Sa. Viswanathan alias Saavi a famous Tamil author contributed important novels in Tamil history. Washingtonil Thirumanam was written by Saavi. A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end.
வாஷிங்டனில் திருமணம் - வழக்கமான ஐயர் வீடு பாரம்பரிய திருமணம், அதனை வாஷிங்டன் மாகாணத்தில் கோடி கணக்காக பணம் கொட்டி நடத்த என்னும் மிசஸ் ராக்பெலர், திருமணத்தின் பொழுது நடக்கும் வைபவங்களை தலைப்பு செய்தியாகி விநோதமாய் பார்க்கும் மக்கள் & அமெரிக்க ஊடகம். சாவி இந்த இரண்டு வரியை வைத்தே சுவையான கல்யாண சமையல் சாதம் சமைத்திருக்கிறார் :) சுமார் 500 பாட்டிகள் வாஷிங்டனின் உயரமான கட்டடங்கள் மீது அப்பளம் போட துவங்குவது, அரை குறை ஆங்கிலம் அறிந்த ஐயர்கள்-சாஸ்த்ரிகள், விபூதியை கோடாக நெற்றியில் வைத்துகொள்வது எப்படி என்று ஆராய்ச்சி செய்யும் அமெரிக்க ஊடகம், மிசஸ் ராக்பெல்லரை மாமியாக மாற்றி நலங்குக்கு அமர வைத்த சடங்குகளென பக்கத்துக்கு பக்கம் பலகாரம் :D
South Indian weddings are a spectale in their own right with it's customs lost in translation. How then do you draw attention to each element of the wedding? Write a book in which the Americans (Mrs.Rockfeller, no less) organize a south Indian wedding for the spectacle.
Written before the global amalgamation of cultures (read before Sangeeth in South weddings) - the book provides clean humor. One of the major tools used is exaggeration - imagine helicopters ferrying paatis to put out appalam for drying or having dogs imported to bark at narikoravans. After a point it seems repetitive and you know what Saavi is planning.
The books also leverages the pointlessness of certain customs by ensuring they are integral part of the story. The bride and groom conveniently take the back seat and I don't even recall them being centre of any story.
Focus on the spectacle never wavers. In one of the episodes, one character says the country which sent man to moon is fascinated by 'kolams' put by maamis.
The book is also a reminder for the era of tamil weeklies which gave some of the best contemprory books written in tamil.
Banal humor. Not for readers uninterested in fancy ritualisms.
Puns, though funny in some places, look to be desperate attempts in most other places.
Mocking of an indigenous community from TN (Narikurava) is totally uncalled for, distasteful, and it makes one ponder how low an author has to go to flatter one community, by also belittling other.
A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end. Though it was written in 1963, when J.F. Kennedy was the President of U.S.A., still it retains the charm. The concept was novel and the characterisation, especially Mrs. Rockefeller, Mr. Punch (Panchapakesan) and the Shashtrigal totally absorbs the readers.
நியுயார்க்கில் வாழும் சீமாட்டி மிஸஸ். ராக்ஃபெல்லர், அவரது கணவர் சீமான் ராக்ஃபெல்லர், ராக்ஃபெல்லரின் சகோதரி கேதரின், அவளது கணவர் ஹாரி ஹாப்ஸ், இவர்களது ஒரே மகள் லோரிட்டா, ஹாரி ஹாப்ஸுடன் நியுயார்க்கில் வேலை பார்க்கும் கும்பகோணம் T. K. மூர்த்தி, அவர் மனைவி லோசனா, இவர்களது ஒரே மகள் வசந்தா என மனதை விட்டு அகலாத பாத்திரங்களைப் படைத்து சாவி அவர்கள் 1964லில் உருவாக்கிய ஒரு அற்புத, கற்பனைக் காவியம்,
“வாஷிங்டனில் திருமணம்”.
ஆனந்த விகடனில் வாராவாரம் மலர்ந்து வாசகர்களைத் திணறடித்தது. சாவியின் செழித்த கற்பனையில் ஆரோக்கியமான நகைச்சுவையோடு அமெரிக்க நகரம் வாஷிங்டனில் ஒரு தென்னிந்தியத் திருமணம் மலர்வதாக கதை அமைகிறது.
வசந்தாவும் லோரிட்டாவும் நியுயார்க் யுனெஸ்கோ அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். வசந்தாவுக்கு தஞ்சாவூரில் வெகு விமரிசையாகக் கல்யாணம் நடைபெறுகிறது. அந்தக் கல்யாணத்திற்கு ஹாரி ஹாப்ஸ் தம்பதிகள் தங்களது மகள் லோரிட்டாவுடன் நான்கு நாட்கள் தங்கி திருமணத்தின் ஒவ்வொரு சடங்கினையும் அனுபவித்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டு, விரதத்திலிருந்து, கட்டுச்சாத கூடை வரை நடந்த சம்பவங்களை விதவிதமாக கேமிராவில் பிடித்துக் கொண்டு நியுயார்க் திரும்புகின்றனர். அவர்கள் மிஸஸ். ராக்ஃபெல்லரிடம் கல்யாணத்தைப் பற்றி விபரமாகக் கூற, சீமாட்டி ராக்ஃபெல்லர் தனது டெல்லி சிநேகிதியிடம் ஒரு தென்னிந்தியக் கல்யாணம் அமெரிக்காவில் வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என ஆதங்கப்பட, சிநேகிதி அதற்கு ஏற்பாடு பண்ணுவதாக வாக்களிக்கிறாள். அந்த அதிர்ஷ்டம் அறந்தாங்கி அய்யாசாமி அய்யர் என்பவருடைய மகள் ருக்குவுக்கு அடிக்கிறது. அறந்தாங்கி அய்யாசாமி, அவர் மனைவி விசாலம்மாள், அவர்களது மகள் ருக்கு, டெல்லி யு.எஸ். எம்பஸியில் வேலை பார்க்கும் அய்யாசாமியின் மருமான் பஞ்சு, ருக்குவின் பனாரஸ் பாட்டி, அபயாம்பாள் அத்தை, அய்யாசாமியின் மாமா ராமய்யர், சாம்பசிவ சாஸ்திரிகள், அம்மாஞ்சி வாத்யார், பையன் வீட்டு வாத்யார் அப்பு சாஸ்திரிகள், அப்பளாம் இட, ஜாங்கிரி புழிய, பருப்புத் தேங்காய்க் கூடு பண்ண, லட்டு பிடிக்க, பாலைச் சுண்டக் காய்ச்சி சக்கரை சேர்த்து திரட்டிப்பால் உருட்ட, மனோகரம், அதிர்ஸம், தேன்குழல் போன்ற பக்ஷண வகைகள் பண்ண திருநெல்வேலி, பாலக்காடு, தஞ்சாவூர் இந்த ஊர்களிலிருந்து பாட்டிகளைத் தனி விமானங்களில் நியுயார்க்கிற்கு வரவழைப்பது, கும்பகோணத்திலிருந்து நகை செய்யும் ஆசாரிகளையும் நியுயார்க் வரவழைத்து அங்கேயே ஆசாரிகளை புல்லாக்கு, ஒட்டியானம், எட்டுக்கல் பேசரி, ஜிமிக்கி போன்று நகை ஆபரணங்களை செய்யச் சொல்வது, திருச்சியிலிருந்து விசேஷமாக புஷ்பம், வெற்றிலை பாக்கு, அம்மி, கல்லோரல் வரவழைப்பது, பஞ்சுவுக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ் லல்லுவுக்கும் ஏற்படும் காதல், அம்மாஞ்சி வாத்யாரின் அரைகுறை ஆங்கிலம், சாம்பசிவ சாஸ்திரிகளின் வெகுளித்தனம், புரோகிதர்கள், நாதஸ்வர கோஷ்டிகள், பத்துப் பாத்திரம் தேய்ப்பவர்கள், பந்தக்கால் நடுபவர்கள், பந்தி முடிந்ததும் சாப்பிட்ட இலைகளை எடுத்து அடுத்த பந்திக்குத் தயார்பண்ணும் ஆயாக்கள், ஜானவாசத்தில் கேஸ் லைட்டைத் தூக்கிச் செல்வதற்காக நரிக்குறவாஸ் பட்டாளம், குரைக்கும் நாய்கள் என இவர்களனைவரையும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல சென்னையிலிருந்து தனி விமானங்கள், பையனின் அப்பா லால்குடி கோபால்சாமி அய்யர், அவரின் பையன் கல்யாண மாப்பிள்ளை ராஜா என்கின்ற ராஜாராமன் (டெல்லி செக்ரடேரியட்டில் வேலை), சம்பந்திச் சண்டை போடுவதற்கென்றே பையனின் மாமா சாமாவைய்யர், வாஷிங்டன் சம்மர் ஹவுஸ், டம்பர்ட்டன் ஓக்ஸ் மாளிகை,நேஷனல் ஆர்ட் கேலரி (அதன் மாடி மீது அப்பளாம் இடுவதற்காக), லிங்கன் மண்டபம், ஜெபர்ஸன் மெம்மோரியல், வாஷிங்டன் ஸ்தூபி, நிலவொளி படர செழிப்புடன் விளங்கும் செர்ரி மரங்கள் நிறைந்த டைடல் பேஸின் பூங்கா, கல்யாண வைபவங்களாகிய விரதம், மதியம் நிச்சயதார்த்தம், மறுநாள் காலை கண்ணுக்கு மையுடனும், கைத்தடியுடனும் சந்நியாசி கோலத்தில் மாப்பிள்ளையின் காசியாத்திரை, இரு மாமாக்களும் பையனையும் பொண்ணையும் தோளில் சுமந்து உற்சாகமாக ஆடும் மாலை மாற்றல் நிகழ்ச்சி, ஊஞ்சல், பட்டுப் புடவையுடன் ஜொலிக்கும் மாமிகள் கலர் சாத உருண்டைகளை நாலா பக்கமும் தெறிக்க விடும் வைபவம், மணமகன், மகள் இருவருக்கும் வெள்ளிக் கிண்ணத்தில் பாலும் பழமும் கொடுக்கும் நிகழ்ச்சி, அப்பாவின் மடியில் மகள் உட்கார்ந்த நிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் ஏற்றும் மங்கல நாண், பருப்பு உசிலி, நன்கு பொறிந்த உளுந்து அப்பளாம், வடை பாயசத்துடன் பலமான முகூர்த்த விருந்து, மண்டபத்தில் உணவிற்குப்பின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஜாலியான உரையாடல், மாலை நலுங்கு வைபவம், மறுநாள் பாலிகை கரைத்தல், கட்டுச்சாத கூடை, சம்பந்தி மாமிகளுக்கு மட்டும் ஸ்பெஷலாக ஹெட்குக் புளிக்காய்ச்சல் ஒரு பாட்டிலில் பண்ணித் தருவது, பிறகு கடைசியாக பிரிவு உபச்சாரமென மூன்று நாள் கல்யாணம் வெகு விமரிசையாக சாவி இந்த நாவலில் அழகுற விவரித்திருக்கிறார்.
வாஷிங்டனில் நடந்த அந்த பிரம்மாண்ட கல்யாணத்தில் இரண்டாவது முறையாகக் கலந்து கொண்டு அந்த ஆனந்தத்தை உங்களிடம் பகிர்கிறேன். நீங்களும் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனில் அமெரிக்கச் சீமாட்டி மிஸஸ். ராக்ஃபெல்லர் நடத்தி வைத்த அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு அனுபவிக்குமாறு வேண்டுகிறேன். ஐம்பது வருடங்கள் கழிந்தாலும் இன்றும் புது மெருகோடுதான் நாவல் பயணிக்கிறது.
அமெரிக்காவின் பெரிய கோடீஷ்வரி ராக் பெல்லர் நம்மூர் கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு , ஆச்சரியப்படுகிறார் . அதே போல் ஒரு திருமணத்தை வாஷிங்டனில் நடத்த திட்டம் போடுகிறார் . நகைச்சுவையுடன் நகர்கிறது கதை .
தவில் என்பது டபுள் ஹெட்டட் இன்ஸ்ட்ரூமென்ட். இதை வாசிப்பவர் ஒரு பக்கத்தை ஸ்டிக்கால் ‘பீட்’ செய்து கொண்டு மறு பக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிவதில்லை. தாலி கட்டும்போது சிலர் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’வென்று தவிலைக் கொட்டி முழக்குகிறார்.
விருந்தில் பரிமாறப்பட்ட வடுமாங்காயைக் கடிக்கத் தெரியாமல் பலர் விரலைக் கடித்துக் கொண்டு ‘ஆ! ஆ!’ என்று அலறினர். பற்களுக்கிடையி்ல் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள். மறுதினம் விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாஙகாய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப் பட்டனர்.
பல விஷயங்கள் அபத்தமாக இருந்தாலும் நான் இந்த மறு பார்வையில் நாவலை நான் ரசிக்கவே செய்தேன்.
The first book I have read in Tamil! Would recommend this book for its easy comprehension (the Tamil is a lot like what we speak at home). However, the plot was a bit too outrageous to me, and I say this knowing that it was never meant to be taken seriously, and I did find some of the stereotyping quite irritating.
This book should never exist at all. Exaggerated, outrageous, casteist. Book's full of caste pride, belittling indigenous group & stereotyping everything. And they call this humour? Not funny at all.
For the love of the silliest puns I possess, I would have rated this book a 5 full stars if not for the mocking and berating of a particular community. The holier-than-thou attitude of Brahmins oozes in places that's not needed and apparently is supposed to be funny. Nevertheless, 3 stars for the puns that I absolutely enjoyed.
The repartee of Mrs. Rockefeller on some of the wedding rituals kind of balanced the aforementioned attitude albeit only in a handful of places. I really enjoyed reading the first half.
The description of Washington D.C and the areas around and utilisation of the places for the events surrounding the wedding surely demands commendation.
********bloopers ahead******* Good start. Sarcastic genre. We can know all jargons about indian traditional brahmin style marriage. Fast ending. Seems like he rushed the ending. Felt it could have been better.
பியூர் பேண்டஸி. அலாதி கற்பனை. நம்மூர் பிராமணத் திருமணம் வாஷிங்டனில் நடைபெற்றால் எப்படியிருக்கும் என்று ஆசிரியருக்கு வந்த ஒரு க்யூரியாசிட்டி. அதன்படி தன் கற்பனைக்குதிரைகளை அவிழ்த்து கண்டபடி ஓட விட்டிருக்கிறார்.
தொண்ணூற்று ஒன்பதுகளில் இந்த புத்தகம் நிச்சயம் பல பேரை ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலம் பலரது ரசனைகளை மாற்றிவிடும் திறமை படைத்தது. அந்த வகையில் இந்த புத்தகம் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்குமா என்றால் இல்லை. நடைமுறைக்கு சாத்தியாயமில்லாத பல விஷயங்களை வெற்றிகரமாக அரங்கேற்றுகிறார் ஆசிரியர். இது நிச்சயம் பலருக்கு நெருடலையும் அதிருப்த்தியையும் கொடுக்கலாம். இணையதளத்தில் இப்புத்தகத்தை பலர் இவ்வாறு விமர்சித்திருந்தனர் – “Outdated Comedy”.
என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் ரசித்து சிரித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. வாஷிங்டன் டி.சி.யில் “டி.சி.”க்கு நம்மூர்காரர்கள் குடுக்கும் Explanation-இல் இருந்து ஆரம்பித்து அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் பல Hilarious. கோலம் போடுதல், அப்பளம் இடுதல் முதல் “சம்பந்தி சண்டை” (ஷம்பந்தி ஷண்டை) வரை, புத்தகம் முழுக்க நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. அமெரிக்க பத்திரிக்கைகள் நம்மூர்காரர்களின் நடவடிக்கை மற்றும் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தை பெரிதுபடுத்தி பிரசுரிப்பது செம்ம காமடி.
மொத்தத்தில் லேசான மனதுடன், பெரிதான எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் நிச்சயம் சிரிப்பிற்கு கியாரண்ட்டி.
Bland but imaginative. The book is super boring at times but there are some bright sections with good laughs. I didn't like the section about the Narikuravvar community which is an ethnic nomadic community and often facing social and financial difficulties. It will take some effort to finish this one.
I am aware whether the book has been translated to other languages. Yes it makes people understand the typical Tamil South Indian Wedding. I have missed this much time to read a wonderful work.Now I have decided to read all the great works done by Tamil Authors.....
கதை தொடங்கியதில் இருந்து முடியும் வரை அத்தனை அத்தனை நகைச்சுவைகள். கண்ணீர் விட்டு சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அவ்வளவு அழகாக நேர்த்தியாக எழுதியுள்ளார் கதாசிரியர் சாவி அவர்கள். சாவி என்ற புனைபெயரில் சா. விஸ்வநாதன் எழுதிய ஒரு நகைச்சுவை தமிழ் தொடர் தான் "வாஷிங்டனில் திருமணம���". வார இதழில் வெளியான இந்த தொடர் அநேகபேரை வாசிப்புக்கு கவர்ந்திழுத்தது. தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான சாவி பல நாட்களாக காத்திருந்து கடைசியில் திருவையாற்றில் கதைக்கான ஒரு வித்து கிடைத்து எழுதிய ஒரு கதை தான் இது. லோரிட்டா, வசந்தா, லல்லி, பஞ்சு, மிஸஸ் ராக்பெல்லர், பாட்டிமார்கள் என்று பலரும் இந்த கதையில் ஒரு அங்கம். நம் நாட்டு கலாச்சாரத்தின் படி ஒரு திருமணம், அமெரிக்காவில் தொன்னூறுகளின் காலகட்டத்தில் நடந்தால் எப்படியெல்லாம் இருக்குமோ, அதை நகைச்சுவையோடு எழுதியிருக்கிறார், எழுத்தாளர். அப்பளம் இடுவதை காண அமெரிக்காவில் திரண்ட கூட்டம், திருமணத்தை காண திரண்ட கூட்டம், என அத்தனை கூட்டங்களுக்கு மத்தியில் நானும் நின்றது போல ஒரு அனுபவம். "இந்தா மா, அந்த வாஷிங் சோடா எப்போ வரும்? பாட்டி, அது வாஷிங் சோடா இல்ல...வாஷிங்டன் " வாஷிங்டன் மான்யுமென்டைப் பார்த்து, "இதென்ன பென்சில கூர்மையா சீவி குத்திவச்சத போல இருக்கு தட்டையா இருந்தாலாவது அப்பளம் போடலாம் " ஒவ்வொரு ஊர் பாட்டிமார்களுக்கென்று ஒரு டீம் லீடர். அதாவது தின்னவேலி (திருநெல்வேலி) பாட்டிமார்களுக்கென்று ஒரு குரூப் லீடர், திருச்சி என்று ஒருவர். யார்யார் எவ்வளவு அப்பளம் இட்டனர்.எந்த அணி லீடிங் என்று கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது போல இதை அமெரிக்காவே பார்த்தது, அத்தனையிலும் நகைச்சுவை கலந்து கலந்து இட்டிருக்கிறார் ஆசிரியர். பங்காளி சண்டையை பாப்பதற்கு ஆசையாக காத்திருந்த மிஸஸ் ராக்பெல்லர், அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்த பஞ்ச். பஞ்சு என்பது பஞ்ச் ஆயிருத்து. இடையே ஏற்பட்ட லல்லியின் காதல் என்று அனைத்து சுவையான சம்பவங்கள் கதையில் இருக்கின்றன. தாலி கட்டி முடிக்கும் வரை, இல்லை இல்லை முடித்த பின்பும் கூட இந்த கதையில் நகைச்சுவைகள் நிறைந்திருக்கின்றன. படித்து, சிரித்ததே உங்களுக்கும் வயிறு வலிக்கட்டும் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
நமது பாரம்பரிய திருமணம் அமெரிக்காவில் உள்ள பெரு நகர் ஒன்றில் இங்கு நிகழ்வது போலவே நிகழ்த்தப்பட்டால் அதை அமெரிக்கர்கள் விந்தையான ஒன்றாக பார்க்க மாட்டார்களா?
நமது பண்பாட்டுக் கூறுகள் வேறு பண்பாட்டைச் சார்ந்தவர்களுக்கு விளங்காமல் இருப்பதால் விந்தையான ஒன்றாகத்தான் இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். இதன் அடிப்படையில் ஒரு நாவல் என்பது நகைச்சுவை கூடிய ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்க வேண்டும் என்றுதான் இந்த நாவலை எழுதி இருக்கிறார் எழுத்தாளர். உண்மையில் இது தொடர் கதையாக ஆனந்த விகடனில் வெளி வந்து, வந்த நேரத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாசிக்கத் தொடங்கியவுடன் தான் ஒரு சில விசயங்கள் புரியத் தொடங்கின.
ஜான வாசம் காசி யாத்திரை நலுங்கு
என்ற வார்த்தைகள் மற்றும் அவை திருமணம் சார்ந்த சில முக்கிய சடங்குகள் குறித்தானவை என்று அறிய வந்தபோது, இம்மாதிரியான வார்த்தைகளையோ சடங்குகளையோ நாம் கேள்விப்பட்டதில்லையே என்று தோன்றியது. இது நாம் அறியாத ஒரு சமூகத்தின் திருமண சடங்கு முறை என்பதும் தெளிவாகியது. தமிழ் பிராமண சமூகத்தின் திருமணம் பற்றிதான் இந்த நாவல் உள்ளது.
பிற சமூக வழக்காறுகள் அல்லது அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பதால் விருப்பமுடனேயே தொடர்ந்து படித்தேன். ஆனால் சில இடங்களில் மேட்டிமைத் தொனியில் தங்களைப் பற்றியும் அதே நேரம் கிண்டல் தொனியில் வேறு ஒரு சமூகத்தைப் பற்றியும் (நரிக் குறவர் சமூகம்) எழுதியிருந்தது மிக நெருடலாக இருந்தது.
மற்றபடி நகைச்சுவை என்று அவர் கருதி எழுதியிருந்த நிறைய விசயங்கள் cringe வகையைச் சார்ந்ததாகவே இருந்தது.
மற்றபடி, தமிழ் பிராமண சமூகத்தார் அல்லது அவர்கள் பழக்க வழக்கங்களை தெரிந்தார் இந்த நாவலை வாசிக்கும் போது குறிப்பிடப்படும் சில சடங்குகள் எளிதாக புரியலாம். மற்றவர்களுக்கு அமெரிக்கர்களுக்கு தோன்றியதைப் போலவே விந்தையாகத் தோன்றலாம்.
I want everyone who knows Tamil to read this, but certain aspects make me extremely uncomfortable. Still, I want them to read it.
Very mixed feelings!
The satire and Saavi's writing style are brilliant, but some parts of the book haven't aged well. You'll notice it when you read it. If you don't, then you might want to watch Mari Selvaraj and Pa Ranjith's movies to understand where the issue lies.
I also read 'England England' by Julian Barnes, and I couldn't believe I finished it. But I get it now, satire can be funny when read in a language you're comfortable with. I'm a slow reader in Tamil, but I enjoy it immensely because I savor each word.
I should read more Tamil books.
I've had this book for three years and often gifted it to friends before their weddings. Partly, it was to gauge how they'd react to the humor related to wedding customs. Trust me, I hadn't read it before gifting. Now, I'm unsure if I should gift it, but I liked reading it, despite some parts not sitting well with me.
I'm giving it 5 stars mainly for the way Saavi brings to life the idea of an American wealthy woman interested in learning about South Indian Brahmin wedding customs, considering that many Americans might not even know much about their own country's diverse cultures.
This book should be read in the current times, but with a critical heart, acknowledging the problematic aspects that are still present. It can't be dismissed as a blast from the past.
வாஷிங்டனில் திருமணம். இப்புத்தகம் 1963 களில் ஆனந்த விகடனில் தொடராகவும், 90 களில் நாடகமாக வந்துள்ளது. சாவி அய்யா இப்புத்தகத்தில் மிகவும் அருமையான நகைச்சுவையும், அற்புதமாக தமிழ் கலாசாரங்களையும் கையாண்டு உள்ளார்.
மிஸஸ் ராக் ஃபெல்லர் என்ற கலியுக அலைமகள் , தஞ்சாவூரில் கண்ட திருமணத்தை போல வாஷிங்டனில் நடந்தால் என்ன ?.. நடத்தியே தீருவேன் என்று அவர் ஆரம்பித்த கதை தான் இந்த திருமணக்கதை.. கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் முக்கியமே!... வாஷிங்டன்னிற்கு போகாத சாவி அய்யா எப்படி அருமையாக அந்த அந்த இடங்களை பார்த்தார் போல் எழுதியுள்ளார் என எழுத்தாளர் சிவசங்கரி கூறியுள்ளார்.. பாவம் பஞ்சு சார் என்று கூறும் அளவிற்கு ஒரு மனிதன் இவ்வளவு வேலையை பஞ்சாக செய்வார் என வியக்கும் அளவிற்கு பறந்து பறந்து செய்து காண்பித்தார் ... சிறந்த பொழுதுப்போக்கு புத்தகம்... மிகவும் மனதில் மகிழ் உணர்வு மட்டுமே!. நன்றி சாவி அய்யா 😇😍
My mom bought this hilarious Tamil comedy book for me when we visited book exhibition(2008), she said they published this story in Vikatan magazine and she used to save all the pages from it and bind it to read in her childhood days. Though it’s an age old story book and I read decades back, still it’s so interesting to read again, it depicts about the traditional South Indian Iyer marriage with loads of laughter in every page. You turn every page either by giggling or laughing out loud. Very nostalgic read!
This book is a book that could have been perceived funny half a century back. Reading it now when the world has moved on a lot didn’t make it a great read to me. However- the author deserves credit for being able to picture paint a traditional South Indian wedding in Washington when US wasn’t as accessible as it is today, though overly exaggerated.
There were a few places in the book that was nostalgic in the sense that it made me feel like, ah Thatha might have cracked this joke.
One and only SAVI can write a novel like this. Reading this I actually witnessed the south Indian marriage at Washington DC. I forget myself as though I am in the Kalyana mantapam literally. I strongly recommend the young gen to read and laugh with enjoyment.
One and only SAVI can write a novel like this. Reading this I actually witnessing an event like the south Indian marriage at Washington DC. I forgot myself as though I am in the Kalyana mantapam literally.
Banal humor. Not for readers uninterested in fancy ritualisms.
Puns, though funny in some places, look to be desperate attempts in most other places.
Mocking of an indigenous community from TN (Narikurava) is totally uncalled for, distasteful, and it makes one ponder how low an author has to go to flatter one community, by also belittling other.
ஒரு கலகல பயணம் இந்த வாஷிங்டனில் திருமணம். Perfect magazine and stage drama material. புத்தகமான இருந்தால் ஒரே நாளில் முடித்து விடலாம். நான் பொறுமையாக காத்திருந்து ஒலிவடிவில் கேட்டதனால் நேரமாகிவிட்டது. இப்போ நீங்கள் ஒரே மூச்சாக கேட்கலாம், இங்கே: https://www.youtube.com/playlist?list...
Hilarious story that highlights the remarkable features and specialities of South Indian weddings! Humorously written, the story is all about a south Indian wedding in America and the reaction of the Americans to the activities of these South Indians. I loved reading this book a lot! This is one of the books that never becomes boring even if it's read more than once.
Humorous and Imaginative story.. Good narration... Not boring... Also looks like travelogue, and gives picture of Washington..... and also gives picture of South indian Brahmins marriage