எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம்.மிகப் பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்த் ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. என்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்சும், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்லமுடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் என்னும் ஏராளமாக உள்ளது என்பது உலகப் பெரியோர்களின் கருத்து. இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும். இது மொழிப்பெயர்ப்பு நூல் அல்ல.
எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம் நாவல், அறிவார்ந்த ஆன்மிகம் அமானுஷ்யன் நாவல் மற்றும் இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி நாவல் ஆகியவை அச்சு நூல்களாக வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். அதை தினத்தந்தி நூலாக 2016ல் வெளியிட்டுள்ளது.
It is an Excellent Book by the Author. He Narrated very well about Paul Brunton's Spiritual Experience in Egypt. It gives us to know more about Paul Brunton's Books. Especially A Search in Secret India & Secret Egypt. This is one of the best book for who is interested to read spiritual secrets and our ancient myths.