“உங்க தலைவர் அனுப்பி வெச்சா கூட நீங்க போக மாட்டீங்க போலிருக்கு.” “அப்பா ப்ளீஸ்...” என்றாள் சின்னவள். “சான்சே இல்லை. இன்னும் பத்துநாள்ல சட்டசபை கூடுது. பட்ஜெட்டை விவாதத்துக்கு எடுத்துக்கப் போறாங்க. அப்போ நான் அங்கே இருந்தே ஆகணும்.” அமைச்சரின் மனைவி குறுக்கிட்டுச் சொன்னாள். “உங்கப்பாகூட முப்பது வருஷத்தைக் கழிச்சிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர் கட்சி வேலையை எல்லாம் விட்டுட்டு பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் கிளம்பி வந்ததே அபூர்வமான விஷயம். கட்சி, மீட்டிங், தொண்டர்கள்... இதிலேயே இவரோட சேர்ந்து என்னோட வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு... ஏதோ உங்க புண்ணியத்தில் இப்போ நாலு பக்கம் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்...