ஒரு புது மனிதனின் விஜயம் எத்தனை மாற்றங்களை கொண்டு வருகிறது? பிரபஞ்சம் சிலரை அப்படித்தான் நாம் நினைக்காத நேரம் நம்மிடம் அனுப்பி வைக்கும், சிலரை பிரித்து வைக்கும். ஆனால் தேவையான நேரத்தில் தேவைப்படுகின்ற நேயத்தைத் தவறாது நமக்குத் தந்து விடும். பிரபஞ்சத்தில் சிலர் பிரியத்தின் ‘தடாக’மாய் இருப்பார்கள். சிலருக்குப் பிரியத்தின் தாகமிருக்கும். தடாகமாக இருப்பவர்களையும் தாகமாக இருப்பவர்களையும் பிரியமும் பிரபஞ்சமும் சில நேரம் சரியாக சேர்த்து வைத்து விடுகிறது.
வாழ்க்கை அப்படித்தான், சிலர் வருவார்கள், போவார்கள். சிலர் பாடமாக இருப்பார்கள், சிலர் வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக இருப்பார்கள். எப்படியாகினும் வாழ்க்கையும் சரி வாழ்தலும் சரி சக மனிதன