மணிகர்ணிகாவிற்கு பிறகு ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதின கதை கண்ணாடி நெஞ்சங்கள். ஒவ்வொரு சராசரி பெண்ணின் கதை இது..இப்படியான பெண்களை தினந்தோறும் நாம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்...இங்கு தனது கனவுக்காக குடும்பத்தை விட்டுக்கொடுக்கும் பெண்களை விட,தனது குடும்பத்திற்காக கனவை விட்டுக்கொடுக்கும் பெண்கள் தான் அதிகம்...அப்படியான ஒரு பெண்ணான சந்திராவும் தனது கணவனிற்காக கனவை விட்டுக்கொடுக்கிறாள்...அவளின் கனவு கைக்கூடியாதா?அவளின் உடைந்த நெஞ்சம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா என்பதை கதையினை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.