நாயகனின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட காயத்தில் தனக்குள்ளேயே இறுகி போய் வாழும் நாயகனின் வாழ்க்கையில் அவன் விருப்பமின்றி நுழைந்து அவனை விரும்பி கைபிடிக்க துடிக்கும் நாயகியின் காதலை எனது பாணியில் நகைச்சுவை கலைந்து உருவானதே இந்த "நேசிப்பாயா" ஆகும்.
கதையிலிருந்து ஒரு குட்டி டீசர்
“ஏய், நான் சொல்றதைக் கொஞ்சமாவது கேளுடி” என்றான் அஸ்வின்.
“மாட்டேன்! கேட்க மாட்டேன்! கேட்கவே மாட்டேன்!” என்று அவனிலிருந்து விடுபட்டு வெளியே வந்தவள், கண்கள் கலங்க, “எவ்ளோ அழுதேன் தெரியுமா? எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? எவ்ளோ நாள் தூங்காம இருந்தேன் தெரியுமா?” என்று அஸ்வினின் மார்பில் அடித்துச் சொன்னாள்.
அவள் கைகள் இரண்டையும் மேலே தூக்கிப் பிடித்தவன், அவளை அப்பட