Sivasankari is an Indian author and activist who writes in Tamil. She is one of the four Tamil writers asked by the United States Library of Congress to record their voice as part of the South Asian article on Sivashankari.
ஐயோ பாவம்! குடி மனிதனை எப்படி ஆட்டி வைக்கிறது. உண்ட கள் உன்னை நடுத்தெருவில் தள்ளும் என்று சொன்ன வள்ளுவனின் வாக்கு தியாகுவின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல மேய்ப்படக்காண்கிறோம். அழகே உருவான அம்மா. அந்த அழகை பொறுக்க முடியாமல் அவளை கொடுமை படுத்தி இரட்டை வேடம் போடும் அப்பா சமூகத்தில் பெரிய மனுஷனாக கருதப்படுகிறார். அன்பான தங்கை வாசுக்குட்டி. அவள் மரணப்படுக்கையில் இருக்கும்பொழுதும் இச்சைக்கு அலையும் அப்பா. வசுக்குட்டியின் பிரிவு தாளாமல் அவள்கூடவே போய்விடும் அம்மா. இதே சாக்கென இதுதான் உன் சித்தி என்று introduce செய்யும் அப்பா. அப்பாவின் ஜாடிக்கு ஏத்த மூடி இந்த சித்தி. பிறந்தகப்பெருமையை பீய்த்துக்கொள்ளும் பெண்டாட்டி, இவன் திருந்தி வாழ நினைக்கும்பொழுதும் என் அக்கா புருஷன் மாதிரி நீ இல்லை என்று கூறி நெஞ்சில் சுடுகிறாள். கேட்ட நண்பர்கள். இத்தனையும் தியாகுவை மொடாக் குடிகாரனாக்குகிறது. தாரில் சிக்கிக்கொண்ட நாயை போல மீளமுடியா துயரில் இருக்கும் தியாகு கரம் ஏங்கி தவிக்கிறான். ஹீரோபோல என்ட்ரி குடுக்கும் அவன் நண்பன் நாநா தெய்வத்தின் உருவாய் இருக்கிறான். சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு நட்பு இல்லையே என்று பொறாமைப்படவும் வைக்கிறான். இந்த கதையிலிருந்து மீள எனக்கு கண்டிப்பா சில நாட்கள் எடுக்கும்.