இன்று அம்மாவாசை அன்று ஒவ்வொரு கோவில்களும் நிரம்பி வழிகின்றது. அய்யர் முன்னால் பெரிய வரிசை நின்று கொண்டே இருக்கின்றது. அய்யரும் மிகவும் சுருக்கமாக மந்திரம் சொல்லி வருகின்றவரை அவர்கள் விரும்பும் நேரத்திற்கு ஏற்ப திருப்தி செய்து அனுப்பி விடுகின்றார். அவருக்கும் வேறு வழி தெரியவில்லை. அவரைக் குற்றம் சொல்ல வாய்ப்பு இல்லை. சடங்கு, சம்பிரதாயம் என்றாலும் நம் மனதோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அது இறை நம்பிக்கையாக இருந்தாலும் மற்ற வழிபாட்டு முறைகளாக இருந்தால் அடுத்தவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் எப்போதும் செய்வதே இல்லை. இங்கு எப்போதும் பணம். எல்லாமே பணம். மனிதர்கள் என்பவர்கள் பணமாகத்தான் காட்சியளித்தனர்.