நினைக்க முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை! ஞானிகளின் பூமியாகத் திகழும் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதி வடிவமாகக் காட்சி தருகிறார். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள மலை 'அருணாசலம்ய எனப்படுகிறது. அதாவது 'அருள் வழங்கும் மலை' என்பது பொருள். இம்மலையே அக்னி லிங்கமாகப் போற்றப்படுவது சிறப்பாகும்.
புத்தகம்: திருவண்ணாமலை எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: திருமகள் நிலையம் பக்கங்கள்: 192
💥 அரவிந்தன் தன் குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார். ஆன்மிக விஷயத்தில் நம்பிக்கை இல்லாதவர் , எல்லா விஷயத்திற்கும் அறிவியலில் தீர்வு காண நினைப்பவர்.
💥 தனது மகன் மூலம் சித்தர் பாடலும், அஷ்டமாசித்துகளும் அறிமுகம் ஆனது. முதலில் நம்பாமல் இருந்தவர், நேரில் பார்த்த பிறகு நம்பிவிட்டார்.
💥 நடேசன் பெரிய கோடீஸ்வரரின் மகன். பணம் மீது அதிக நாட்டம் இல்லாது, எளிய வாழ்க்கை மீது பற்று கொண்டவர். இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டது திருவண்ணாமலையில். பிறகு என்ன ஆனது என்பதே கதை.
💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - பத்தாவது புத்தகம் இது.
💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி