அன்னை கஸ்தூரிபாய் மகளிர் அநாதை இல்லம். அந்த ராத்திரி பதினோரு மணி நேரத்தில் அசாத்திய பரபரப்போடு இருந்தது. விடுதி வாசலில் போலீஸ் ஜீப் நின்றிருந்தது. உள்ளே இன்ஸ்பெக்டர் விடுதித் தலைவி சாரதாம்பாளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். “இந்த மாசத்துல இது இரண்டாவது சம்பவம் இல்லையா?” “ஆமா... இன்ஸ்பெக்டர்... இருபது நாளைக்கு முன்னாடி ஒரு பெண் காணாமே போனதைக் குறித்து ஒரு புகார் கொடுத்திருந்தோம். அந்தப் பெண்ணையே இன்னும் கண்டுபிடிக்கலை... அதுக்குள்ளே இன்னொரு பெண்ணும் மாயமா மறைஞ்சுட்டா...” “காணாமே போன பெண்ணோட பேரென்ன...?” “ரஞ்சிதா...” “வயசு...?” “பத்தொன்பது...” “போட்டோ இருக்கா...?” சாரதாம்பாள் மேசை டிராயரைத் திறந்து - பழுப்பு நிறக் கவரில் இருந்த போட்ĩ