Jump to ratings and reviews
Rate this book

கடல் கொண்ட தென்னாடு

Rate this book
வசனத்துறையில் தனக்கென்று ஒரு தனிப்பாணி உண்டு, சமூகக்கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு என்று கூறும் கண்ணதாசன் இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த பச்சைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையைக் கடல்்கொண்ட தென்னாடு என்ற நாவலில் சித்தரித்து உள்ளார்.தென்னாட்டைக் கடல் கொண்டது. ஆனால் கவிஞரின் தென்னாடு காலத்தால் அழியாதது. அது குறித்து சமூகக் கண்ணோட்டத்தில் ஆய்கிறது இக்கட்டுரை.

280 pages, Paperback

6 people are currently reading
119 people want to read

About the author

Kannadasan

116 books337 followers
Kannadasan (24 June 1927 – 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language. Frequently called Kaviarasu (English: King of Poets), Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics apart from 6000 poems and 232 books,[1] including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (16%)
4 stars
8 (33%)
3 stars
7 (29%)
2 stars
2 (8%)
1 star
3 (12%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
November 22, 2014
பாண்டியன் மகன் வில்லாளனும் அறுவா நாட்டு இளவரசி பூம்பாவையும் அந்நாளைய மணமுறைப்படி மணம் புரிகின்றனர்.
இளவரசனைக் காதலித்த நீலவிழி பாண்டிய நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த எபிரேய அரசன் செமோசியை மணக்கிறாள். ஆனால் அவள் மனதில் வில்லாளனே இருக்கிறான்.மணிச்சரம் தீவில் அம்ருதா என்ற ஒரு இளம்பெண் ஆவியாக வாழ்கிறாள். நீலவிழி அம்ருதாவின் உதவியுடன் பூம்பாவையையும் வில்லாளனையும் பழி வாங்குகிறாள். அவள் வஞ்சகத்தைப் புரிந்து கொண்ட செமோசி அவளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி விடுகிறான்.அங்கு அவள் மரண தண்டனை அடைகிறாள். இறுதியில் கடல் கோள் வருகிறது. மன்னனும் மக்களும் தென்மதுரையை விட்டு வெளியேறுகின்றனர். பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் கடலுள் மூழ்கின. நீலவிழி வில்லாளன் இருவர் ஆவியும் கடலின் மீது உலவுகின்றன.இதுதான்்கடல்கொண்ட தென்னாட்டின் கதைப்பின்னல் . இதனூடாக கண்ணதாசன் குமரிக்கண்டத்தின் வரலாற்றையும் பிணைத்துக் காட்டுகிறார்.

வரலாற்றின் நோக்கம் நாவலிலேயே முடிவு அடைகின்றன. ஏனென்றால் சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை, பூகோள அமைப்புகளை, சின்னஞ்சிறு விஷயங்களை நாவல் சொல்வது போல சரித்திரம் சொல்வது இல்லை என்பர். இந்த அடிப்படையில் கடல் கொண்ட தென்னாட்டை ஆராயலாம்.

லெமூரிய பழந்தமிழர் வாழ்வில் திறந்த உடல் பற்றிய வெட்க உணர்வு கிடையாது. குளிக்கும் இடங்களில் இருபாலரும் ஆடையின்றிக் குளிப்பதிலும், நீந்தி விளையாடுவதிலும் அருவருப்பு அற்றவராய் இருந்தனர் என்னும் பழந்த்தமிழ் பண்பாட்டை நாவலில் புகுத்த பூம்பாவை -வில்லாளன், அபிராசி - நீலவிழி ஆகியோரின் நீர் விளையாடலில் புகுத்தியுள்ளார் கண்ணதாசன்.


இந்து மாக்கடலில் மூழ்கி மறைந்த கண்டத்தைப் பற்றிய ஆய்வு பல்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டது. குமரிக்கண்டம் லெமுரியாக்கண்டம், கோண்டுவானா என்னும் முப்பெயர்களால் இப்பகுதி அழைக்கப்பட்டது. இத்தென்பகுதியில் குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகள் இருந்தன.

தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு இவையனைத்தையும் ஆண்டவன் நிலந்திரு திருவிற்பாண்டியன்.

கண்ணதாசன் இக்கதையைத் தேர்வு செய்ததற்குக் காரணம், தமிழ்நாட்டில் சிலர் தமிழன் வரலாற்றை மறைக்க முயன்று, லெமூரியாக் கதைகள் கட்டுக்கதைகள் என்றும் வாதித்தனர். அதற்கு கடல்கோள், ஏற்பனை, ஏழ்தெங்கம், பன்மலைய்டுக்கம்,

பஃறுளியாறு, குமரியாறு, நிலந்திரு திருவிற்பாண்டியன் போன்ற மிகச்சில உறுதியான தகவல்களோடு சற்று கற்பனையைச் கூட்டி கதையை நகர்த்தியுள்ளார். இக்குறிப்பை அவரது ’எனது சுயசரிதம்’ என்ற நூலில் காணலாம்.
Profile Image for Mohan.
50 reviews1 follower
August 6, 2020
பூமி படத்திலிரிந்து மறைந்து போன ஒரு நாடும், நாகரீகமும், அவர்களின அரசியல், பழக்க வழக்கத்தை வைத்து எழுதப்பட்ட ஒரு கதை.
Profile Image for Bala Chandar.
3 reviews
Read
October 3, 2019
Legendary Kannadasan takes us back in time. So immersive and a great book, I recommend it to every one.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.