இது எனது 25வது நாவல். காணும் முன் காதலில் விழும் நாயகன். கண்ட பின் சொல்லவும் வேண்டுமா! தன் கவிதைப் பெண்ணுக்கான காதல் அவளைச் சேருமா? தன் கண்முன் பார்த்த உறவுகளின் ஏமாற்றத்தால், காதல் கசக்குதையா நிலையில் இருக்கும் நாயகி. பின் எங்கே நாயகனின் காதலை உணர.
மனைவி இறந்த ஒரே மாதத்தில், தன்னில் பாதி வயது இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வரும் நாயகியின் தந்தை. திட்டமிட்ட திருமணமா? அப்படியானால், அவர் பெற்ற இரு மகளின் நிலை? கவிதையாய் ஒரு காதல்! படியுங்கள் "கவிஞனாக்கினாள் என்னை!"