கடைசி பந்து வீசப்பட்டது. மைதானமே கொண்டாட்டத்தில் மூழ்கியது.
“CSK வெற்றி!” என்று அறிவிப்பாளர் கூச்சலிட்டார்.
வானத்தில் ஒளி பட்டாசுகள் ஒளிர்ந்தன. கூட்டம் மஞ்சள் கொடிகளை அசைத்து தோனியின் பெயரை கோஷமிட்டபடி எழுந்து நின்றன.
நான் காவ்யாவை என் கைகளில் ஏந்தி நின்றேன். வெற்றியின் பவனியை காண அவளை தூக்கி தோளில் வைத்துக்கொண்டேன். அவள் மகிழ்ச்சியுடன் சிரித்தாள், தன் சிறிய கைகளைத் தட்டினாள்.
லதா என் அருகில் நின்று, பிரகாசமாக சிரித்தாள். அவளுடைய கண்கள் பிரகாசித்தன. "சூப்பர் மேட்ச் இல்ல...." என்று அவள் கிசுகிசுத்தாள்.
அப்போதுதான், எங்கள் பின்னால் இருந்து, ஒரு உரத்த ஆரவாரம் எழுந்தது. ரசிகர்கள் கூட்டம் துள்ளி குதித்து பெரிகேடை முன்னோக்கித் தள்ளியது.