Jump to ratings and reviews
Rate this book

கடைத்தெரு கதைகள்

Rate this book

Unknown Binding

2 people are currently reading
32 people want to read

About the author

A. Madhavan

8 books5 followers
A. Madhavan (ஆ. மாதவன்) was a Tamil writer born and raised in Thiruvananthapuram, Kerala. He was one of the pioneers of realist writing in modern Tamil literature. He has written short stories, novels, essays, and translations and has edited magazines. Furthermore, he was acclaimed by readers and critics alike as the storyteller of the market street, for bringing everyday events of the bazaar he lived in to his literary work.

He was the recipient of the 2016 Sahitya Academy Award for his collection of articles titled Illakkiya Chuvadukal (Literary Traces).

Selected works
Punalum Manalum (On a River’s Bank)
Krishna Parunthu (Brahmini Kite)
Thoovaanam (Drizzle)
Kaalai (Bull)
Ettavathu Naal (Eighth Day)

Translations from Malayalam:
Malayatoor Ramakrishnan’s Yakshi (A Mythical Being)
P.K. Balakrishnan’s Ini Gnan Urangatte (And Now, Let Me sleep)
Karoor Nilakantapillai’s Sammaanam (Reward)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
8 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
July 24, 2020
எந்த புத்தகம் சிறப்பானவர்களால் விமர்சிக்கப்பட்டதோ அதுவே வாசிக்க உகந்த இலக்கியப் புத்தகம். மற்றதெல்லாம் புறங்கையால் தள்ளி விட வேண்டியது என்று இங்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது போல.
அப்படியொரு சாபம் தமிழ் இலக்கிய உலகிற்கு இருக்கிறது என்ற முகத்தை அடிக்கடி உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஏதாவதொரு எழுத்தாளனை வாசிக்கத் தொடங்கி அவரை தேடும் போது. அப்படியான இலக்கிய விமரிசன மேதைகளால் கைவிடப்பட்ட ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை வாசிப்பதற்கான முதல் படியை சு.வேணுகோபாலின் ”தமிழ் சிறுகதையின் பெருவெளி” கொடுத்தற்கு சு.வேணுகோபக்கு ஒரு நன்றி.
சமீப காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட சாகித்ய அகாடெமி விருது மட்டுமே அப்படியொரு எழுத்தாளனிருப்பதை புற உலகிற்கு கொண்டு வர உதவியது. இப்போதெல்லாம் விருதுகள்தான் எழுத்தாளனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அவல நிலையில் தமிழ் இலக்கிய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது,
முன் சொல்லப்பட்டது ஆ.மாதவனுக்கான முன்னுரையல்ல. இலக்கிய விமரிசன மேதைகளால் கழட்டி விடப்பட்ட அத்துனை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். நான் கடைசியாக வாசித்த முடித்த புத்தகம் ஆ.மாதவனின் பக்கத்துத் தெரு கதைகள். ஏனோத் தெரியவில்லை நாகர்கோவிலின் தமிழ் வழக்காட்டு மொழி வாசிக்கும் போது என்னுள் ஏதோ இனம் புரியாத சிலிர்ப்பைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. இது எழுத்தாளனின் பலமும் மொழி வெறியர்களின் பலவீனத்திற்கான குறியீடாகவும் இருக்கலாம். மொழி வெறியர்களையும் இலக்கிய விமர்சன மேதாவிகளின் விமர்சனங்களையும் கடந்தால் மட்டுமே இவரைப் போன்றவர்களின் இலக்கிய இனிமையை அனுபவிக்க முடியும்.
மொத்தம் 11 கதைகள் அடங்கிய தொகுப்பு. இதில் 9 கதைகள் என்னுள் ஏனோ மிகப்பெரிய சிந்திப்பு அலையை கடத்தி விட்டிருக்கிறது. வாசிக்கும் போதே இதற்கான விமர்சனத்தை எழுதிட வேண்டுமென தோன்றியும் விட்டது,
ஆ.மாதவனின் களம் திருவன்ந்தபுரம் பத்மநாபசாமி கோவிலைச் சுற்றிய வட்டாரத்துக்குள் அடங்கியது. சிறு வட்டாரத்தின் கதைகளானாலும் அதில் சொல்லப்படும் விசயங்களும், நிகழ்வுகளின் வீரியமூம் குறுகிய வட்டத்திலடக்க முடியாதது.
ஆ.மாதவனின் பார்வை மேம்போக்கானதல்ல அது அரசியலைப் பற்றி, விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி, விளிம்பு நிலை வாழ்வியலின் சூழலைப் பற்றி, இறப்பின் துக்கத்தைப் பற்றி, இறப்பில் கிடைக்கும் ஈடுகளை உறிஞ்சும் அட்டை மனிதர்களைப் பற்றி , பசியைப் பற்றி, அது நிகழ்த்தும் கொடூரம் பற்றி, காவல்நிலைய அரசியல் பற்றி, எளியவனின் இயலாமையைப் பற்றி, தயவில்லாத காமத்தின் ( ஈர்ப்பு, மீறல்கள்) பற்றி, அழிந்து போய்விட்ட கலாச்சாரத்தின் எச்சங்களைப் பற்றி, வாயில்லாத ஜீவன்களின் வால்சல்யத்தைப் பற்றி, அதை முதலெடுக்கும் மனிதனின் சு;யநலத்தைப் பற்றி, வாயில்லா ஜீவன்களின் இழப்பு கொடுக்கும் துக்கங்களைப் பற்றி, அறம் மீறாத மனிதர்களைப் பற்றி எனப் சொல்லிக் கொண்டே செல்கிறது.
மனிதனின் வாழ்க்கை அறத்திற்குட்பட்டது என்பது வாய் வழி மட்டும் தான் அப்படியெல்லாமில்லை என்று மாதவனின் கதைகள் அடித்துப் போட்டு சொல்கிறது.
கண நேர மனித மனத்தில் உண்டாகும் ஈர்ப்பு, சுயநலம், பசியின் வலி, ஏமாற்றம், பழி சொல்லலிருந்து தப்பிக்கும் உத்தி, என்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அறத்திலிருந்து மீறல்கள் எங்காவதொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது என்பதை எந்தவொரு சாயலுமில்லாது சொல்லியிருப்பது அருமை.
ஒரே கதையில். ( விஸ்வரூபம் ) மட்டும் எனக்கொரு நெருடலாக தோன்றியது கோள் சொல்வது போலவும் நீதியை வலிந்து சொல்வது போலவும் இருப்பது சிறுப்பிள்ளைத்தனமாக தோன்றியது.


Profile Image for Praveen (பிரவீண்) KR.
230 reviews34 followers
February 22, 2019
புதினங்கள் எழுதுவது ஒரு கலை என்றால் சிறு கதைகள் எழுதுவது கூட ஒரு கலையே! புதினங்களில் நாம் சொல்ல நினைப்பதை விரிவாக எழுதிக்கலாம். ஆனால் சிறு கதைகளிலோ சொல்லப்போகும் கதை அல்லது கருத்து சில பக்கங்களுக்குள் அடங்கவும் வேண்டும் அதுபோல் மக்களிடம் சென்றடையவும் வேண்டும். அது போல வட்டாரம் சார்ந்த படைப்புகள் எனக்கு மிகவும் புடிக்கும். அந்த இடத்தின் மரபை பற்றியும்,மொழியை பற்றியும் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள் எனக்கு என்றும் பிரியமானவர்கள். நானும் அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால் ஒன்றிணைய முடிகிறது அந்த படைப்புகளில். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன், ஆ.மாதவன் - எல்லாரும் இவ்வூரை சார்ந்தவர்களே. அதிலும் நீ.பத்மநாபன் மற்றும் மாதவன் படைப்புகள் திருவனந்தபுரம் சார்ந்ததாக இருக்கும்.

'எட்டாவாது நாள்'-ல் வீட்டை விட்டு ஓடி வந்து சாலை தெருவை வீடாக்கி கொண்ட ஒரு முசல்மானின் கதை சொல்கிறார். ஜல்லிக்கட்டு காளையாக திமிறிய காலமும் அதன் பிறகு நோய் வாய்ப்படும் தருணமும் சொல்கிறார். ஒற்றையானாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் மக்கள் அவரை இயலாத வயதில் பார்க்கும் விதமும் சொல்ல பட்டிருக்கிறது. ஒரு மகனை மரணமும் அதற்க்கு கிடைக்கும் நஷ்டஈடும் அதை பெற நடக்கும் ஊதாரியும் குடிகாரனுமான அப்பனை பற்றியே 'ஈடு' வழியாக சொல்ல படுகிறது. தன் மனைவியின் மரணம் தொடர்ந்த விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் ஒரு கணவனின் மனதில் எழும் நினைவுகளே 'பதினாலு முறி'. 'உம்மிணி' அதே பேருடைய ஒரு வெள்ளந்தியான கொஞ்சம் மனம் நலம் குன்றிய ஒருவன் சாலை தெருவில் வாழ்கிறான். அவன் வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வை சொல்கிறது. பாச்சி என்ற தன் நாயை பற்றிய ஒரு முதிய கடை காவல்காரனின் நினைவுகளே 'பாச்சி'. ஒரு பாலக்காரனும் அவனுடைய வயதான அம்மாவையும் சார்ந்தது 'தூக்கம் வரவில்லை'. தெருக்களில் அடிக்கடி சின்ன விபத்துக்கள் நடக்க காரணமான பசுவை அப்புறப்படுத்த வரும் அரசு அதிகாரிகளும் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் பசுவுமே 'கோமதி'. ஒரு நொண்டி பிச்சைக்காரன் அவனுக்கு பிச்சைபோடாத ஒருதனிடம் இருந்து எப்படியாச்சும் ஒரு வாட்டியாவது காசு பெர போராடும் 'நொண்டிச் சாக்கு' மற்றும் சாலை கடை தெருவிற்கு புதிதாக வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் சார்ந்த சம்பவமே 'விசுவரூபம்' .

திருவனந்தபுரத்தில் முக்கியமான இடம் கிழக்கே கோட்டை. ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் விட்டு வெளியே வந்து அந்த கிழக்கே கோட்டை சந்தியை தாண்டியதும் ஒரு நீளமான தெரு உள்ளது. சாலை தெரு. நிறைய கடைகள் நிறைந்த ஒரு கம்போளத்தெரு. ஆ.மாதவனின் இந்த கடைத்தெரு கதைகள் அனைத்தும் அங்கே நடைபெறுகிறது (ஒன்றை தவிர). அந்த மாதிரி ஒரு கம்போளத்தில் நாம் பல பாத்திரங்களை பார்க்கிறோம். கடைக்காரர்கள், சுமை தூக்கிறவர்கள், பிச்சர்க்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் ஏன் மாடு, நாய் கூட!!! இவர்களை தினமும் நம்மை சுற்றி பார்க்கிறோமே தவிர இவர்களுக்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது என்று நாம் உணருவதில்லை. அதிலும் தெருவில் சுற்றி திரியும் விலங்குகளை பற்றி எழுதின கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. எல்லா கதைகளில் ஒரு உயிர் இருந்ததை உணர்ந்தேன். நாஞ்சில் மற்றும் திருவனந்தபுரம் பாகங்களில் பேசும் வட்டார தமிழ் பழக்கமில்லாதவர்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும்; சில சொற்கள். பச்சையான வாழ்க்கையை உயிரூட்டியிருக்கிறார் எழுத்தாளர். கடை கம்போலங்களையும் சுற்று பகுதிகளையும் அவர் விவரிக்கும் விதம் அந்த இடத்தின் மீது இருக்கும் அவர் பழக்கத்தை குறிக்கிறது.

நாம் தினமும் கண்டும் காணாமல் போகும் நிறைய மனிதர்கள் உண்டு. சமூகத்தில் நமக்கு கீழ் இருக்கும் மனிதர்களை பலபேர் கண்டுகொள்வதில்லை. அப்படி பட்ட மக்களின் வாழ்க்கையின் சில ஏடுகளை இந்த புத்தகம் நம்மை புரட்ட வைக்கிறது.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.