நாயகன் பகீரதன் நாயகி மின்மினி. 2024 ஆம் ஆண்டில் நடந்த காதல் காலம் நாவல் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை.
சதுரங்க விளையாட்டு வீரனான பகீரதன், உலக நாயகன் பட்டம் பெற வேண்டும் என்கிற தன் கனவை நோக்கிய பயணத்தின் முக்கிய அங்கமான சதுரங்க உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ரஷ்யா செல்கிறான். அங்கு நடந்த எதிர்பாரா நிகழ்வால் மனதளவில் பாதிக்கப்பட்டவன் படுமோசமாகத் தோல்வியுற்று நாடு திரும்புகிறான். திரும்பும் பக்கம் எல்லாம் கிண்டலும் கேலியும் காணக்கிடைக்க அதில் இருந்து தப்பிப்பதற்காக கனவு இல்லமான சதுரங்க இல்லத்தைக் கட்டி சாணக்கியன் என்கிற பெயரோடு அஞ்ஞாத வாசம் இருக்கிறான்.
நாயகி மின்மினியின் வரவு அவன் வாழ்வில் பல மாற்றங்களை உண்டாக்குகிறது.