What do you think?

சொம்புநீர்ப்பூ
நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெரும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது, நினைவேக்கத்தை மொழியில் வரையும்போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் நிலைகுத்தி நிற்கும் விரிசிறகு பட்சியெனவும், உணர்வுச்சத்தை தளர்த்துகையில் ஒரு பாராசூட் தரையிறங்குவது போன்று ஒரு நடை நர்சிம்மிற்கு வாய்த்திருக்கிறது. இதுவரைக்குமான பிரதேச அழகியல் மின்னும் நிலப்பரப்பிலிருந்து உன்னி இந்தக் கதைகள் பிறிதொரு உளவியல் வெளியில் சஞ்சாரம் செய்வதை ஒரு தொடர்வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு கணத்தையும் உற்று நோக்கல், துல்லிதமான விவரணைகள் வழி நம்பகத்தை உருவாக்குதல், மனோரதங்ககளை பிசகாமல் வார்த்தைப்பாடு செய்தல் போன்றவை இக்கதைகளின் பலம் என்று தோன்றுகிறது.
82 pages, Paperback
Published May 1, 2025
About the author
நர்சிம்
12 books5 followersசொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
90-களின் மதுரையை, மாந்தர்களை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012), பைத்தியக்காலம் (2017), மதுரைக் கதைகள் (2017) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் அலப்பறை (2017) என்கிற நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன.
உயிருதிர்காலம் என்ற சிறுகதை, நவீன விருட்சத்தால் வெளியிடப்பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது.
‘அய்யனார் கம்மா’ என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.
மனைவி மற்றும் ஒரு மகன் - வசிப்பது சென்னை அடையாறு.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.