வயலட் நிறத்தில் சூரியக் கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கறுப்பான கிராஃபைட் பூமி. சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில் வாகனங்கள் அல்ட்ராஸானிக் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தன. ஒழுங்கீனமான அகல உயரங்களில் செம்பழுப்பு நிறக் கட்டிடங்கள் ஆங்காங்கே தென்பட்டன. போரா என்கிற அவன் தன்னுடைய கை கால் உடம்பைத் தனித் தனியாய்க் கழற்றிப் போட்டு இளஞ்சூடான திரவத்தில் ஊற வைத்து செல்ஃப் மஸாஜ் எடுத்துக் கொண்டிருந்த அந்த மைக்ரோ விநாடியில் - அவனுக்கான ஏர் பாக்கெட் தகவல் வந்தது. மெஸேஜ் அரைவல் அலர்ட் அவன் காதை அறையவே திரவத்தைவிட்டு அத்தனை அவயவங்களையும் விடுவித்துக் கொண்டு தன்னைத்தானே மாலிக்யுலர் அசெம்ப்ளிங் பண்ணிக் கொண்டான்.