இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. நம்மைச் சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும, அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நாம் கண்டிருப்போம்.
IMHO this is a very important Tamil literary work of our time. Even though at times the story was dragging and sounded repetitive don’t get discouraged by that. There are some real gems embedded inside the story line regarding several underreported, purposely ignored and distorted social issues of then and now Chennai slum dwellers.
இரட்டை ஆயுள் தண்டனையாக 35 வருடங்களை சென்னை மத்திய சிறையில் கழித்துவிட்டு வெளியே வரும் கிழவர் சர்சர்ரென விரையும் வண்டிகளையும் அவசர அவசரமாக அலுவலகம் விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் ஆச்சர்யமாய் பார்க்கிறார். புது வேஷ்டி சட்டை அணிந்திருந்தாலும் மனபிறழ்வு அடைந்தவனைப் போல எல்லோரையும் உற்றுப் பார்க்கும் கிழவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிச் செல்கிறார்கள். சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு தள்ளு வண்டி கடையில் மதிய உணவு சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்து காசு கொடுத்து விட்டு கைகளை வேட்டியில் துடைத்தப்படி வரும் கிழவரை எதிர் கொண்டு வரவேற்கிறான் அவரோடு சில காலம் ஒரே அறையில் தங்கியிருந்த பீடி கொழுத்தி. எப்படிப்பட்ட புயல் காற்றிலும் பீடி கொழுத்தி விடும் அவனது சாமர்த்தியமே அந்த பெயருக்கான காரணம். மூர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கடைகளை "வாட்ச்மேனாக" இரவில் கவனித்துக் கொள்ளும் பீடி கொழுத்தி, "மாமா.. என்கூடயே இரு மாமா.. உன்ன நல்லா பாத்துக்குறேன்.. எனக்கும் யாரும் இல்ல.. ஒனக்கும் யாரும் இல்ல." என்கிறான். அன்று இரவு அவனோடு தங்கும் கிழவர் விடிந்ததும் அருகில் இருக்கும் அல்லிக் குளத்தினைப் பார்க்க வேண்டுமென்கிறார். அந்த குளத்தின் மீது தான் இந்த கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை மறைக்கும் பீடி கொழுத்தி விடியற்காலையில் அவர் குளம் பார்க்கப் போகிறேன் எனக் கிளம்பும் போது பொறுக்க மாட்டாமல் உண்மையைச் சொல்கிறான். கடந்த காலத்தோடு தனக்கிருந்த அத்தனை தொடர்பும் அறுந்துவிட்டது என்பதை உணரும் கிழவர் குளம் இருந்த அந்த திசை நோக்கி அப்படியே செல்கிறார். யார் அந்த கிழவர்? அவரது கடந்த காலம் என்ன? நல்ல விதமாக நடந்து கொண்டதாக சிறையில் இருந்து தண்டனைக் காலம் குறைத்து வெளியே அனுப்பப்பட்ட கிழவர் என்ன குற்றத்திற்காக சிறைக்கு சென்றார் எனும் காரணங்கள் கதையில் அடுத்தடுத்து விரிகின்றன.
கைவண்டி இழுத்துப் பிழைக்கும் அம்மா அப்பா யாருமற்ற செங்கேணி, அதே குடிசைப் பகுதியில் வசித்து வரும் ஆராயியை விரும்புகிறான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் தான். அவளுக்கும் அம்மா அப்பா இல்லை. திருமணமான தன் அக்காவோடு தங்கியிருக்கும் அவள், அவளது குடிகார மாமனை நினைத்து பயப்படுகிறாள். இவர்களின் காதல் விஷயம் அவளது மாமாவுக்கு தெரிந்து செங்கேணியோடு சண்டை போட, ஆஜானுபாகுவான செங்கேணி தன்னை அடிக்க வரும் அவனை தடுக்கிறான். செங்கேணியை அடிக்க முடியாத கோபத்தில் ஆராயியை செங்கேணியின் கண் முன்னேயே காட்டுத்தனமாகத் தாக்கும் அவளது மாமனை தள்ளிவிட்டு ஆராயியை காப்பாற்றுகிறான். இனி என் வீட்டில் நீ இருக்க கூடாது என கோபமாக சொல்லிவிட்டு போகிறான் அவளது மாமன். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வரும் முனியம்மா, செங்கேணி-ஆராயி இருவருக்கும் ஆறுதல் சொல்லி புது ஜெகநாதபுரம் என்ற ஏரியாவில் இருக்கும் தன் தங்கை செல்லம்மாவிடம் அனுப்பி வைக்க இருவரும் புது வீடு எடுத்து தன் வாழ்க்கையை அங்கு தொடங்குகிறார்கள். அவர்கள் அங்கே சந்திக்கும் மனிதர்களும் அந்த சூழலும் இவர்களின் காதல் வாழ்வில் என்னவெல்லாம் செய்கின்றன என்பது தான் "கருப்பர் நகரத்தின்" கதைச் சுருக்கம்.
செங்கேணி, ஆராயி இருவரின் காதல் வாழ்க்கை தான் கதையின் ஆதாரமாக தோன்றினாலும் அதன் வழியே பெரியாரும் திராவிடக் கட்சிகளும் அறியாமையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டு வந்தன, மெட்ராஸ் பாஷையை கேலியாய் பார்க்கும் தன்னை உயர்ந்த சமூகம் எனச் சொல்லிக் கொள்பவர்கள், விவசாயக் கூலிகளாக ஆண்டைகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் வாழ்வியல், சேரியில் கொசுக்கடியிலும் குப்பை மேடுகளின் நாற்றத்திலும் வாழும் மனிதர்களின் மன நிலை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.
ஆங்கிலயர்களிடம் பட்லராக வேலைப் பார்த்த மக்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முயல, அதற்குள் ஆங்கிலேயர்கள் தமிழ் கற்றுக் கொண்டனர். அவர்களை அழைக்க ஆங்கிலேயர் உபயோகித்த "வா மேன்", "போ மேன்" என்பதெல்லாம் மருவி மக்கள் அதனை "வாமே", "போமே" எனப் பேசத் தொடங்கிவிட்டனர். இது பட்லர் இங்கிலிஷ் என்றே அழைக்கப்பட்டது. இது இன்னும் விளக்கமாக கதையின் நடுவே உரையாடலாக விவாதிக்கப்படுகிறது. அதே போல் ஆண்டையின் அராஜகத்தால் பாழடிக்கப்படும் செங்கேணியின் இளமைப் பருவப் பகுதியும், செங்கேணியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் பாளையத்தின் தந்தை வெள்ளை என்ற பெயர் கொண்டதற்காகவே அந்த ஊர் ஆண்டையால் அடித்து அவமானப்படுத்தும் பகுதியும் மனதை கனக்கச் செய்தன.
ஆரம்பம் முதலே நிதானமானவனாக, வீண் வம்பு சண்டைகளுக்கு போகாதவனாக வரும் செங்கேணி ஏன் சிறைக்குப் போனான் என்பதற்கான காரணம் நாவலின் இறுதியில் தெரிய வந்த போது நிஜமாகவே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
நாவலின் குறையாக நான் உணர்ந்தது மிகவும் அதிகமாக "ரொமான்டிசைஸ்" செய்யப்பட்ட செங்கேணி-ஆராயி காதல் மற்றும் செங்கேணியின் கற்பனையாக வரும் விவரணைகள். ஏனோ கணைத்துக் கொண்டு வரும் குதிரை, அது இழுத்துக்கொண்டு செல்லும் அம்மா என நீண்டு கொண்டே இருந்த அந்த விவரணைகள் பயங்கரமாக எனக்கு சலிப்பூட்டின. ஆனால் அவனது அந்த கற்பனைகளே அவன் வாழ்க்கையின் போக்கை மாற்றுவதில் ஒரு பங்காற்றுகிறது. அதே போல் காதல் விவரணைகளும் கொஞ்சம் போல சலிப்பூட்டின.
1970-களின் சென்னையை (கற்பனையில்) பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நாவலாக தான் "கருப்பர் நகரத்தை" சொல்வேன்.
(வட)சென்னை மாநகரத்தின் புனையப்பட்டுள்ள கதைகளில் சிறப்பான புதினம்.சென்னையைப் பற்றி அறிய விருப்பம் உள்ளவர்கள் ஏற்ற சிறந்த ஏடு. கரன் கார்க்கி எழுத்துக்கள் படிக்கத் தூண்டும் விதத்தில் உள்ளது.அவரின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
Nesikum Manithargal atra vaalvu ethagaiya naragam!! Athai naangu suvargalukul vaalvathu Innum kodumai! நான் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் இது சென்னையின் வெளி தோற்றம் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணம் தான் இருந்தது! ஆனால் வாசித்த பின்பு அது மூற்றிலும் மாறி விட்டது. அரசியல், வாழ்வு, சொல்லாடல், கதை களம் எல்லாவற்றிலும் நேர்த்தி!! நானும் இந்த மனித அழகயிலை ரசிக்க வேண்டும். எந்த சமூகம் முன்னேற படிப்பு, பதவி தேவை.. அரசியல் பேச வில்லை என்றால் நீ அந்த சமூகத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன்! செங்கெனி, ஆராயி என்றுமே அன்பு குறையா ஊற்றுகள்! அம்மாவை பற்றி பக்கங்கள் உங்களை நிலை குளையசெய்யும். ஆனால��� எங்கும் மெட்ராஸ் வாசம் நம்மை அங்கே கொண்டு செல்லும்!! 70களில் இப்படி இருந்த ஊற!! என் கண் முன்னாள் ஒரு கோட்டை கட்டினேன்!! நன்றி!!
இதில் வரக்கூடிய சோகங்கள் மாட்டிறைச்சி கசிந்தது காதல்கள் அரசியல் அனைத்தும் என் மனதை ஒரு வருடி விட்டது கடைசி 50 பக்கங்கள் இந்த படியுங்களேன் நமக்கு சோகம் தொட்டுக்கொள்ளும் சென்னை முழுவதும் சுற்றி விட்டு வந்தேன் ஒரு அனுபவம் கிடைத்தது
பெரும்பாலும் வரலாற்று புனைவுகள் யாவும் பேரரசுகளையும், ஆட்சி அதிகாரத்தையும் மட்டுமே சார்ந்து புகழ்வதும், மிகைப்படுத்தப்பட்ட கலாச்சார பின்னணிகளையும் மக்கள் வாழ்வையும் காட்சிப்படுத்தும்.
பல்வேறு கிராமங்களில் ஆண்டைகளின் சாதீய கொடுமை விலங்களிலிருந்து உயிர்பிழைத்து வாழ வழித் தேடி வந்த ஒரு பெரும் கூட்டமே மெட்ராஸின் முகவரி என்பதை இதை விட எளிதில் நமக்கு புரியவைக்க முடியாது. பிரிட்டீஷ் ஆட்சியார்களிடம் பணியாளர்களாக பட்லர்களாக பணியமர்த்தப்பட்டு நதியோரத்தில் குடியேறியவர்கள் எப்படி அரைகுறை ஆங்கிலத்துடன் பட்லர் இங்கிலிஷை பேசினார்கள் என்பதும் ஆங்கிலேயன் பேசிய அரைகுறை தமிழ் பின்னாலில் எப்படி சென்னை பேச்சு வழக்காக மாரியது என்ற சான்றுகளும் மிகப்பெரும் வியப்பே.
எரிந்து அழிந்த போன பழைய மூர்மார்க்கெட் வளாகம், அல்லிகுளம், LG ரோடு, நாய் கிடங்கு, மின் ஆலை, நிலக்கரி கிடங்கு, ரிப்பன் பில்டிங், சென்ட்ரல், ஆற்றுப்பாலம், நடராஜ் தியேட்டர், குதிரை வண்டிகள், பலு இழுக்கும் வண்டிகள் என 1960-70களின் மெட்ராஸை பார்க்க பெரும் ஏக்கம் தொற்றிக்கொண்டுள்ளது.
மெட்ராஸின் பூர்வ குடிகளையும் அதன் பேச்சு வழக்கையும் நூறாண்டு காலமாக கொச்சை படுத்திவரும் மேல் சாதி வன்ம மனங்களை காட்சிபடுத்துவது நிச்சயம் உதவுகிறுது. பொன்னும், பொருளும், போரும் எதுவுமின்றி நிலக்கரி மேட்டின் வாடையும், தூசியும், நிலக்கரி ரயில் இன்ஞ்சினின் இரைச்சலும், சாராய வாடையும், நாய் கிடங்கின் ஓலமும், குப்பை மேட்டின் நாற்றமும் கலந்த இன்று வேறோடு அழிந்த ‘புது ஜெகதாபுரம்’ செங்கேணி-ஆராயியின் இப்பிரபஞ்சத்தின் அப்பாற் பட்ட காதல் கதையை கேட்ட கதை இது. நன்றி கரன் கார்க்கி ❤️
Wonder full book to have in your shelves for references about Madras....Literally North Madras in 70's. Sengeni wow man lively character...I always wonder more english words intrude in uneducated peoples of our North Madras side,, the answers are here in this book....Being a Madrasian i would Suggest this is an must Read....A Good example is that people of Madras use this word "Mey" often sounds like "inga Vammey ,, "Pomme", its actulally from the British Peoples use to Communicate with workers use word"Man" like hey Man,, take this Man,, Take that man,, Inspired by the addressing of themselves by British people they started using this word..like Mey vammey Pommey...it takes a while to get into this book...but once you are in ....really a good read...
இந்நூல் பல மாதங்களின் முயற்சியினால் ஜூன் மாதம் தான் கிடைத்தது, வாங்கிய சில தினங்களிலே இதை வாசிக்க துவங்கினேன். வாசித்த முதல் அத்தியாயத்தில் இருந்து அந்த வாழ்வில் வாழ துவங்கினேன். மொழியின் நடையும் அழகும் எளிமையும் ஒன்றி இருந்ததால் எளிதில் இந்நாவலை வாசித்து முடித்து விடலாம். ஆனால் அவ்வாழ்க்கையில் சில நாட்கள் வாழ விரும்பியதால் நிதானமாகவே வாசித்தேன், பல தினங்கள் அவ்வாழ்வை வாழ்ந்த அனுபவத்தில் பேரின்பம் அடைந்தேன்.
கதை துவங்கியது இருபத்தொறாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தான், சிறையில் இருந்து முப்பது வருடம் கழித்து வெளிவந்த கதாநாயகன் அவன் வாழ்ந்த இடத்தின் மாற்றத்தை கண்டு படும் துயரத்தை எளிதில் நமக்கு உணர்த்திவிட்டதால் நாமும் அக்கதா நாயகன் போல் அந்த எழுபதுகளில் இருந்த சென்னையின் அழகிற்காக ஏங்குவோம் - அவ்வாழ்விற்காகவும். உழைக்கும் எளிய மக்களின் ஒரு காவிய காதல் கதை, அது மட்டும் இன்றி அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இன்பங்கள் துயரங்கள் மோதல்கள் சரிவுகள் நெகிழ்வுகள் என பல உணர்வுகளை மிகவும் அழகாக இயற்றியுள்ளார்.
இந்நாவலில் வரும் பகல் கனவுகள் எல்லாம் அவ்வப்போது நம்மை தொந்தரவுக்கு உள்ளாக்கியது அந்த கனவுகளின் கற்பனையும் எதார்த்தத்தை பின்னி எழுதிய விதமும் கனவுகளின் அச்சாகவே இருந்தது. அதுபோலவே இக்கதையில் வரும் துயரங்களும் கனவாக இருக்கக் கூடாதா என பல தருணங்களில் அவதிக்குள்ளாக்கியது.
சென்னையில் குடியேறிய பெரும்பான்மையினர் பிற மாநிலங்களிலிருந்தும் மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்களே அதிலும் பெரும்பான்மையான மக்கள் ஜாதி கொடுமைகளால் பாதிக்கப்பட்டு சுயமரியாதையுடன் வாழ வந்து, இங்கு உழைக்கும் வர்க்கமகவே வாழ்ந்து வந்தனர். இதை வைத்து சென்னையின் தமிழை கொச்சை எனவும் இழிவு எனவும் ஒரு கருத்து தற்போதும் நிலவுகிறது. இந்த சென்னையின் தமிழ் உருவானதற்கான விளக்கத்தை நாவலில் ஒரு உரையாடல் மூலமாக வரும், அவ்வாறு தான் வந்திருக்க வேண்டும் என உணர்ந்தேன்.
செங்கேணி-ஆராயி இவ்விருவரின் காவியத்தில் நானும் வாழ துவங்கிய அக்குடிசையில் படுத்துறங்கினேன், அவனின் தள்ளு வண்டியை சுமந்து சென்றேன், அவனோடு அந்த அல்லிக் குளத்தில் போராடி தாமரையை பறித்தேன், பாளையத்துடன் உரையாடினேன் இப்படி பல சந்தர்ப்பங்களில் அவ்வாழ்வுகளில் வாழ்ந்து மகிழ்ந்தேன். அதனால் அவ்வாழ்க்கில் இருந்து வெளிவர பல நாட்கள் ஆயின. முடிவு இவ்வாறு தான் இருக்கக்கூடும் என்ற ஒரு எண்ணம் இருந்தும் இக்கதையில் ஏற்பட்ட முடிவை மனம் ஏற்க மறுத்து ஏன்? ஏன்? என்று கேள்வி எழுப்பியவாறு இருந்தது. அந்த தருணத்தை ஏற்க மறுத்து கனத்து இதயத்தோடு அந்த பூங்காவில் படுத்து உறங்கினேன்.
One of the greatest story to be told about the common man. No king no fancy invasion no glory just a plain old story about a cart puller and his wife living in a slum in north madras trying to make his life. It has an excellent kaleidoscope of characters from a womanizing butcher who sells beef to a bootlegger who tries to woo women using money. Excellent book
Started of interesting. But soon there was a lot of meandering. I struggled thru' the middle trying to figure out how and where author was taking me. I was hoping to read more about the people, their background etc. A little about the place, as to how the place evolved etc. While there was some twists and stories, but they were lost on me. Meaning, dont know why that was introduced, and what was to be gleamed from there.
The latter part of the book started gripping me again. I had couldnt stop reading when i got to the last 30-40 pages. Compared to the middle pages, where i averaged about 2-5 pages a day.
Oh karan karki, you the beauty ❤. "Literally I could see the old madras in front of my eyes" This book deals with many ideologies. Loved the main characters sengeni and aarayi. The climax was heart breaking💔, at last sengeni got some peace from this cruel world, hope sengeni and aarayi live happily together in heaven
Well, am I the only person who thought this book is good? Took me, literally, took me to the 1970s Vada Chennai. Love, Poverty,Periyarism, Casteism, Woman empowerment, the book touched almost all the social issues prevalent in those days.
Tough to start off but at one point gets interesting.
சென்னை என்றதுமே நம் நினைவில் வருவது நீண்ட கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டிடங்கள், சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், நினைவு இல்லங்கள், கோட்டைகள், கூவம் நதி என விரியும். ஆனால், கூவம் நதிக்கரை ஓரமாக வாழ்ந்துவரும் ஆயிரம் ஆயிரம் குடிசைகளும், அதற்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துகூட பார்ப்பது கிடையாது. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல். அதிலும் குறிப்பாக மத்திய சென்னை மக்களைப் பற்றிய பதிவாக இது அமைந்துள்ளது.
முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் முரண்பாடும் அதன்விளைவாக எழுந்த புரட்சியும் இந்நாவல் பேசுகிறது. இதற்கு இடையே செங்கேணி – ஆராயி இவர்களின் காதல் வாழ்வும், அவர்கள் குடும்பத்தோடு இணைந்த மற்றவர்களின் பிணைப்புமாக நாவல் விரிகிறது. அடிமை வாழ்வில் இருந்து கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையையும், அவர்களைக் குறிப்பிட்ட சில வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் குறித்து விரிவாகப் பேசுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது. இளமையில் கல்வி கற்க வாய்ப்பிருந்தும் அதனைப் பயன்படுத்தமால் இருந்தமையால் உருவான வெறுமையைப் பதிவுசெய்கிறது.
ஆற்றோரத்தில் வசிக்கும் மனிதர்கள் அரசுவேலைக்குச் சென்றபிறகு அதனை மறந்து சென்றுவிடும் நிலையில், அரசுப்பணியில் இருக்கும் சிலரின் உதவியோடு அங்கு படிப்பு மையம் திறக்கப்பட்டு தினக்கூலிகளின் இரவுப்பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கும் போக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நடத்தப்படும் இரவுப்பள்ளி சிறப்புடன் செயல்படும் விதத்தினையும், அதில் பணிபுரிந்த வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்ததையும் நாவலில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.
சாதாரண மனிதர்களைப் பீடித்து அழிக்கும் கள்ளச் சாராய விற்பனையும், அதன்மூலம் சீரழியும் பல்வேறு குடும்பங்களையும் பதிவுசெய்துள்ளார். காவலர்களின் ஒழுக்கக்கேடும், அவர்கள் தங்கள் பணியைச் செய்வதில் காட்டும் தொய்வும் கூட சாதாரண மனிதர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதனைக் காட்டியுள்ளார். நகரமயமாதல் சூழலில் நடக்கும் அசாதாரண வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் சிதையும் குடும்ப அமைப்பும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கோபமும், இயலாமையும், காமமும், தனிமையும், அரசியலும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச்செல்லும் என்பதனை கறுப்பர் நகரம் நாவல் மூலம் கட்டியமைத்துள்ளார் கரன் கார்க்கி. இந்நாவல் சென்னையின் அசூர வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வரலாற்றுச் சரித்திரம் என்பதில் ஐயமில்லை.
எளிய மனிதர்களின் வாழ்வும், காதலும், அரசியலும் தான் கருப்பர் நகரம். பாளையம் பேசும் அரசியல் முக்கியமானது அப்புடினு நினைக்கிறேன். சென்னையின் மாற்றம் இதில் தெளிவாக காட்டப்படுகிறது.