இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது' எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக' எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்தனை? கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஜப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்தநூல் விவரிக்கிறது. நெகிழவைக்கும் சம்பவங்களும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களும் இனைந்து தமிழில் முன்மாதிரியாகச் சாத்தியபட்டிருக்கும் இந்தநூல் ஆசிரியர்களும் மாணவர்களும் வாசித்தே தீர வேண்டிய பேரனுபவம்.
கல்வி மனிதனுக்கு எத்துணை அவசியமோ அத்துணை அவசியம் அதை கற்பிக்கும் ஆசிரியர்கள். இப்புதகம், அந்த ஆசிரியருள் எவர் மாணவர்களை கவர்துள்ளனர், ஏன் கவரப்படுகின்றனர் என்பதை ஒரு சிறிய ஆய்வாக, ஆய்வி பதிவேடாக அமைகிறது.
இப்புத்தகத்தில் எம்மை கவர்ந்த சில தருணங்கள்: - "சிறந்த ஆசிரியர்" யென பரிசு பெற வரும் முதல் ஆசிரியர் வரலாறு பாடம் கற்பிக்கும் ஒரு 'பார்வையற்ற' மகான் ! - பரிட்சையின் போது மாணவர்களுக்கு விடி(யா) காலை 3மணிக்கு தன் கையால் "டீ" போட்டுக்கொடுத்த ஆத்மா! - வகுப்பறையில், ஒரு மாணவன் தூங்கினால் தான் அழுத ஆசிரியர்! என இந்த பட்டியல் நீளும்...
என் போன்ற "ஆசிரியர் ஆகவேண்டும்" என்ற எண்ணம் கொண்டவர்கள், இந்த புத்தகத்தை படித்தால் நமக்கு பல முன்மாதிரிகள் கிடைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!