிப்பிடத்தக்க கதைகள் இவை: திருக்குறள் செய்த திருக்கூத்து; ராமநாதனின் கடிதம்; அகல்யை; கோபாலய்யங்காரின் மனைவி; கபாடபுரம்; கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்; விபரீத ஆசை; டாக்டர் சம்பத்.
கிட்டதட்ட 1000 பக்கங்கள்., 100க்கும் மேலான பெரு/சிறு/குறுங்கதைகள்.. 3 கட்டுரைகள்.. கொண்டது புதமைப்பித்தனின் இக்கதைதொகுப்பு.
அனைத்தும் எழுதப்பட்டது 1930களின் மத்தியிலிருந்து 1940களின் மத்திமம் வரை.
பெயருகேற்றார் போல் இன்றைக்கும் பொருந்தும்படியான கதைகளை, கிட்டத்தட்ட 80-90 வருடங்களுக்கு முன்பே சமகால எழுத்து வர்ணனைகளை விடுத்து புதுமையுடன் எழுதியிருக்கிறார், #புதுமைப்பித்தன்.
பிற கதைகளை போல், நல்ல முடிவைக் கொண்டோ அல்லது ஒரு கருத்தை வைத்து முடிப்பதைப் போலல்லாமல், வர்ணணைகளினூடே நம்மை கதையினுள் பயணிக்க வைத்து, அதன் உட்பொருளை புரிய வைக்க முற்படுவதாக இருக்கிறது.
அதாவது, கதைகளுக்கென வரையறை(boundary set) வட்டத்தை வரைந்து, அதனுள்ளேயே சுற்றி சுழலாமல்., எல்லைகளற்ற விஸ்தாரப்போக்கில் உள்ளதாக இருக்கிறது #புதுமைப்பித்தன் எனும் திரு. #விருத்தாசலம் அவர்களின் எழுத்து நடை.
மேலோட்டமாக அல்லாமல் ஆழ்ந்து படிக்க வேண்டிய, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சிறுகதைகள்...ஆங்காங்கே, சமஸ்கிருத கலப்பு என்றாலும் , ரசம் குறையாமல் வாசிக்க உகந்ததாக இருக்கிறது இத்தொகுப்பு.
Pudumaipithan is a classical short story writer of 20th century and his stories have humour,pathos and mostly of ordinary middle and lower middle class Tamil people He, like a typical Tamil Hindu, unlike Hindutwa guys, treats gods with a sense of humour and derision. Except for one or two stories wherein he goes mystical other stories are fine collection. I have read these stories five or six decades back and when i read these now they remain relevant in spite of change of ambiance of background.
Multiple short stories completely different from each other. With detailed explanation every single events, puthumaipithan took me back to the old days of tamilnadu. Wish someone makes mini-movies based on these short stories. Good book to read.
What to say. He wrote about everything on earth. All kind of emotions. Satire is inborn for this man. This book is like a Bible for the aspiring writers.